பரலோகத்தில்
வாசமாயிருக்கிறவரே,
திருப்பூருக்காக
உம்மிடத்திற்கு நேராக
எங்கள் கண்களை
ஏறெடுக்கிறோம்

இதோ,
வேலைக்காரரின் கண்கள்
தங்கள் எஜமான்களின் கையை
நோக்கியிருக்குமாப்போலவும்,
வேலைக்காரியின் கண்கள் தன்
எஜமாட்டியின் கையை
நோக்கியிருக்குமாப்போலவும்,
எங்கள் தேவனாகிய கர்த்தர்
ஊழியக்காரர்களாகிய
எங்களுக்கு
இரக்கஞ்செய்யும்வரைக்கும்

திருப்பூரில் ஓர்
திருப்புமுனை
ஏற்படும்வரைக்கும்

எங்கள் கண்கள் உம்மையே
நோக்கியிருக்கும்
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே,
எங்களுக்கு இரங்கும்;
நிந்தனையினால்
மிகவும் நிறைந்திருக்கிறோம்
(சங்கீதம் 123)

இப்போதும், இதோ,
அவர்கள் எங்களுக்கு
நன்மைக்குத் தீமையைச்
சரிக்கட்டி,
தேவரீர் எங்களைச்
சுதந்தரிக்கப்பண்ணின
உம்முடைய
சுதந்தரத்திலிருந்து
எங்களைத்
துரத்திவிட வருகிறார்கள்.


எங்கள் தேவனே,
அவர்களை நீர்
நியாயந்தீர்க்கமாட்டீரோ?

எங்களுக்கு விரோதமாக வந்த
இந்த ஏராளமான கூட்டத்திற்கு
முன்பாக நிற்க எங்களுக்குப்
பெலனில்லை;

நாங்கள் செய்யவேண்டியது
இன்னதென்று எங்களுக்குத்
தெரியவில்லை;

ஆகையால் எங்கள் கண்கள்
உம்மையே
நோக்கிக்கொண்டிருக்கிறது
(2 நாளாகாமம் 20:11,12)

திருப்பூரில் ஓர்
திருப்புமுனை ஏற்படும்வரை

தேவ ஜனமே
முழங்கால்கள்
முடங்கியே இருக்கட்டும்
கண்கள் கண்ணீரை
சொரிந்துகொண்டே இருக்கட்டும்

நிச்சயமாகவே முடிவு உண்டு
நம் நம்பிக்கை வீண் போகாது

(நீதி-23:18).

வித்யா