ஏன் ஆசீர்வாத பிரசங்கம் கூடாது?
1. ஆசீர்வாத பிரசங்கம் மாத்திரத்திற்க்கே சபை நடத்துவது, ஆசீர்வாதம் பற்றி மாத்திரமே பேசுவது தவறான சிந்னையுள்ள போதனை
2. ஆசீர்வாதம் என்றைக்கும் உண்டு. பணம் இல்லா வாழ்க்கை இல்லை. ஊழியம் இல்லை. கேளுங்கள் கொடுக்கப்படும். சபையை தோட்டமாக்குங்கள். எல்லாவித அபிஷேகங்கள் எல்லாவித ஊழியங்களால் நிறைந்து மலர் மர செடிகளால் (உன்னதப்பாட்டு 4: 13- 16) மணக்கட்டும். கர்த்தர் இதையே விரும்புகிறார்.
3. இந்த காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய ஊழியம் என்ன என்று சபை தீர்க்கதரிசிகள் சொல்லுவதை கேட்டு எபிரேயர் 1: 1-2 ன்படி மாற்றம் செய்து கர்த்தர் குரலை கேட்டு தீர்க்கதரிசன சுவிஷேகர்கள் எழும்ப வேண்டும். 2000 ஆண்டுகள் சுவிஷேசம் – ஞானஸ்நானம் – (எபி 6: 1-2) என்பதைவிட்டு பூரணர் ஆக வேண்டும். கர்த்தரின் மெல்லிய சத்தத்தை கேளுங்கள். கேட்டவர்களின் சத்தத்தை வைத்தாவது ஜெபியுங்கள். இனி 1 நிமிடம் வீணடிக்காமல் – 1 Second waste பண்ணாமல் எல்லா கிறிஸ்தவனும் ஊழிய செய்யும் நேரம் இது.
தீர்க்கதரிசனம் :
“பெண்கள் கர்த்தரின் சேனைக்கு தயாராக இருக்கின்றனர். வாலிபர்கள் யாருமில்லை.”
எங்கே போனார்கள். உலகத்திற்க்குள் இன்பமாகயுள்ளனர். ஏன் தவறான பிரசங்களினால்.
தவறான பிரசங்கம் பல உயிர்களை
காவு கொள்கிறது. நாம் ஒரே மனநிலையில் – Mindset ல் இருக்கிறோம். அதில் ஆவிக்குரியது
1% பெயருக்கு உள்ளது.
100% ஆவிக்குரியவனாக பேச்சில் நடையில் வாழ முடியுமா? முடியும்.
அது இப்போது வேணும். இன்னோரு காலம் பிறக்காது. ஏன்? இது கடைசிக்காலம். தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தர் கொடுத்த காலம் உலகமெங்கும் கர்த்தர் தீர்க்கதரிசிகளை எழுப்பி வருகிறார். தீர்க்கதரிசன சுவிஷேசகர்கள் எழும்ப வேண்டும். வாலிப சேனை எழும்ப வேண்டும். ஏன்? கர்த்தர் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் வாய்ப்பு- Chance தருகிறார். அவன் உயர்த்தப்பட வேண்டும். இன்னும் ஆழமாக சொன்னால் ஒவ்வொரு தமிழனும் எழும்ப கர்த்தர் தமிழ்நாட்டை இஸ்ரவேலுக்கு அடுத்து தேர்ந்தெடுத்துள்ளார். முதல் எழுப்புதல் எருசலேம் – முழுமையான வெற்றி இல்லை. இரண்டாம் எழுப்புதல் தமிழ்நாடு பின் அது பற்றி தூபமாக இந்தியாவை சூழ்ந்துக்கொள்ளும்.
ஏன் எழுப்புதல் தாமதம்? தனியாக எழுதலாம்.
