• Monday 10 March, 2025 02:00 AM
  • Advertize
  • Aarudhal FM

ஆண்டவருக்கு வேண்டிய கழுதை – பிரசங்க குறிப்புகள்

ஆண்டவருக்கு வேண்டிய கழுதை – பிரசங்கக் குறிப்புகள் லூக்கா19:31

1.கழுத்து முறிக்கப்படவேண்டிய கழுதை. (யாத்திராகமம் 13:13)
ஆட்டுக்குட்டியால் மீட்கபட்டது. யோவான் 1:21

2.வழியில் விழுந்த கழுதை (உபாகமம் 22:4)
அது தூக்கி எடுக்கப்பட்டது. (லூக்கா 14:5)

3.காணாமல் போன கழுதை (1சாமுவேல் 9:3,20)
அது தேடி கண்டு பிடிக்கப்பட்டது (லூக்கா15:4,32)

4 .இருவழி சந்தில் கட்டப்பட்ட கழுதை. (மத்தேயு21:2,7)
அது கட்டவிழ்க்கப்பட்டது. (மாற்கு 11:2,4)

5.கட்டவிழ்க்கப்பட்ட கழுதை. (ஆதியாகமம் 49:11)
அது நற்குல திராட்சை செடியில் கட்டப்பட்டது. (ஆதியாகமம் 49:11)

6.கர்த்தர் வாயை திறந்த கழுதை (எண்ணாகமம் 22:28,30)
அது தீர்க்கதரிசிக்கு புத்தி சொன்னது. (2 பேதுரு 2:15,16)

7.ஆண்டவர் இயேசுவை சுமந்து சென்ற கழுதை.
அது மகா பாக்கியம் பெற்ற கழுதையானது. (மத்தேயு 21:7)

குடியரசு தினம் குறித்த முக்கிய வரலாறு

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று

வரலாறு

குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் (குதிரை வண்டியில்) முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள தயாராகிறார்.ராஜ்பத், புது தில்லி, 1950.1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

  1. பொருளாதாரம்,
  2. அரசியல்,
  3. கலாச்சாரம்,
  4. ஆன்மீகம்

ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்.

“12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார் அந்த குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.

பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.

1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கொண்டாடும் முறை

தேசியத் தலைநகரில்

  1. நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார்.
  2. தலைநகர் தில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்.
  3. கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

மாநிலத் தலைநகரங்களில்

  1. மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.
  2. சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு நாள் கொண்டாட்டங்கள்

ஒளியூட்டப்பட்ட ராஷ்டிரபதி பவன்

ஒளியூட்டப்பட்ட ராஷ்டிரபதி பவன். மூவண்ணங்களுடனான ஊதுபைகளைக் காணலாம்.

சிறப்பு விருந்தினர்

குடியரசு நாள் அணிவகுப்பிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நாடுகள். இரண்டு முறை அழைக்கப்பட்ட முந்தைய யுகோசுலாவியா இந்த நிலப்படத்தில் காட்டப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார்.

தேசத்திற்காக ஜெபிக்க

  1. தேவன் தந்த இந்திய தேசத்தை நினைத்து கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
  2. தேசத்தை வழிநடத்தி செல்கிற தேச தலைவர்களுக்காக ஜெபிப்போம்
  3. தேசத்தில் உள்ள பாவம் சாபம் வியாதி அக்கிரமங்கள் மாற, அடிமைத்தனங்கள் மாற மூடநம்பிக்கைகள் மாற ஊக்கமாய் ஜெபிப்போம்
  4. தேசத்தில் சமாதானம், ஒற்றுமையும், ஆசிர்வாதமும் செழிப்பும் உண்டாகும் படியாக பாரத்தோடு ஜெபிப்போம்

76 வது இந்திய குடியரசு தின நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்

தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடகம்

இந்தியா கொண்டாடும் 76வது குடியரசு தினம்

இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2025 அன்று கொண்டாடும், இது 1950 ஆம் ஆண்டின் முதல் குடியரசு தினத்திலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும்

இந்த ஆண்டு கொண்டாட்டம் ‘ஸ்வர்னிம் பாரத்: விராசத் அவுர் விகாஸ்’ (தங்க இந்தியா: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றம்) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அரசாங்கம் இந்த நிகழ்விற்காக ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கிறது, மேலும் இந்த ஆண்டு தீம் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் அதன் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் பயணத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்காக, ஆந்திரப் பிரதேசம், பீகார், சண்டிகர், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து டேபிள்யூக்கள் கர்தவ்ய பாதை அணிவகுப்பில் இடம்பெறும். மேலும், 11 மத்திய அரசின் குழுக்கள் இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்கின்றன.  

ஜனவரி 26, 2025 அன்று நடைபெறும் குடியரசு தின விழாவிற்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இயேசு கிறிஸ்து யார்? பிரசங்க குறிப்புகள்

இயேசு கிறிஸ்து நானே என கூறிய உருவகங்கள் (யோவான் நூல்)

  1. நானே ஜீவ அப்பம் நானே – 6:35
  2. நானே உலகிற்கு ஒளி – 9:5
  3. நானே வாசல் – 10:9
  4. நானே நல்ல மேய்ப்பன் – 9:11
  5. நானே உயிர்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன் – 11:25
  6. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் – 14:6
  7. நான் மெய்யான திராட்சை செடி – 15:1

அவசர ஜெப விண்ணப்பம்

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த போதகர்.ஜோஸ் பாப்பச்சன் மற்றும் அவரது மனைவி ஷீஜா ஜோஸ் ஆகியோருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், ஒவ்வொரு மதமாற்ற முயற்சிக்கும் தலா ரூ.25,000/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் மிகுந்த பாரத்துடன் தெரிவிக்க விரும்புகிறோம்.முன்னதாக, 24/01/2023 அன்று கைது செய்யப்பட்டிருந்த அவர்கள், 8 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஏறக்குறைய 30 வழக்கு விசாரணைகளுக்குப்பிறகு, மாண்புமிகு நீதிமன்றத்தால் தற்போது தண்டிக்கப்பட்ட நிலையில், 18/01/25 அன்று, போதகர்.ஜோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சகோதரி ஷீஜா மட்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தயவு செய்து சபையாய் தொடர்ந்து அவர்களுக்காக உபவாசம் இருந்து, தேவன் ஒரு அதிசயத்தைச் செய்யவும், முன்பு போல ஒரு வரலாற்றுத் தீர்ப்பு அவர்களுக்கு ஆதரவாக வழங்கப்படவும் ஜெபிப்போம். போதகர் ஜோஸுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் உள்ள நிலையில், கர்த்தர் தாமே அவர்களை சரீர அளவிலும் உள்ளத்திலும் பலப்படுத்தவும், அவர்கள் மூலம் தேவனுடைய நாமம் மகிமைப்படவும் ஜெபிப்போம்.

IAS மற்றும் IPS உள்ளிட்ட உயர் பணியில் சேர அழைப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளின் 979 பணியிடங்களுக்கு ஒன்றிய அரசின் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு (SC/ ST) விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் மற்றவர்கள் ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.முதல் நிலை தேர்வு வருகிற மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இது பற்றிய மேலும் விவரங்களை,https;//upsc.gov.in/sites/default/files/NOTIF-CSP-2025-Engl-220125-pdf என்ற முகவரியில் இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து நன்கு படித்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.அன்புடன்,(மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி) முழுநேர உறுப்பினர்,மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம்,தமிழ்நாடு.

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண்

சிறுவனை வன்கொடுமை செய்த 2 குழந்தைகளின் தாய்

திருவள்ளூரில் 16 வயது சிறுவனை 2 குழந்தைகளுக்கு தாயான பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த 16 வயது சிறுவனிடம் ஆசை வார்த்தை கூறி, வெளியூருக்கு கூட்டிச் சென்ற வினோதினி (24) வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் அப்பெண்ணை கைது செய்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

துருக்கி ஓட்டல் தீ விபத்து பலி எண்ணிக்கை அதிகரிப்பு

அங்காரா,துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில், சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது. தற்போது துருக்கியில் 2 வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால், இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.இந்த ஓட்டலில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஓட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

9 வயதில் திருமணம் மசோதா நிறைவேற்றம்

9 வயதில் திருமணம் மசோதா நிறைவேற்றம் பாரம்பரியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்றி ஈராக் ஆட்சியாளர்கள் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றனர்.பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை, 18ல் இருந்து 9ஆக குறைத்துள்ளனர். ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஜஃபரி இஸ்லாமிய விதிகளின் படி, 9 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கலாம். ஆனால் இது பெண்களின் வாழ்க்கைக்கு ஆபத்தாக அமையும் என எதிர்கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா ரயில் விபத்து.. தீவிபத்து அச்சம், இறங்கி ஓடிய போது பகீர்- பலர் உடல் சிதறி பலி

புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் எதிர்பாராத விதமாக தண்டவாளத்தை கடக்கையில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் உயிரிழக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தின் ஜல்கோவன் மாவட்டத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக பயணிகள் அச்சப்பட்டுள்ளனர். இதனால் தாங்கள் பாதிக்கப்படக் கூடாது என்று கருதி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து பயணிகள் பலரும் கீழே இறங்கினர். பின்னர் அருகிலிருந்த தண்டவாளத்தை கடக்க முற்பட்டனர். அப்போது அந்த வழித்தடத்தில் அதிவேகமாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் பயணிகள் பலரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை 10 பயணிகள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.