மேன்மைபாராட்டுவார்கள்

மேன்மைபாராட்டுவார்கள்

சங்கீதம் 64:10. நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான், செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.

சங்கீதம் 44:8. தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம், உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.)

1. கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
சங்கீதம் 20:7. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

2. உம்முடைய நீதியைப்பற்றியே (வேதத்தை) மேன்மைபாராட்டுவேன்.
சங்கீதம் 71:16. கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன், உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.

3.இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தே மேன்மைபாராட்டுவேன்.
கலாத்தியர் 6:14. நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

Pr.J.A.Devakar . DD