
A. முதலில், பாவம் செய்ய இந்த சத்தியம் அனுமதி மற்றும் இடம் கொடுக்காத படியால், பாவம் பொல்லாப்பு இருதயத்தில் இருந்தால், சத்தியத்தை வெருப்போம்.
B. கிறிஸ்துவாகிய சத்தியம் என்னும் வெளிச்சத்தை நேசிக்காமல் இருளில் நடக்க விரும்புகிறதினால் சத்தியத்தை வெறுக்கிறோம்.
C. பாரம்பரிய கண்ணோட்டத்தில் வேத வசனத்தை வாசித்து, பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தில், கண்ணோட்டத்தில் பார்க்காததினால், சத்தியம் வெருக்கபடுகிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் நமக்கு சத்தியமே போதிக்கப்படும் என்கிற சத்தியத்தை மறந்து விட்டது தான் முக்கிய காரணம்.
D. கடிந்து கொள்ள, சரி செய்ய விட்டு கொடுக்கததினால், ஏனெனில் பரிசுத்த வசனத்தின் முக்கிய நோக்கமே நம்மை பரிசுத்தப் படுத்தி அவரை போல மாற்றுவதே! அதை ஒத்து கொள்ளாதது தான் பெரிய உண்மை.
E. நமக்கு விருப்பமான முறையில் வசனத்தை தெரிந்து எடுப்பதினால், வசனத்தை வசனமாக என்ன நோக்கத்திற்கு சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முற்படாமல் போவதே சத்தியத்தை வெருப்பதின் முக்கிய காரணம்.
F. நமக்கு விருப்பமான பிரசங்கியார்களின் அடிப்படையில் வசனத்தை கேட்பதால், சத்தியத்தை சத்தியமாக கேட்காமல் பிரஞ்சங்கியார்களின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் வசனம் கேட்பதினாலும், சத்தியத்தை பேசுகிறவர்கள் மேல் உள்ள மனித வெறுப்பு கூட நம்மை சத்தியத்தை வெறுக்க வைக்கிறது.
G. கடைசியாக சத்தியத்தின் மேல் கட்டுகடங்கா வெறுப்பு வருகிறது என்றால் நித்திய கோபாக்கினைக்கு என்று நியமிக்கப்பட்டு இருக்கிறதினால், கூட சத்தியம் வெறுக்கபட்டு, நமக்குள் கிரியை செய்ய முடியாமல் இருக்கலாம். எனவே வசனம் நம்மை உடைக்கட்டும். ஏனெனில் வசனத்திற்கு நடுங்கிறவனை தான் அவர் நோக்கி பார்ப்பாராம்.
கர்த்தர் தாமே அவர் வழிகளில் நடந்து, அவரை நேசித்து, அவருடைய சத்தியத்தின் படி அவரை அறிந்து கொள்ள உதவி செய்வாராக! ஏனெனில் அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறார்.
செலின்.