• Friday 18 October, 2024 11:23 AM
  • Advertize
  • Aarudhal FM

அண்ணாமலை தருமபுரி கிறிஸ்தவ தேவாலயத்தில் என்ன செய்தார்? எதிர்ப்பும், வழக்கும் ஏன்?

கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வந்த அண்ணாமலைக்கு எதிர்ப்பு, வழக்கு - என்ன நடந்தது?

11 ஜனவரி 2024

தருமபுரியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயன்றதாகவும் கூறி பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அங்கே என்ன நடந்தது?

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் யாத்திரை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த யாத்திரை கடந்த ஜனவரி 8ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இரு இடங்களிலும் நடப்பதாக இருந்தது.

இதற்காக அண்ணாமலை சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்தின் பொம்மிடி வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் உள்ள பி.பள்ளிப்பட்டியில் இருக்கும் புனித லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அண்ணாமலை அன்று மாலை 5.50 மணி அளவில் அவர் ஆலயத்திற்கு வந்து லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், குறுக்கிட்டு அவரைத் தடுத்து நிறுத்தினர்.

“எங்கள் மக்களைக் கொன்றார்கள், எங்கள் தேவாலயங்களை இடித்தார்கள்” என்று சில இளைஞர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

அவர்களிடம் சென்று பேசிய அண்ணாமலை, “அண்ணே, நான் சர்ச்சுக்கு வருவதில் என்ன பிரச்னை?” என்று கேட்டார். “அங்கு நடந்தது மத பிரச்னை அல்ல. இரு பழங்குடியினர் இடையிலான பிரச்னை. நீதிமன்ற உத்தரவின் பேரில் புதிதாக ஒரு சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து கொடுத்ததை மற்றொரு பிரிவினர் எதிர்த்தார்கள்.

இரு பிரிவுகளிலுமே இந்துக்களும் இருக்கிறார்கள், கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். இதில் மத அரசியல் செய்யக்கூடாது. இதில் மத அரசியல் செய்வது யார் எனப் புரிந்துகொள்ள வேண்டும். சண்டை நடந்தது அவர்களுக்குள். இதில் மாநில அரசுக்கு என்ன தொடர்பு?

உயர் நீதிமன்ற ஆணையின்படி இது அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு முழு துணை ராணுவப் படையும் உள்ளே சென்றது. எல்லோரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். 2009இல் இலங்கையில் ராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையில் பிரச்னை நடந்தது. 1,60,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்றைக்குப் பேசுபவர்கள் எங்கே போனார்கள்? ஆகவே மதத்தை கோவிலுக்குள்ளும் தேவாலயங்களுக்கு உள்ளும் கொண்டு வராதீர்கள்,” என்றார்.

அதற்குப் பதிலளித்த இளைஞர், “மதத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. யார், என்ன என்ற சுய அறிவோடு பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய பதில் நிறைய படிச்சிட்டேன். மத்திய அரசு அவர்களைத் தடுக்கவில்லை,” என்றார்.

கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வந்த அண்ணாமலைக்கு எதிர்ப்பு, வழக்கு - என்ன நடந்தது?

இதையடுத்து, “அரசியல் கட்சி ஆளும் தி.மு.க.காரன் பேசுற மாதிரி பேசக்கூடாது” என்றார் அண்ணாமலை. இதற்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில், கோபமடைந்த அண்ணாமலை, “சர்ச் உங்க பேரில் இருக்கா? எல்லா மக்களுக்கும் உரிமை இருக்குல்ல. தடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. 10,000 பேரைக் கூட்டி வந்து தர்ணா பண்ணா என்ன பண்ணுவீங்க,” என்று கேள்வியெழுப்பினார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதற்குப் பிறகு லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவித்த அண்ணாமலை, தேவாலயத்திற்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். இந்தக் காட்சிகள் எல்லாம் வீடியோவாக பதிவு செய்யபட்டன, பின்னர் சமூக ஊடகங்களில் பரவின.

