நன்மையால் முடி சூட்டுகிறீர்

நன்மையால் முடி சூட்டுகிறீர்

பிரசங்க குறிப்பு

நன்மையால் முடி சூட்டுகிறீர்.

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடி சூட்டுகிறீர். உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
சங் : 65 : 11

இந்தக் குறிப்பில் நன்மையால் முடி சூட்டுகிறீர் என்ற வார்த்தையை வைத்து நாம் சிந்திக்கலாம். அவர் நன்மை எப்படிப்பட்டது ? யாருக்கு நன்மைகளைத் தருவார் இவற்றை நாம் சிந்திக்கலாம்.

அவர் கொடுக்கும் நன்மை ஏப்படிப்பட்டது ?

1. அவர் கொடுக்கும் நன்மைகள் சகல நன்மைகள். 1 தீமோ : 6 : 17

2. அவர் கொடுக்கும் நன்மைகள் மிகுந்த நன்மைகள். பிரசங்கி : 9 : 18

3. அவர் கொடுக்கும் நன்மை விசேஷித்த நன்மை. எபி : 11 : 40

யாருக்கு நன்மைகளை தருவார் ?

1. நீதிமான்களுக்கு நன்மைகள் தருவார். ஏசாயா : 3 : 10.

எப்படி நீதிமான்களாக மாற முடியும் ?

a. இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக மாற முடியும். ரோம : 5 : 9
b. விசுவாசத்தால் நீதிமான்களாக மாற முடியும் ரோம : 5 : 1
C. கிரியைகளால் நீதிமான்களாக மாற முடியும். யாக் : 2 : 24
d. இயேசு நாமத்தினால் மற்றும் ஆவியினால் நீதிமானக மாற முடியும். 1 கொரி : 6 : 11

2. பசியுள்ளவர்களுக்கு நன்மைகள் தருவார் லூக்கா:1 : 53

எதின் மேல் பசி வேண்டும் ?

a. நீதியின் மேல் பசி வேண்டும். மத் : 5 : 6
b. அவர் சித்தத்தின் மேல் பசி வேண்டும். யோவா : 4 : 14
c. ஜீவ தண்ணீர் மேல் பசி வேண்டும். வெளி : 21 : 6
d. நலமானதின் மேல் பசி வேண்டும். ஏசாயா : 55 : 1 , 2

3. உத்தமர்களுக்கு நன்மைகள் தருவார். சங் : 84 : 11

யார் உத்தமர்கள் ?

a. நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன். நீதி : 16 : 32
b. மனதை அடக்குகிறவன் உத்தமன். நீதி : 16 : 33
c. பாவத்திற்க்கு விலகி இருப்பவன் உத்தமன். சங் : 19 : 13
d. பொறுமையுள்ளவன் உத்தமன். பிரசங்கி : 7 : 8
e. தேவனால் புகழப்படுபவன் உத்தமன். 2 கொரி : 10 : 18

4. கர்த்தருக்கு பயப்படுவர்களுக்கு நன்மைகள் தருவார். சங் : 25 : 12 , 13

கர்த்தருக்கு பயப்படும் பயம் எப்படி வரும் ?

a. அவருக்கு செவிக் கொடுக்கும்போது பயம் வரும். சங் : 34 : 11
b. ஆவியானவர் மூலமாக பயம் வரும். ஏசாயா : 11 : 2
c. தீமையை வெறுக்கும் போது பயம் வரும். நீதி : 8 : 13
d. கர்த்தர் கொடுக்கும் இருதயத்தை பெறும் போது பயம் வரும். எரே : 32 : 39 , 40

5. ஜெபிக்கிறவர்களுக்கு நன்மைகள் தருவார். மத் : 7 : 11

எப்படி ஜெபிக்க வேண்டும் ?

a. ஸ்தோத்திரத்துடன் ஜெபிக்கவேண்டும். பிலி : 4 : 6

b. விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும். மத் : 21 : 22

c. சந்தேகப்படாமல் ஜெபிக்க வேண்டும். யாக் : 1 : 6

d. ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டும். எபே : 6 : 18

தேவன் பலவித நன்மைகளால் நம்மை முடி சூட்டுகிறவர். இந்தக் குறிப்பில் அவர் கொடுக்கும் நன்மை எப்படிப்பட்டது என்றும் , யாருக்கு இப்படிப்பட்ட நன்மைகளையெல்லாம் தருவார் என்பதை நாம் சிந்தித்தோம். தேவன் வருஷத்தை நன்மையால் முடி சூட்டுகிறவர் என்பதை அறிந்துக்கொள்வோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur