நீங்கள் சாவதில்லை – நீங்கள் தேவர்கள் என போதிக்கும் சபைகளைவிட்டு வெளியேறுங்கள்

நீங்கள் சாவதில்லை – நீங்கள் தேவர்கள் என போதிக்கும் சபைகளைவிட்டு வெளியேறுங்கள்

வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிருங்கள்

வஞ்சகம் ஒன்று:- சாவாமை
வஞ்சகம் என்றால் என்ன? சத்தியத்தைவிட்டு தூரமாக போவது – சத்தியத்தை வழிவிலகிப்போவது

முதல் வஞ்சகம் ஆதியாகமம் 3 :1-6 ல் தந்திரமாக வெளிப்பட்டது, அதாவது தந்திரத்தை வெகு ஞானமாக என சொல்லலாம். பாவத்திற்க்கு முன்பாக பாம்புக்கு ஞானமிருந்தது – நிதானமாக சிந்திக்கும் குணம் கொண்டதாயிருந்தது. அதனால் சாத்தான் சர்ப்பத்தை தெரிந்தெடுத்தான்.. ஆதாம் படைக்கப்பட்ட நாளிலிருந்து 7ஆண்டுகளுக்குப்பிறகுநடந்தது இது… பாம்பு ஏவாளின் நண்பியாயிருந்தது. பாம்பிற்கு கை காலிருந்தது. நடந்து வரும். ஞானமாக பேசும். ஆதியாகமம் முதல் வெளி. விஷேசம் வரை இந்த சர்ப்பத்தின் வஞ்சக ஆவி வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். சவுலுக்கு பொல்லாத ஆவி புகுந்தம்,,தாவீது கொலை செய்ததும், பத்சேபாளுன் உறவு கொண்டதும் இந்த வஞ்சக ஆவியால்தான்!

பொய் பேசி நம்ப வைப்பான்,
நீ சாக மாட்டாய் என பொய் பேசினான்.
நீ கடவுளைப்போல மாறுவீர்கள். (சாவாமை போதனை இதுதான்)

யோவான் 6: 50- 54 இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். அப்பொழுது யூதர்கள்; இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

நிஜமாகவே மரிப்பது உண்மை!
கடைசி நாளில் எழுப்பி சாவாமையை தருவார். அவர் உயிரோடுயிருக்கும்போது சொன்னார். ஆகவே சாவாமையிருந்தால் ஏன் எழுப்புவேன் என்று சொல்லுவாரா? வரப்போகிற நித்திய ஜீவனை குறித்து பேசினார்.

யோவான் 11:26
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார். மார்த்தாளுக்கு நம்பிக்கையை தர ஆண்டவர் பேசுகிறார். சாவாமையை பேசவில்லை. கர்த்தருக்கு வாழ்கிற வாழ்க்கை கிறிஸ்துவுக்குள் வாழ்வது. உயிரணுக்கள் சாக சாக சரீர பலன் குறையுது, குறையாமலிருந்தால் நாம் சாக முடியாது. சுயத்தை ஜெயிக்கிறவன் வேதனையின்றி சாகலாம், வினாடியில் சாவு வரும், ஏனென்றால் அவன் தன்னைப்பற்றியே நினைக்க மாட்டான், இது புதிய அந்தஸ்து. ஆண்டவர் இயேசு ஒருவரே சாவாமை உள்ளவர். யூதா கோத்திர சிங்கம் அவர் ! வசனத்தை படியுங்கள். யோவான் 6:56-57 இதை சொல்லுகிறது.

ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
யோவான் 6:57

கைலாச மகரிஷி சாகும் நேரத்தை அறிந்தார். அப்போது பறவைகள் பறக்கும் சத்தம் கேட்டது. ஆனால் மரணம் இல்லை. தேவ தூதர்கள் வந்தார்கள். பின்பு ஆண்டவர் இயேசு தரிசனம் தந்தார். மகரிஷி தலைகுப்புற பணிந்து வணங்கினார். ஆண்டவர் இயேசு பேசினார்:
உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே நான் வருமளவும்
நீ சாவாமல் இருப்பாய். ஆண்டவர் அருளிய சாகாவரம் இது.

இயேசு புதிய இதயத்தை பொருத்தினார்.
SIN போய் SON ஆனார் !
“நான்” போய்விட்டது
“0” Zero. ஆனது… …!
சுயம் சாவது…. பற்றி வேதம் சொல்லுகிறதை படியுங்கள்…

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர் 2:20 அங்கே (பரலோகத்தில்) அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான். அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான். யாத்திராகமம் 34:28 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 தீமோத்தேயு 6:16

ஆண்டவரின் சாவாமையுள்ளவரின் ஒளி நம்மில் பாயப்பாய உண்ண உணவு தேவையேயில்லை. அப்படித்தான் மோசே சீனாய் மலையில் இருந்தபோது புசிக்கவேயில்லை… அவர் சீனாய் மலைக்குப் போனபோது கர்த்தர் மேலே வா என்றார், மேலே வா என்றது பரலோகத்திற்க்கு.. மோசோ பரலோகத்தில் இருந்தார். தேவ பிரசன்னத்தில் இருந்தார். அங்கு காலமில்லை. கடந்த, எதிர்கால, நிகழ்காலமில்லை, ஒரே காலம்! மலைக்கவைக்கும் உண்மை!

