இந்த lock down முடியும் போது!

சிலர் எதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

சிலர் நோவாவை போன்று பேழையை விட்டு வெளியே வருவார்கள்.

சிலர் மோசேயை போன்று வானந்திரத்தை விட்டு வெளியே வந்து ஜனத்தை விடுதலை ஆக்குவார்கள்.

சிலர் யோசேப்பை போன்று சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்து தலைகள் உயர்த்தப் படுவார்கள்.

சிலர் எகிப்தை விட்டு வெளியே வந்து கானனுக்கு நேராக வருவார்கள்.

சிலர் சூரைச் செடியை விட்டு வெளியே வந்து அநேகரை அபிசேகம் செய்வார்கள்.

சிலர் தாவீதை போன்று காட்டில் இருந்து வெளியே வந்து கோலியாத்தை வெற்றி கொண்டு ஆளுகைக்கு நேராக உயர்த்தப் படப்போகிறார்கள்.

சிலர் யோனாவை போன்று மீனின் வயிற்றில் இருந்து வெளியேறி மனம்திரும்புதலை பிரசங்கிக்க போகிறார்கள்.

சிலர் அக்கினியில் இருந்து வெளியே வந்து ராஜியங்களை ஆளப் போகிறார்கள்.

சிலர் தானியேல் போன்று சிங்க கெபியில் இருந்து வெளியே வந்து பரலோக ராஜவே உயர்ந்தவர் என்று நாவுகள் அறிக்கையிடும் சாட்சியாக மாறப் போகிறார்கள்.

சிலர் நெஹமியா எஸ்ரா போன்று அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறி அலங்கத்தை ஆலயத்தை கட்டும் வேலையை செய்யப் போகிறார்கள்.

சிலர் கிறிஸ்துவை போன்று கல்லறையை விட்டு வெளியேறி ஜீவனின் சாயலாக் அநேகருக்கு சாட்சியாக மாறுவோம்.

சிலர் 120 பேர் காத்திருந்து அபிஷேகத்தை பெற்றதை போன்று அற்புத அடையாளங்கள் செய்கிறவர்களாக வெளியே வருவார்கள்.

இன்னும் சிலர் அப்போஸ்தலர்கள் போன்று தைரியமாக சுவிசேமாக வீறு கொண்டு எழப் போகிறீர்கள்.

எனவே நாம் இந்த சூழ்நிலைகளை குறித்து சந்தேகப்பட வேண்டாம், சோர்ந்து போக வேண்டாம், நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து உணர்ந்து மனம் திரும்பி முன்னேறுவோம். நாம் துரத்தப் படுகிறவர்கள் அல்ல சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை அறிவோம். கர்த்தரை நம்புவோம். வார்த்தையை சாருவோம், கிருபையை பற்றிக்கொள்வோம். விடுதலை பெறுவோம். கர்த்தர் நல்லவர்.

செலின்