
1) கர்த்தரை துதிப்பது நல்லது – சங் 54-6
2) தேன் (வேத வசனம்) (சங் 19-10) நல்லது – நீதி 24-13
3) வேத வசனத்தை கவனிப்பது நல்லது – 2 பேதுரு 1-19
4) கிருபை நல்லது – சங் 63-3
5) கிருபையினால் இருதயம் ஸ்திரப்படுவது நல்லது – எபி 13-9
6) தேவனுடைய ஆலயத்துக்கு செல்லும் நாள் நல்லது – சங் 84-10
7) நீதிமானுக்குள்ள கொஞ்சம் நல்லது – சங் 37-16
8) உபத்திரவப்பட்டது நல்லது – சங் 119-71
9) ஞானம் நல்லது – நீதி 8-11
10) பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப் பார்க்கிலும், சிநேகிதத் தோடிருக்கும் இலைக் கறியே நல்லது – நீதி 15-17
11) நல்ல விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது – கலா 4-18
12) ஒரு காரியத்தின் துவக்கத்தை பார்க்கிலும் முடிவு நல்லது – பிரச 7-8
13) மறைவான சிநேகிதத்தை பார்க்கிலும் வெளிப்படையான கடிந்து கொள்ளுதல் நல்லது – நீதி 27-5
14) கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருப்பது நல்லது – புலம் 3-25
15) இளம் பிராயத்தில் நுகத்தை சுமப்பது நல்லது – புலம்பல் 3-27
R.சந்திரசேகரன்.