
அரசு நிர்வாகத்தை வலுயூட்ட வேண்டிய அரசாங்கம், இந்தியாவின் கல்வி, மருத்துவம், அறிவியல், விவசாய வளர்ச்சியை பெருக்க வேண்டிய அரசாங்கம், அவற்றை எல்லாம் விட்டு விட்டு, சமுதாயத்தில் ஒரு சாராரை முக்கியப் படுத்தி, மதவெறியை தூண்டி விட்டு, மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்லி எத்தனையோ சமூக நல அமைப்புகளின் FCRA போன்றவற்றை cancel செய்து, ஆக்கப்பூர்வமாக சிந்திக்காமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுத்த தீர்மானங்களின் அடிப்படையில் இன்று இந்த இக்கட்டான சூழலில் சமாளிக்க முடியாமல் திணறுவதை பார்க்கும் போது, இவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா, இவற்றை சாதரணமாக கடந்து போவதா என்பதை நாம் தான் நிதானிக்க வேண்டும்.
ஆனாலும் அப்படி கடந்து போக முடியாதே? என்ன செய்ய முடியும்? ஜெபித்தால் மட்டும் போதுமா? யார் சமாரியனாக செயல்பட முடியும்? யார் இந்த ஜனங்களின் காயத்தை கட்டி சத்திரத்தில் கரை சேர்ப்பார்கள்? கிறிஸ்தவர்களாக நாம் என்ன செய்ய முடியும்?
A. திறப்பில் நிற்க வேண்டும்
ஒன்று சேர்ந்து ஜெபிக்க முடியும். நம்மை நாமே தாழ்த்தி, பாவ அறிக்கை செய்து, மனம் திரும்பி ஜெபித்தால் நிச்சயம் அதற்கு நிகர் வேறு ஒன்றும் இல்லை! சங்கிலி ஜெபம், தொடர் உபவாச ஜெபம், மற்றும் கர்த்தருடைய சுகமாக்குகிற வல்லமை கிரியை செய்யவும், அதன் மூலம் கிறிஸ்து வெளிப்படவும் போராடி ஜெபிக்கலாம். அப்படி ஜெபிக்கும் போது கர்த்தர் தருமம் வார்த்தைகளின் அடிப்படையில் விசுவாசம் வர்த்திக்க இன்னும் போராடி ஜெபிக்கலாம். ஏனெனில் இந்த காலத்தில் மௌனம் சரியாகாது.
B. நலம் விசாரித்து உதவி செய்ய வேண்டும்.
தனிப்பட்ட வட்டாரத்தில், குடும்ப வட்டாரத்தில், நண்பர் வட்டாரத்தில் உள்ளவர்களை நலமோடு விசாரித்து, அவர்கள் தேவையை அறிந்து அவர்களுக்கு உதவியாக செயல்படலாம். ஒரு பரிவான நம்பிக்கையின் விசாரிப்பு பெரிய ஆறுதலை கொண்டு வருமே! தன்னை ரோமாபுரியில் ஜாக்கிரதையாக தேடி, தனது விலங்கை குறித்து வெட்கப்படாமல் வந்த ஒனோசிப்போரை பவுல் மனதார வாழ்த்தி எழுதி இருக்கிறாரே! நாமும் கர்த்தர் இளைப்பாற இந்த நேரத்தை தந்து இருக்கிறார், அதினால் யார் எக்கேடு கெட்டு போனால் எனக்கு என்ன? நான் வேண்டுமென்றால் ஜெபிக்கிறேன் என்று மட்டும் இராமல் விமர்சனங்களை தாண்டி பிறரை நேசிக்க இந்த சூழலை நன்மையாக மாற்றலாமே!
C. கிறிஸ்தவ அமைப்புகள் தொண்டு நிலைகளை பெருக்க வேண்டும்
கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பெரிய சபை அமைப்புகள் கொண்ட ஸ்தாபனங்கள் இந்த நேரத்தில் தங்களுக்கு இருக்கிற resources ஐ தேச நலனுக்காக பயன்படுத்தலாமே! முஸ்லீம் மதத்தினர் அவற்றை செய்ய தொடங்கி விட்டனர். சிறுபான்மையினரை வதைத்தது சரியல்ல அவர்கள் தான் நமக்கு தேவை என்பதை இந்த இந்திய அரசியல்வாதிகள், தேச மக்கள் அறிய செய்ய வேண்டிய தருணம் என்பதை அறிந்தால் எவ்வளவு நல்லது. கர்த்தருடைய கிருபையால் அநேக கிறிஸ்தவ மருத்துவர்கள், மருத்துவமனைகள், கிறிஸ்தவ செவிலியர்கள், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் தங்கள் கடமையை சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்கள். அந்த அந்த ஏரியாவில் உள்ள ஸ்தாபன சபைகளும் ஊழியர்களும் இன்னும் கொஞ்சம் வேகமாக செயல்பட முடியுமே!
D. கலப்படமற்ற சுவிசேஷம் அறிவிக்க வேண்டும்
கடைசியாக இனி வருகின்ற நாட்களிலாவது மனம் திரும்புதல், மரணத்துக்கு பின் ஒரு வாழ்வு, கிறிஸ்துவின் சிலுவை, மரணம், உயிர்த்தெளுதல், வருகை போன்றவற்றை அன்பின் சத்திய சுவிசேசமாக அறிவித்து, பாடு பட்டு மரித்த இயேசுவின் நற்செய்தியை பரப்பி, அதற்கான அவசியத்தை உணர்ந்து நிலைநாட்டுவோம். சுவிசேஷம் கலப்படமற்றதாக இருக்கட்டும்.
ஜீவனை இழக்க துணிகிறவன் அதை திரும்ப பெற்று கொள்வான். ஆனால் ஜீவிக்க விரும்புகிறவன் தன் ஜீவனை இழந்து போவான். அது தான் சத்தியமாகி கொண்டு இருக்கிறது.
இந்த இருண்டக் காலத்தில் நாம் தான் வெளிச்சம் என்று இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார். இந்த சுவையற்ற வியாதிக்கு நாம் தான் உப்பாக இருக்க வேண்டும் என்று அவர் அறிந்து தான் அன்று நீங்கள் உலகிற்கு உப்பு என்று சொல்லி இருக்கிறார்.
செலின்