இதற்குப் பிறகு இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ட்வீட்டில், “இன்றைய தினம், தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள, தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும், நலமுடன் வாழ அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டோம்,” என்று கூறி, புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

இதற்குப் பிறகு பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பொம்மிடி காவல்துறையில், புகார் அளித்தார். அந்தப் புகாரில், 10,000 பேருடன் வந்து தர்ணா செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு அண்ணாமலை மிரட்டியதாக புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியைக் குலைக்கத் தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் எல்லோரும் வரலாம் என்ற நிலையில், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வருவதற்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கும் இளைஞர் கார்த்திக்கிடம் பேசினோம்.

அவர், “கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் எல்லோரும் வரலாம் என்பது உண்மைதான். தேவாலயத்தில் இருந்து யாரும் அவரை அழைக்கவில்லை. உடன் இருக்கும் சிலர் ஏற்பாடு செய்துதான் அவர் வந்தார்.

ஆனால், பிற மாநிலங்களில், குறிப்பாக மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடக்கும்போது பா.ஜ.க. எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பதால் அதைப் பற்றிக் கேட்டோம். அதனால்தான் அவர் வரக்கூடாது என்று சொன்னோம். இதை அரசியல் ரீதியாகச் செய்யவில்லை. இப்போது அவர் பேசிய வார்த்தைகளை வைத்து அவர் மீது புகார் கொடுத்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

ஆனால், கடவுளை வழிபடச் சென்றவரைத் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழிபடச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அராஜகம் என்கிறார் பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி.

“எல்லோருக்கும் சென்று வழிபடக் கூடிய பொதுவான ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் யாரையும் வரக்கூடாது எனத் தடுப்பது அராஜகம். அப்படித் தடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், வழிபடச் சென்றவர் மீது நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம்?

அண்ணாமலை கிறிஸ்தவ மதத்தைப் போற்றத்தானே அங்கே சென்றார்! ஆனால், அவர் மீது எதற்காக வழக்குப் பதிந்திருக்கிறார்கள்? உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தை அழிப்பேன் என்கிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?” எனக் கேள்வி எழுப்புகிறார் நாராயணன் திருப்பதி.

கிறிஸ்தவர்களின் பங்களிப்பை பாராட்டிய மோடி

கிறிஸ்தவ சமூக உறுப்பினர்களுடன் தனது இல்லத்தில் உரையாடிய பிரதமர் மோடி, கிறிஸ்தவ சமூகத்துடன் மிகவும் பழமையான, மிக நெருக்கமான, மிகவும் அன்பான உறவு இருப்பதாகக் கூறினார்.

திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தில், பிரதமர் நரேந்திர மோடி,  “இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்களிப்பு முதல் சமூக சேவையில் அதன் செயல் பங்கேற்பு வரை கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் ஒப்புக்கொள்கிறது” என்று கூறினார்.

தனது இல்லத்தில் கிறிஸ்தவ சமூக உறுப்பினர்களுடன் உரையாடிய மோடி, கிறிஸ்தவ சமூகத்துடன் “மிகவும் பழமையான, மிக நெருக்கமான, மிகவும் அன்பான உறவு” இருப்பதாகக் கூறினார்.  “நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, கிறிஸ்தவ சமூகத்தினருடன் அடிக்கடி பழகுவேன்… நான் தேர்தலில் போட்டியிடும் மணிநகரில், அதிக (கிறிஸ்தவ) மக்கள் தொகை உள்ளனர். இதன் காரணமாக, எனக்கு இயல்பான நல்லுறவு இருந்தது” என்று அவர் கூறினார்.

“சுதந்திர போராட்ட இயக்கத்தில் கிறிஸ்தவ சமூகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் பல சிந்தனையாளர்களும், கிறிஸ்தவ சமுதாயத் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் சுஷில் குமார் ருத்ராவின் ஆதரவில் ஒத்துழையாமை இயக்கம் உருவானது என்று காந்திஜி கூறியுள்ளார்” என்று மோடி கூறினார்.

“சமூகத்திற்கு வழிகாட்டுவதில் கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. இது சமூக சேவையில் தீவிரமாக பங்கேற்கிறது, மேலும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. இன்றும், இந்தியா முழுவதும், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் கிறிஸ்தவ நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றன” என்று மோடி கூறினார்.

“கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது… கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.

