
யார் இந்த நிக்கோலாய் மதஸ்தர்?
Rev 2:15 அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்
Rev 2:6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு
பொருளடக்கம்
I “நிக்கொலா”என்பதின் அா்த்தம்.
II.இந்த நிக்கொலாவை குறித்து”ஆரம்ப கால” வரலாற்று ஆசிரியர்கள் என்ன கூறுகின்றார்கள்?
III.நிக்கொலாய் அல்லது நிக்கொலாய் மதஸ்தர் போதித்த தவறான போதனைகள்.”
IV.இந்த நிக்கொலா எப்படி பாதை மாறி தவறான உபதேசத்தை போதிக்க ஆரம்பித்தான்?
V.இவன் இந்த”தூ்உபதேசத்தை “போதிக்க காரணம் என்ன?
VI.கற்றுக்கொள்ளும் மிக ஆழமான சத்தியம் என்ன?
I “நிக்கொலா”என்பதின் அா்த்தம்.
ஆங்கிலத்தில் NICOLAOS இதற்கு கிரேக்க மொழியில் இரண்டு அா்த்தங்கள் உண்டு
1.GK: NIKAN – TO CONQUER ஜெயிக்கிறவன்.
2.GK: LAOS – PEOPLE. ஜனங்கள்.
அா்த்தம். ஜனங்களை ஜெயிக்கிறவன்.
அதாவது தவறான உபதேசங்களினால் ஜனங்களை ஜெயிப்பவன். ஒரு காலத்தில் பரிசுத்த ஆவியினால் ஜனங்களை ஜெயித்தவன் இன்று தூ்உபதேசங்களினால் ஜெயிக்கிறவனாய் மாறிபோனான். இதே அர்த்தம்தான் பிலேயாமுக்கும் (Balaam) (Revelation 2:14)
Heb: Bela – To conquer. Heb: Haam – the people ஜனங்களை ஜெயிக்கிறவன் இவனைக்குறித்து பிறகு பார்ப்போம்.
II.இந்த நிக்கொலாவை குறித்து”ஆரம்ப கால” வரலாற்று ஆசிரியர்கள் என்ன கூறுகின்றார்கள்?
THE LAST WESTERN CHURCH FATHER BISHOPISIDORE OF SEVILLE – என்ன கூறுகின்றார்.
இந்த நிக்கொலாய் மதத்தின் நிறுவனர் வேறுயாருமில்லை நிக்கொலா (அப் 6:5) இவருடைய சொந்த ஊர் அந்தியோகியா. ஆரம்ப கால சபையில் அப்போஸ்தலர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு மூப்பர்களில் இவரும் ஒருவர். இவர் புறஜாதி மார்க்கத்திலிருந்து யூதமார்க்கத்திற்கு மாறி பின்பு கிறிஸ்த்தவ மார்க்கத்திற்கு மாறியவர். இவா் அப்போஸ்தர்களின் மிக முக்கியமான 4 கட்டளைக்கு எதிராக செயல்பட்டான்.”(அப் 15:20) இவர் தன்னுடைய மனைவி அழகாய் இருக்கிறதினிமித்தம் தள்ளி யார் வேண்டுமானாலும் அவளை அனுபவிக்கலாம் என்று பொதுவாக்கினான் காரணம் மாம்சமானது ஒன்றுமில்லை அதை மிக தவறாக கடுமையாக பயன்படுத்தவேண்டும் என்று உபதேசித்தான்.” இவ்வறாக கூறுகின்றார். இதைதான் இயேசு வெளி 2:4ல் அவன் கிரியைகளை வெறுகின்றேன் என்று கூறுகின்றார். APOSTOLIC CONSTITUION- 6:8 -ல் நிக்கொலாயர்கள் அசுத்தமான, வெட்கமற்றவர்கள் என்று குறிபிடுகின்றார்கள். CLEMENT OF ALEXANDRIA – நிக்கொலா ஆசை இச்சைகளுக்கு தன்னை ஒரு வெள்ளாட்டை போல விட்டு கொடுத்தனாம். தடையற்ற சுயவிருப்பத்திற்கு தன்னை விட்டு கொடுத்தனாம். மாம்சத்தை கட்டாயம் தவறாக பயன்படுத்தவேண்டும் என்று மாற்றி போதித்து அநேகரை வழிதவறி போகபண்ணினான்.
