
சபை மனம்திரும்பாத பட்ச்சத்தில் என்னென்ன சம்பவிக்கும்?

சபை மனம்திரும்பாத பட்ச்சத்தில்!
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 2:5
நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 2:16
அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன், தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. வெளிப்படுத்தின விசேஷம் 2:21)
இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, வெளிப்படுத்தின விசேஷம் 2:22
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன், அப்பொழுது நானே உள்ளந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும், அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:23
ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன், நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய். வெளிப்படுத்தின விசேஷம் 3:3
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. வெளிப்படுத்தின விசேஷம் 3:19
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 3:16
ஒரு காலத்தில் மனம் திரும்பி கிறிஸ்துவை ஏற்று கொண்டு வாழும் வாழ்வில் இன்றைய குறைகள் கூட மனம்திரும்புதலுக்கு சபையை அழைக்கிறது.
செலின்