“சமூக வாழ்வின் வெவ்வேறு நீரோடைகளில், நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் பல ஒத்த மதிப்புகளைக் காண்கிறோம். உதாரணமாக, பரிசுத்த வேதாகமம் கூறுகிறது, கடவுள் நமக்குக் கொடுத்த பரிசு எதுவாக இருந்தாலும், அவர் நமக்கு கொடுத்திருக்கும் சக்தியைக் கொண்டு அதை நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்ய பயன்படுத்த வேண்டும். இதுவே உயர்ந்த மார்க்க சேவையாகும். புனித பைபிளில், உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், உண்மை மட்டுமே நமக்கு ரட்சிப்பின் பாதையை காட்டும் என்று கூறப்பட்டுள்ளது… புனித உபநிடதங்களும் இறுதி உண்மையை அறிவதில் கவனம் செலுத்துகின்றன, அதனால்தான் நாம் நம்மை விடுவிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

“நம்முடைய பகிர்ந்துகொள்ளபட்ட விழுமியங்கள் மற்றும் பாரம்பரியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் ஒன்றாக முன்னேறலாம். 21-ம் நூற்றாண்டின் நவீன இந்தியாவிற்கு, இந்த ஒத்துழைப்பு, இந்த நல்லிணக்கம், அனைவரின் முயற்சியின் சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்” என்று மோடி கூறினார்.

“இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நாம் கொண்டாடும் நாள் கிறிஸ்துமஸ்… இரக்கம் மற்றும் சேவையின் மதிப்புகளை இயேசு வாழ்ந்தார். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் நீதி இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். இந்த விழுமியங்கள் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் வழிகாட்டும் வெளிச்சம் போன்றது,” என்று பிரதமர் மோடி கூறினார்.

“பரிசுத்த போப், தனது கிறிஸ்துமஸ் உரையில், வறுமையை ஒழிக்கப் பாடுபடுபவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்… இந்த வார்த்தைகள் வளர்ச்சிக்கான நமது மந்திரத்தில் இருக்கும் அதே உணர்வை பிரதிபலிக்கின்றன. நம்முடைய மந்திரம் ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ (அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி)” என்று  பிரதமர் மோடி கூறினார்.

“ஒரு அரசாங்கமாக, வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைவதையும், யாரையும் விட்டுவிடாமல் இருப்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம். இன்று, நாட்டில் நடைபெறும் வளர்ச்சியின் பலன்கள், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பலரையும், குறிப்பாக ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடைகிறது” என்று மோடி கூறினார்.

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கு மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் குறித்து விவாதித்த பிரதமர் மோஒடி, கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடையவர்கள், இந்த விவகாரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேரளாவில் குண்டு வெடிப்பு எதிரொலி: கோவையில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு

கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.  

police protection for churches

தேவாலயத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒரு பெண் உயிரிழந்தார். 7 பேர் கவலைக்கிடமாக உள்ளனர், மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

police security 2

இந்த சம்பவத்தின் எதிரொலியாக  கோவையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

கோவை மாநகரின் முக்கியமான 15 தேவாலயங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

police security 3

மேலும், 2 வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் மாநகர் மாவட்ட காவல்துறை தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

தலித் கிறிஸ்துவர்கள்,  இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை: சங்பரிவாரின் மக்கள் தொடர்பு பிரிவு

தலித் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சங் பரிவாரின் மக்கள் தொடர்பு பிரிவு நடத்திய மாநாட்டில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலித் கிறிஸ்துவர்கள்,  இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை: சங்பரிவாரின் மக்கள் தொடர்பு பிரிவு

தலித் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சங் பரிவாரின் மக்கள் தொடர்பு பிரிவு நடத்திய மாநாட்டில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலித் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. .பாலகிருஷ்ணன்  தலைமையில் 3 பேர் அடங்கிய ஆணையத்தை மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில் இந்த விவாகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக சங் பரிவார் அமைப்பின் மக்கள் தொடர்பு பிரிவு விஷ்வ சம்வத் கேந்திரா ( வி.எஸ்.கே) அமைப்பு ’கிரேட்டர் நொய்டா’ என்ற மாநாட்டை கடந்த ஞாயிற்றுகிழமை நடத்தியது.

’கிரேட்டர் நொய்டா’ மாநாடு, கெளதம புத்தா பல்கலைக்கழகம், ஹிந்து விஷவா என்ற நாளிதழும் ஒன்றிணைந்து நடத்தியது. இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது.

வி.எச்.பி அமைப்பின் தலைவர் அனில் அகர்வால் இது தொடர்பாக பேசிய போது ‘ இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதால் தீண்டாமை நீங்கும் என்று நம்புகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையில்லை” என்று கூறினார்.

’கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தில் உள்ள ஓ.பி.சி பிரிவினர் ஏற்கனவே இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் அவர்களின் நிலை முன்னேறி இருக்கிறது’ என்று கூறினார்.

’மிகவும் ஏழையாக இருக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை  பெற முடியும். இதுபோல சிறுபான்மையினர் அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பயனடைகின்றனர். இலவச ரேஷன் முதல் பல்வேறு சலுகைகள் பெருகின்றனர்” என்றும் அவர் கூறினார்.

 விஷ்வ சம்வத் கேந்திரா மற்றும் கெளதம புத்தா பல்கலைக்கழகம் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. .பாலகிருஷ்ணன்  ஆணையம் தொடர்பான  17 தலைப்புகளை தேர்வு செய்து, அதன் கீழ் ஆய்வு கட்டுரைகளை அனுப்பும்படி கூறியிருந்தது.

கிட்டதட்ட இந்த மாநாட்டில் முன்னாள் நிதிபதிகள், கல்வியாளர்கள், ஆரிசியர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் என 150 பேர் கலந்துகொண்டனர். மேலும் இதற்கு சிறப்பு விருந்தினராக ராஜசபை எம்.பி நரேந்திர ஜாதவ் பங்கேற்றார். 

ஈஸ்டர் சன்டே கிறிஸ்துவர்களை சந்தித்த கேரள பாஜக : சி.பி.எம், காங்கிரஸ் எச்சரிக்கை

பாஜகவின் இந்த முயற்சி முக்கிய கத்தோலிக்கர்களுக்கு மட்டுமே என்று கூறியுள்ள எதிர்கட்சிகள், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை பற்றி கேள்வி எழுப்பியுள்ளன.

Kerala BJp
கேரளா பா.ஜ.க தலைவர்கள் கிறிஸ்துவர்களுடன் சந்திப்பு

ஈஸ்டர் சன்டே நாளை முன்னிட்டு கிறிஸ்துவ மக்களிடடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்குள் ஒரு இடத்தை பெறும் முயற்சியின் ஒரு பகுதியாக கேரளா பாஜகவின் முக்கிய தலைவர்கள், கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்புகளையும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கிறிஸ்துவ மக்கனை சந்திக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கியது.

பிஷப் இல்லங்களுக்கு உள்ளேயும் வெளியேயும், பிரதமர் நரேந்திர மோடியின் ஈஸ்டர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட பாஜகவினர், சமூக வலைதளங்களில், பாஜகவின் பல்வேறு அதிகாரப்பூர்வ பக்கங்களில், உயிர்த்தெழுந்த இயேசுவின் படங்கள் மற்றும் ஈஸ்டர் முட்டைகளால் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதில் கேரளா மாநில பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது சொந்த மாவட்டமான கோழிக்கோடு பகுதியில் இரண்டு பிஷப்களை சந்தித்தார், மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வி.முரளீதரன் திருவனந்தபுரம் பேராயத் தலைவர் தாமஸ் ஜே நெட்டோவுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். கண்ணூரில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஏ.பி.அப்துல்லாகுட்டி, மூத்த தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் உடன் தலச்சேரி பேராயர் ஜோசப் பாம்ப்ளனியை சந்தித்தார்.

பாஜகவின் இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதாகவும், மோடி தலைமையிலான அரசின் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மை மதக் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் வலுவாக உள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவில் நல்லாட்சியின் பலன்களை கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் பார்த்து வருவதாக, கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களும் இதேபோன்ற மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஈஸ்டர் நாளில், கேரளாவில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த கிறிஸ்தவக் குழுவான கத்தோலிக்கர்கள் மட்டுமே பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளனர். கத்தோலிக்க திருச்சபையானது “லவ் ஜிஹாத்” க்கு எதிரான பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்தது, இது கத்தோலிக்க திருச்சபையையும் சங்க பரிவாரத்தையும் சமீபத்திய வெளிப்பாட்டிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நெருக்கமாக கொண்டு வந்தது.

இருப்பினும், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர் பாசெலியோஸ் மார்தோமா மேத்யூஸ், பாஜகவின் கிறிஸ்தவப் பணியை மறுத்துள்ளார். “ஈஸ்டர் தின வருகையால் பாஜக மீதான கிறிஸ்தவர்களின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படாது. நாட்டில் தேவாலயங்கள் தாக்கப்பட்டபோது, பாஜக அதைக் கண்டுகொள்ளவில்லை. இது அந்தத் தாக்குதல்களை கட்சி அமைதியாக ஆதரித்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

அடுத்த லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு சங்பரிவாரின் பரப்புரைத் திட்டம், வடக்கில் உள்ள தேவாலயங்கள் மீதான இந்து வலதுசாரிகளின் தாக்குதல் சம்பவங்களைத் தூண்டிய ஆளும் சிபிஐ (எம்) (CPI(M) மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும் இந்தியாவிற்கு உள் நாட்டு அச்சுறுத்தல்களாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது. தற்போது சிறுபான்மையினரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் முயற்சி சிரிப்பை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் “கடந்த கிறிஸ்துமஸின் போது, நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் பரவலான தாக்குதல்களை எதிர்கொண்டனர். வட இந்தியாவில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் முழுமையாக முடிவடையாத நேரத்தில் கேரளாவில் உள்ள பாஜக தலைவர்கள் கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் நிறுவனங்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். அறிவொளி பெற்ற கேரள மக்கள் பாஜகவின் அணுகுமுறையை உணர்ந்து கொள்வார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சங்பரிவாரின் அரசியலின் ஆபத்துக்களை உணர்ந்து பிற இடங்களில் உள்ள கிறிஸ்தவ குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியதாக சிபிஐ(எம்) கூறியது. “பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சங்பரிவார் பயன்படுத்திய மிரட்டல் மற்றும் தூண்டுதல், இப்போது கிறிஸ்தவப் பிரிவினரை அதன் மடியில் கொண்டு வர பயன்படுத்தப்படுகிறது. பாஜக தலைவர்களின் பிஷப்புகளுடனான சந்திப்பு அதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அக்கட்சி கூறியது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன், பிஜேபி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதனால் சிறுபான்மை சமூகத்தின் மீதான அதன் “புதிய காதல்” அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். “நூற்றுக்கணக்கான தேவாலயங்களில் வழிபாட்டை பாஜக சீர்குலைத்துள்ளது. சமீப ஆண்டுகளில் சங்க பரிவார் அமைப்புகள் ஏராளமான தேவாலயங்களை சேதப்படுத்தியுள்ளன.

சங்பரிவார் தாக்குதலில் இருந்து பாதுகாப்புக் கோரி, பல கிறிஸ்தவ அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் கேரளாவில் கிறிஸ்தவ இல்லங்களுக்குச் செல்கின்றனர். கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வலையில் சிக்க மாட்டார்கள். கேரளாவில் பாஜக மிகப்பெரிய இந்துத்துவா பிரச்சாரத்தை நடத்தியது, ஆனால் மாநிலத்தில் 90% இந்துக்கள் அதற்கு எதிராக உள்ளனர், ”என்று அவர் கூறினார்.

கிறிஸ்துவ மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு; மீண்டும் தேசிய ஆணையம் அமைக்கும் மத்திய அரசு

தலித் சமூகத்திலிருந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களுக்கு மாறியவர்களின் தகுதிநிலையை கண்டறிய மத்திய அரசின் சார்பில் சர்வதேச ஆணையம் அமைக்கப்பட உள்ளது.

தலித் சமூகத்திலிருந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களுக்கு மாறியவர்களின் தகுதிநிலையை கண்டறிய மத்திய அரசின் சார்பில் சர்வதேச ஆணையம் அமைக்கப்பட உள்ளது.

சர்வதேச ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து விவாதித்து வருவதாகவும்,  விரைவில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்த ஆணையத்தை அமைக்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சி துறை அனுமதியளித்துள்ளது. மேலும் இதுதொடர்பான அலோசனைகளை உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், சமூநீதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில், தலித் சமூகத்திலிருந்து இஸ்லாம் மற்றும் கிரிஸ்துவ மதங்களுக்கு மாறியவர்கள், எஸ்சி- இட ஒதுக்கீடு கேட்டு மனு அளித்துள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் , ஆர்டிகல் 350 படி இந்து, சீக்கியம்,  புத்த மதத்தில் உள்ள எஸ்சி சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ் சி சமூகத்தினர் என்று கருதப்படுவார்கள் என்று குறிப்பிடுகிறது.  முதலில் இந்துக்கள் மட்டுமே என்றிருந்த சட்டம் 1956-ல் சீக்கியர்களையும் 1990-ல் புத்த மதத்தை சேர்ந்தவர்களை சேர்த்துகொள்ளலாம் என்று திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஆக்ஸ்டு 30-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், இஸ்லாம் மற்றும் கிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் எஸ்சி இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற மனுக்களின் விசாரணையின் போது, இதுதொடர்பான அரசின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள 3  வாரங்கள்வரை கால அவகாசம் தந்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்படும் தேசிய ஆணையத்தில் 3 முதல் 4 பேர் இடம் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் கிட்டதட்ட ஒரு வருடம் காலம் வழங்கப்பட்டு, ஆணையம் பரிந்துரைக்கும்  தரவுகளின் அடிப்படையில் வழக்கு.

மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பாக இதற்கு முன்னால் இருந்த அரசிடமும்  கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

மன்கோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அக்டோபர் 2004-ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆணையம் 2007ம் ஆண்டு மே, மாதம் அதன் அறிக்கையை அளித்தது. இதில் எஸ்சி சமூகத்தின்  சமூகநிலைக்கும், அவர்கள் தழுவிய மதத்திற்கு எந்த தொடர்புமும் இல்லை. எப்படி எஸ்டி பிரிவினருக்கு மதத்திற்கு அப்பாற்பட்டு இட ஒத்துக்கீடு வழங்கப்படுகிறதோ அதுபோலவே எஸ்சி சமூகத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. கலத்திற்கு சென்று முறையாக ஆய்வு செய்யவில்லை என்று அப்போதைய அரசு இந்த பரிந்துரைகளை ஏற்க மறுத்தது குறிப்பிடதக்கது.    இந்நிலையில் தற்போது அமைக்கப்பட உள்ள ஆணையம் எப்படி செயல்பட உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.  

கிறிஸ்துவ தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கொடுக்க வேண்டும் என்ற வழக்கில், மத்திய அரசு 3 வாரங்களுக்குள் அதன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கொடுக்க வேண்டும் என்ற வழக்கில், மத்திய அரசு 3 வாரங்களுக்குள் அதன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலித் சமூகத்தினர் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களுக்கு மாறுகையில், அவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கான  இட ஒதுக்கிடு சலுகை வழங்கப்பட வேண்டும்  என்று பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ். கே காயுல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் அபயா எஸ் ஒகா, விக்ரம் நாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர்  ஜெனரல் திஸ்சூர் மேத்தா கூறுகையில் “ இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், சமூக படிநிலையில் சிறிது மேன்மை அடைவதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்வது தொடர்பான கேள்வி எழுகிறது’ என்று கூறினார்.

பொது நல வழக்கின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் புஷன் கூறுகையில்” 1950 ஆண்டு வெளியான சட்டம்படி பட்டியலின சமூகத்தினர் என்பவர்கள் இந்து, புத்தம், சீக்கியம் மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுவது மதத்தின் பெயரில் தீண்டாமையை கடைபிடிப்பதாகும்.

மேலும் அவர் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை குறிப்பிட்டார் இதில் “ மாதம் மாறிய தலித் சமூகத்தினரும், இந்து தலித் சமூகத்தினரைப் போலவே ஒடுக்குமுறையை சந்திப்பதாக கூறினார்.

இந்நிலையில் நீதிபதி காயுல் கூறுகையில் “ இட ஒதுக்கீடுட்டின் கீழ் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்குவதா? ஏற்கனவே இது ஓபிசி சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பட்டியலின சமூகத்தினருக்கு வழகுங்வதில் சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  

மதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே! சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு

சுதா ரகுநாதன், எதையும் கண்டுக்கொள்ளாமல் திருமண வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

singer Sudha Ragunathan daughter marriage
singer Sudha Ragunathan daughter marriage

singer Sudha Ragunathan daughter Marriage : கர்நாடக இசைபாடகி சுதா ரகுநாதன் மகள் மாளவிகாவின் மதம் மாறிய திருமணத்திற்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவு குரல்கள் பெருமளவில் ஒலித்து வருகின்றனர்.

சினிமா மற்றும் கர்நாடக இசை என்று இசையுலகத்தில் மிக பிரபலமானவராக இருப்பவர் சுதா ரகுநாதன். இவரது மகள் மாளவிக்காவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது இதற்கான அழைப்பிதழ் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சுதா ரகுநாதனின் மகள் வெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை திருமணம் செய்யப் போகிறார். இதனால் தான் சுதா ரகுநாதனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரின் மகள் மாளவிகா தனது விருப்படி ஆப்பிரிக்காவை சேர்ந்த மைக்கேல் என்ற கிறிஸ்துவரை மணமுடிக்க உள்ளார். இருவீட்டாரின் சம்மதப்படி இந்த திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாளவிகா திருமணம் மற்றும் மைக்கேல் நிறத்தை விமர்சித்து பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் சுதா ரகுநாதன் கிறிஸ்தவர் மதத்திற்கு மாறிவிட்டார் என்றும், அவர் இனி சபாக்களிலும், கோவில்களிலும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்சனை கடந்த 5 நாட்களாக நிலவி வரும் நிலையில், தற்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியியுள்ளது.

publive-image

இந்த விவகாரத்தில் சுதா ரகுநாதனுக்கு ஆதரவாகவும் பலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.அதே சமயம், தனது மகள் திருமண விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து விளக்கமோ அல்லது வருத்தமோ தெரிவிக்காத சுதா ரகுநாதன், எதையும் கண்டுக்கொள்ளாமல் திருமண வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

சுதா ரகுநாதனுக்கு ஆதரவாக ட்விட்டரில் #standwithSudhaRagunathan என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக திருமணம் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் இதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதே பிரதான கருத்தாக முன்வைக்கப்படுகிறது.

கிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள் – தொடர்ந்து எழும் சர்ச்சைகள்!

சுதா ரகுநாதனை இனிமேல் கச்சேரிகளில் பாட அனுமதிக்க கூடாது.

கிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்!
singer Sudha Ragunathan

singer Sudha Ragunathan : கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதனின் மகள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ய இருப்பதற்கு கர்நாடக சங்கீத அமைப்பை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில பிராமணிய உட்குழுக்களிலும் சுதா ரகுநாதனுக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வெடித்துள்ளனர்.

கர்நாட இசை உலகில் அனைவராலும் எளிதில் அறியக்கூடியவர் பிரபல கர்நாடக இசைபாடகி சுதா ரகுநாதன். இவரின் மகளான மாளவிகா தனது விருப்பப்படி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். மணமகன் மைக்கேல் ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாகக் கொண்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதன்படி, வரும் ஜூலை 11ஆம் தேதி இரவு 7 மணி முதல் சென்னை மயிலாப்பூர் ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் வரவேற்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுதா ரகுநாதன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. மேலும், அவரின் மகள் மாளவிகா திருமணத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர்கள் சிலர், இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் சுதா ரகுநாதனை போனில் தொடர்பு கொண்டு இதுப்பற்றி பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சுதா ரகுநாதனை இனிமேல் கச்சேரிகளில் பாட அனுமதிக்க கூடாது என்றும் சிலர் ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு எதிர்மறையாக அவரின் ரசிகர்கள் தரப்பில் இருந்து  சமூகவலைத்தளங்களில் அவருக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றனர்.