(அப் 15:28-29) வரையுள்ள நிபந்தனைகளை உடைத்துபோட்டான். IRENAEUS- இரேனியஸ் என்பவர் இந்த நிக்கோலா எந்தவிதமான் கட்டுபாடற்ற ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கையை கிருபைகளை தவறாக பயன்படுத்தி வாழ்ந்தனாம்.
III.நிக்கொலாய் அல்லது நிக்கொலாய் மதஸ்தர் போதித்த தவறான போதனைகள்.
1.நியாயபிரமாணம் அழிந்துவிட்டது ஆகவே நாம் என்ன”விரும்புகிறமோ, எப்படி விரும்புகின்றோமோ அப்படி வாழலாம். ஆனால் இயேசு நியாபிரமாணத்தை அழிக்கஅல்ல நிறைவேற்ற வந்தார். கிறிஸ்த்தவர்கள் வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ அவசியம் இல்லை எனவும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் எந்த தீங்கும் வராது. ஏனென்றால்
கிருபை இருக்கிறது என்று போதித்தார்கள். (கிருபையின் உபதேசம் பிண்ணனியம் இதுதான்) இந்த உபதேசத்தை இயேசு வெறுகின்றார் என்று அவர் வாயலே கூறுவதை கவனியுங்கள். அப் 15:28-29 கூறப்பட்ட கட்டளைகளை சடங்குக்காக செய்யலாம் தவறில்லை என்றுபோதித்தனர். இவர்கள் சரீரத்தை (மாம்சத்தை) பரிசுத்தமாய் ஆளவேண்டும் என்ற வசனத்திற்கு மாற்றி ஒருவன் தினமும் மாம்சத்துடன் பாலுறவு கொண்டால்தான் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியும் என்று போதித்தார்கள்.
IV.இந்த நிக்கொலா எப்படி பாதை மாறி தவறான உபதேசத்தை போதிக்க ஆரம்பித்தான்?
சபை வரலாற்று ஆசிரியர் CLEMENT OF ALEXANDRIA தன்னுடைய வரலாற்று புத்தகத்தில், (PRAEDESTINATUS IN.1.4) என்ன கூறியிருக்கிறார்
ஆரம்பகால சபையில் இவனும் தன் பிள்ளைகளை மனைவியை நீதியிலும் பரிசுத்தத்திலும் வளர்த்தவன். இவன் பரிசுத்த ஆவியில் நிரப்பட்டவன் என்று வேதமே இவனை குறித்து சாட்சி கூறுகின்றது. (அப் 6:5). ஆனால் இவனுக்குள் இருந்த நிறைவான அபிஷேகத்தினால் தற்பெருமை வந்தது. மேற் சொல்லப்பட்ட தவறான உபதேசங்களை சீட்டு போட்டு தெரிந்தெடுக்கப்பட்ட “மத்தியாவிடம்” (அப்1:26) இதை செயல்ப்படுத்த வேண்டும் என்று போராடினான். இதை அறிந்த பேதுரு இவனை பொறாமையான புருஷன், என்று கடிந்துக்கொண்டான். மேலும் தானும் ஒரு அப்போஸ்தலன் என்று அழைத்துக்கொண்டான். இதைதான் எபேசு சபை கண்டுபிடித்ததை இயேசு பாராட்டுகின்றார். (வெளி2:2). ஆகவே பேதுருவின் கடிந்துக்கொள்ளுதலினால் பேதுருவுக்கு எதிராக செயல்பட்டு” தன் மனைவியை மற்றவர்களுக்கு பொதுவுடைமையாக்கினான். மாம்சம் தவறாக பயன்படுத்தபட வேண்டும் என்று ஜனங்களிடம் தவறாக போதித்தான். ஆகவே தானும் ஒரு மதத்தின் தலைவனாக வேண்டும் அடிப்படையில் நிக்கொலாய் என்ற புது மதத்தை ஸ்தாபித்து அதற்கு தலைவனான்.
