பயன் என்ன? நாம் இன்று சிந்திக்கக்கூடியவை

இதயம் ஆழமற்று இருக்கும்போது ஆழ்ந்த அறிவினால் பயன் என்ன

தேவ சமூகத்தில் குறைவாக இருக்கும்போது மனிதர் முன்பாக நிறைவாய் காணப்படுவதால் பயனென்ன

அகத்திலும் ஆத்மாவிலும் அழுக்கு நிறைந்திருக்கும் போது உடலை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வதால் பயன் என்ன

ஆத்துமா மாம்ச சிந்தையுடன் இருக்கையில் மார்க்க பக்தியினால் பயனென்ன

ஆவியில் பலவீனமாய் இருக்கும்போது மாம்ச பலத்தினால் பயனென்ன

ஆவிக்குரிய வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடும் போது உலக செல்வத்தினால் பயன் என்ன

நரகத்தில் ஒருவனைப் பற்றி தெரியாதிருக்கும் போது சமூக செல்வாக்கினால் அவனுக்கு பயன் என்ன

இக்குறைகளை எல்லாம் ஜெபம் நிறைவாக்கும் L ரேவன்ஹில்