இயேசு நான் ஆண்டவன்தான் என பிதா சொன்னதை சுட்டிக்காட்டுகிறார். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? யோவான் 10:34 பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.
யோவான் 21:20 அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
யோவான் 21:21

அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க (remain) எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
யோவான் 21:22

இருக்க – ஒரே இடத்தில் இருப்பது கிரேக்க மொழி அர்த்தம் மாம்ச வாழ்வில்
(NLT version) எனக்கு சித்தமிருந்தால் அவன் உயிரோடுயிருக்கும்வரை என அர்த்தமாகும்.

தவறாத போதனைகள்:
வஞ்கம் 1. சாவாமை :
வஞ்சகம் 2. நான் கடவுள்

இதைத்தான் அந்திக்கிறிஸ்து செய்யப்போகிறான். அது இப்போது
2020ல் போதனையாக வந்து விசுவாசிகளை சாத்தான் தயார்ப்படுத்துகிறான்..

சாயல் என்பது அசல் மாதிரி என எபிரேய மொழியில் அர்த்தம்.
நாம் தேவ சாயலில் படைக்கப்பட்டோம். ஆனால் நாம் தேவர்கள் அல்ல. மகன் மகன்தான் அப்பா அப்பாதான் மகன் அப்பா சாயலிலிருந்தாலும்… ஆதாம் வெட்கப்பட்டு தன்னை இலைகளால் மறைத்துக்கொண்டானெ வாசிக்கிறோம். ஏன்? தேவ சாயல்யுடையவன்தானே? ஆதாம் மனிதன்தான், தேவன் அல்ல!
மனிதன் தேவ தூதர்களிலும் சற்றுக்கீழே படைக்கப்பட்டான்.. எப்படி தேவர் ஆக முடியும்?

ஏசாயா 14:14 சாத்தானை வஞ்சகன் என்கிறது. அப்படியானால் சாவாமை போதனையாளனும் சாத்தானின் மகன்தான்.. மேலும் மனிதன் தேவர் ஆக முடியாது என்பதற்க்கு இன்னும் பல வசனங்களை படிக்கலாம் வாருங்கள் …. நீங்கள் தேவர்கள் அல்ல

சங்கீதம் 82: 6-7யை படியுங்கள்…

நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
சங்கீதம் 82:6-7 ஏலோஹிம் – எபிரேய மொழியில் கடவுள் என அர்த்தம். யாத்திரயாகமம் 12:12ல் நானே கர்த்தர் என்கிறார் தேவன். அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். (ELOHIM)
யாத்திராகமம் 12:12 மாயமான பொய்யான விக்கிங்களுக்கு
Amplified Bible says, என் சார்பில் நீங்க நியாயம் விசாரிக்கிறபடியால் நீங்க தேவபுத்திர்கள் (power of Attorney) ஸ்தானாபதி ரோமர்13:1யை படியுங்கள்… எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படியக்கடவன், ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை,உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ரோமர் 13:1 எல்லா மனிதர்களும்
மேலான அதிகாரம் உடையவர்களுக்கு கீழ்பட்டு உள்ளீர்கள். தேவனுடைய ஸ்தானாதிபதி என்று ஒரு மொழிபெயர்ப்பு (The Message version) சொல்லுகிறது. Jewish Bible மொழிபெயர்ப்பு
கடவுள் என்று சொல்லவில்லை, ஆளுகை செய்யும் ராஜா என்கிறது, ஆனால் கடவுள் அல்ல. யாத்தியாகமம் 4:16ல் மோசேயை நீ அவனுக்கு தேவனாகயிருப்பாய், என் சார்பில் நான் உன் வாயில் வைப்பேன் என்கிறார். சங்கீதம் 82:7 மனிதன் சாகிறான் என்கிறது. யோவான் 10:34 – இயேசு தன்னை ஆண்டவர் என்கிறார். அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் என்கிறார் பிலிப்பியர் 2:6ல். லூக்கா 20:35-36 மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள், அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
லூக்கா 20:36 தேவன் படைக்கப்படாதவர், நாம் படைக்கப்பட்டவர்கள்… மத்தேயு 24:5 நானே கிறிஸ்து என்று சொல்லுபவன் – வஞ்சகன் கிறிஸ்துவைப்போல மாறலாம் கிறிஸ்துவாக மாற முடியும், ஆனால் நாம் கிறிஸ்து அல்ல.
மாரநாதா!

செலின்