V.இவன் இந்த”தூ்உபதேசத்தை “போதிக்க காரணம் என்ன?
கிறிஸ்த்தவர்கள் வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததினால்,”சத்தியத்திற்கு” தீவிரமாக கீழ்படிந்ததினால் பல சலுகைகள், பல நல்ல உணவுகளை, உறவுகளை”இழந்தனர்.
உலகத்தோடு ஒத்து போகாத வாழ்க்கை வாழ்ந்ததினால் பல இன்னல்களுக்கு ஆளானதை கண்டு வேறுபிரிக்கப்பட்ட, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதினால் என்ன பயன் ஆகவே நீங்கள் சபைக்கும் செல்லுங்கள் உலக காரியங்களிலும் ஈடுபடுங்கள் அப்போதுான் நமக்கு எந்த உபத்திரவமும் வராது என்று நிக்கொலாய் மதம் போதித்தது. உபத்திரவம் இல்லாமல் ஜாலியாக வாழ வேண்டும் என்று நினைத்தார்கள். இந்த தூ் உபதேசத்தை இயேசு அழிக்கவில்லையென்றால் என்றைக்கோ கிறிஸ்த்தவம் உலத்திற்குள் போயிருக்கும்.
VI.கற்றுக்கொள்ளும் மிக ஆழமான சத்தியம் என்ன?
1.கடிந்துக்கொள்ளுதலை, திருத்துதலை ஒருவன் ஏற்க மறுக்கும் போது அவன் கள்ளபோதகனாய்,கள்ளவிசுவாசியாக மாறுகின்றான். (வெளி 2:15)அப்போஸ்தலர்களாலே அபிஷேகம் பண்ணப்பட்டாலும் பொறாமையும், பெருமையும் நுழையும் போது நாளடைவில் தேவன் அவனை ஒதுக்குவது உறுதி. (வெளி 2:8)
இயேசு எந்த உபதேசத்தை வெறுகின்றாரோ அதை நாமும் வெறுக்க கற்றுக்கொள்ளவேண்டும்.(வெளி2:8) வேதத்தை நன்றாக வசித்து இந்த முடிவை எடுக்க வேண்டும். நாம் என்ன பிரசங்கத்தை கேட்க விரும்புகின்றோம் என்று இயேசு தூரத்திலிருந்து பார்க்கின்றார்.
சபையானது உண்மையான தலைவா்களை கண்டுபிடித்து அவர்களை பின்பற்ற வேண்டும் எபேசு சபை அப்போஸ்தலர்கள் அல்லாதவர்களை கண்டுபிடித்ததை இயேசு பாராட்டுகின்றார். (வெளி 2:2) கிறிஸ்த்துவின் உபதேசத்தையும் அப்போஸ்தல உபதேசத்தையும் சபை போதிக்கவேண்டும். (வெளி 2:15) தூ் உபதேசங்களை ,,உபதேசிகளை கண்டுபிடிக்க” வேண்டும். வெளியே இருக்கும் எதிரியை விட சபைக்குள் இருக்கும் தூ்உபதேசத்தை பரப்புகிற எதிரி மிகவும் ஆபத்தனவர்கள் அவர்களை களையெடுங்கள். (வெளி 2:15) வாசித்த அனைவருக்கும் நன்றிகள் மீண்டும் அடுத்த ஒரு வேதஆராய்ச்சி கட்டுரையில் சந்திப்போம் நன்றி எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்,இந்த மொபைலில் பொறுமையாக டைப் செய்தேன்.
Pr.N. Santhosh kumar
Apostolic Church
Thirukovilur