
சபை ஒரு வணிக நிலையமாக மாறும்போது எப்படியிருக்கும்? தற்பரிசோதனைக்காக மட்டும்

சபை ஒரு வணிக நிலையமாக மாறும்போது
1) பாஸ்டர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளைப் போல (CEO) போல செயல்படுகிறார்கள்.
2) உறுப்பினர்கள் வாடிக்கையாளர்களாக மாற்றப்படுகிறார்கள்.
3) மற்ற சபையார் போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
4) சுவிசேஷம் சந்தை வியாபார அளவிற்கு தரம் குறைந்துள்ளது.
5) சபைகளை நிறுவுதல் இயக்க பிரிவுகள் (Franchise) போன்று செயல்படுத்தப்படுகின்றன.
6) எண்ணிக்கை வெற்றியின் படியாக அளக்கப்படுகிறது.
7) செபமும் வேத கற்றலும் சூத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளன.
8) மறுமலர்ச்சி (Revival) ஒரு சில நாட்கள் நிதி திரட்டும் திட்டமாக குறைக்கப்படுகிறது.
9) பிரசங்கிப்பது ஊக்கமளிக்கும் (Motivational Speech) பேச்சு போலாகிவிட்டது. சபை ஆராதனையானது, கச்சேரி முழுவதும் அமென், நான் பெற்றுக்கொள்கிறேன் என்று கத்துகிற நிகழ்ச்சியாகிவிட்டது.
10) துதி ஆராதனை ஒரு செயல்திறனாக (Performance) மாற்றப்படுகிறது. சிறந்த நடிகர்கள் ஆராதனை நாயகர்களாய் (Worship Leaders) உயர்த்தப்படுகின்றனர்.
11) கடவுளின் ஆவி உணர்ச்சிவத்திற்கு (Emotionalism) குறைக்கப்படுகிறது. ஹிப்னாஸிஸ் மற்றும் பரபரப்பைத் தவிர (Hypnosis & sensationalism) கடவுளின் உண்மையான வல்லமை இல்லை.
12) பரிசுத்தவான்கள் சீர்பொருந்துவதற்கு பதிலாக மகிழ்விக்கப்படுகிறார்கள்.
13) கிறிஸ்துவின் சீடர்கள் கைப்பாவையாகிவிட்டார்கள் (Puppets).
14) உயிருள்ள உடலாய் இருந்த சபை தற்போது உயிரற்ற சடலமாய் மாறிவிட்டது.
15) தேவனுடைய ராஜ்யம் முன்னேற்ச்சி அடைவதற்கு பதிலாக ஒரு தலைவரின் ராஜ்யம் கட்டப்படுகிறது.
16) பாஸ்டர் சூப்பர்மேன் ஆகிறார். இயேசு கிறிஸ்து மற்றொரு மத நபராக குறைக்கப்படுகிறார்.
பிரியமானவர்களே, கிறிஸ்தவத்தின் இவ்வித அமைப்பின் கீழ் இருந்தால், நீங்கள் ஏற்கனவே ஒரு வழிபாட்டு குழுவில் இருக்கிறீர்கள் மாறாக இயேசு கிறிஸ்துவின் சபையில் அல்ல. தாமாதம் ஆகிவிடும்முன் அதிலிருந்து வெளியேறுங்கள் !!!
மேலே நான் முன்னிலை படுத்தியது எல்லாம், இயேசுவையே இப்படி கேட்க வைத்தது: “மானிடமகன் வரும்போது மண்ணுலகில் விசுவாசத்தை காண்பாரோ?”. (லூக்கா 18:8)
— படித்தேன், பாரத்தினால் பகிர்கிறேன்.