இறை நம்பிக்கை மிக்க இனிய குடும்பத்தில் பிறந்தார் இளமையிலேயே முத்துக்களைப் பார்க்கிலும் சூசன்னா . அழகும் . அறிவும் , ஆற்றலும் நிறைந்தவர். விலையேறப் பெற்ற குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். நல்ல நூல்களைக் கற்ற சிந்தனையாளர் .
சாமுவேல் வெஸ்லி என்பவரின் அன்பு மனைவியாக , ஆவியின் கனிகளைப் பெற்று . இறைமணம் கமழ இல்லறத்தில் இனிதே வாழ்ந்தார் . இங்கிலாந்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஜான் வெஸ்லி என்பவரின் அன்புத் தாயாரே இவர் .
” சூசன்னா வெஸ்லி ஓர் சிறந்த ஜெப வீரர் . ஐந்தில் வளையாதது , ஐம்பதில் வளையுமா என்ற பழமொழிக்கேற்ப தன் குழந்தைகளைச் சிறுபிராயம் முதற்கொண்டே பக்தியிலும் , தெய்வீக அன்பிலும் , ஜெப சிந்தையிலும் , தாராள குணத்திலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் . ஒவ்வொரு குழந்தையும் , ஒரு வாரத்தில் ஒரு மணிநேரம் என தன்னைச் சந்திக்க ஒழுங்கு செய்திருந்தார் . இவர் தன் பிள்ளைகளுக்கு உயரிய கல்விகளை அளித்து , திருமறைக் கல்வியிலும் , கிறிஸ்தவ நெறிப் பயிற்சியிலும் பயிற்றுவித்தார் . கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றியதின் நிமித்தம் , கணவர் சாமுவேல் ஒருமுறை சிறை செல்ல வேண்டியிருந்தது . அண்டை வீட்டார் சண்டை செய்து , துன்பத்தை கொடுத்தனர் . வீட்டுத் தோட்டத்தை நாசம் செய்தனர் . பசு மாடுகளைக் கத்தியால் குத்திக் கொன்றனர் . இதனால் , சூசன்னாவின் பிள்ளைகள் உடல் மெலிந்து வறுமையடைந்தனர் . அடுக்கடுக்காகப் பல துன்பங்கள் வந்து குவிந்தபோதிலும் இத்தாயார் தன் விசுவாசத்தை விட்டுவிடாமல் , முழங்கால்களை ஊன்றி இறைவனிடம் ஜெபிப்பதில் உறுதியாயிருந்தார் . தான் குடியிருந்த வீட்டிற்கு முரடன் ஒருவன் தீ வைத்தபோது , சூசன்னாவின் ஜெபத்தினால் குழந்தைகள் அ னைவரும் காக்கப்பட்டனர் . ஜான் வெஸ்லி என்ற மாமனிதரும் , அவர் சகோதரருமான சார்லஸ் வெஸ்லியும் இத்தாயாரின் ஜெபத்தினாலேயே மாபெரும் சுவிசேஷகர்களாக இப்புவியில் அநேகமாயிரம் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த முடிந்தது .
அன்பரே ! உங்கள் ஜெபத்தினால் எத்தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் ?
சூசனாவின் வேண்டுகோள்:
எனக்கு மரணம் நேர்ந்தால் நீங்கள் அழுது புலம்ப வேண்டாம் . மாறாக , இறைவனின் திருமுன்னர் ஒரு ஆத்துமாவை பாடலோடு அனுப்புங்கள் – சூசன்னா வெஸ்லி