• Monday 10 March, 2025 10:57 AM
  • Advertize
  • Aarudhal FM

அப்பாவின் அன்பை விட ஐபோன் பெரிதா..?

அப்பாவின் அன்பை விட ஐபோன் பெரிதாகிபோன மகாராஷ்ட்ராவில் 10ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன், தனது தந்தையிடம் ஐபோன் வாங்கி தருமாறு கேட்டுள்ளான். ஏழை விவசாயியான அவனது தந்தையோ, தனது வறுமை நிலையை எடுத்துக் கூறி, அதை வாங்கி தர மறுத்துவிட்டார். இந்த ஆத்திரத்தில் அங்குள்ள மரத்தில் சிறுவன் தூக்கிட்டுக் கொள்ள, அதே மரத்தில் தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துவிட்டார். வறுமையிலும் தன்னை படிக்க வைத்த அப்பாவின் அன்பை விட, ஐபோன் பெரிதாகிவிட்டதா?

விசுவாசம் நமது வாழ்க்கையில் எப்போது எல்லாம் காணப்பட வேண்டும்

1) துன்பங்களில் – 2 தெச 1:4
2) உபத்திரவங்களில் – 2 தெச 1:4
3) பொல்லாங்கன் (பிசாசு) உடன் போராடும் போது – எபேசி 6:16
4) வியாதி நேரத்தில் – யாக் 5:15
5) ஜெபிக்கும் போது – மத் 21:21
6) இருதயம் கலங்கும் போது – யோ 14:1

யாரை கனம் பண்ண வேண்டும் ?

1) தாய், தகப்பனை – யாத் 20:12
2) புருஷனை – எஸ்தர் 1:20
3) மனைவியை – 1 பேதுரு 3:7
4) முதிர் வயது உள்ளவர்களை – லேவி 19:32
5) முடி நரைத்தவர்களை – லேவி 19:32
6) கர்த்தரை – நிதி 3:9
7) ராஜாவை – 1 பேது 2:17
8) கர்த்தருக்கு பயந்தவர்களை – சங் 15:4
9) உத்தம விதவைகளை – 1 திமோ 5:3
10) எல்லாரையும் – 1 பேது 2:17

பரிசுத்த வேதாகமத்தில் சிறுவரின் பங்கு

1.‌சிறுவனாகிய சாமுவேல்

தரிசனத்தை அறிவிக்க கர்த்தர் சிறுவனாகிய சாமுவேலைப் பயன்படுத்தினார்
1சாமுவேல் 3:4,6,8,10,21

2.‌சிறுவனாகிய சாலொமோன்

நியாயத்தை விசாரிக்க கர்த்தர் சிறுவனாகிய சாலொமோனைப் பயன்படுத்தினார்
1இராஜாக்கள் 3:5-15

3.‌சிறுவனாகிய எரேமியா

ஜாதிகளுக்கு தீர்க்கத்தரிசியாக கர்த்தர் சிறுவனாகிய எரேமியாவைப் பயன்படுத்தினார்
எரேமியா 1:1-7

4.‌சிறுமியாகிய அடிமைப் பெண்

நாகமான் குஷ்டரோகம் நீங்கி சுகமடைய கர்த்தர் சிறுமியாகிய அடிமைப்பெண்ணைப் பயன்படுத்தினார்
2இராஜாக்கள் 5:1-16

5.‌சிறுவனாகிய பையன்

ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கொடுக்க கர்த்தர் சிறு பையனைப் பயன்படுத்தினார் யோவான் 6:1-14

அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்

திருப்பதி கூட்ட நெரிசல் 6 பேர் பலி.. கடிந்த முதல்வர் சந்திரபாபு.. மன்னிப்பு கேட்ட தேவஸ்தானம்

திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்த கொடூர விபத்தில் 34 பேர் காயம் அடைந்த நிலையில் அங்கே பக்தர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் பெற பக்தர்கள் குவிந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியாகி உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மேலும் பலர் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டோக்கன் பெறுவதற்கு கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து உள்ளது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அங்கே நிலைமை மோசமாகி.. கீழே விழுந்தவர்கள் மீது கால் வைத்தவர்கள் மேலும் பலர் தடுக்கி கீழே விழுந்தனர்.

கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றதால் பலருக்கு உடலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு கழுத்து பகுதியில் மக்கள் மிதித்ததில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.இதனால் சம்பவ இடத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த கொடூர விபத்தில் 34 பேர் காயம் அடைந்த நிலையில் 10 பேர் மோசமான உடல்நிலையில் உள்ளனர். . சொர்க்கவாசல் இலவச டோக்கன் பெற ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவே விபத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

திருப்பதி கோவில் வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்களை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருமலைக்கு வருகை தருகிறார். இந்த விபத்திற்கு காரணமான அதிகாரிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.முறையாக ஏற்பாடு செய்யாத காரணத்திற்காக திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்துள்ளதாகவும் .. தொலைபேசியில் அதிகாரிகளை கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

திருமலை ஸ்ரீவாரி வைகுண்ட வாசலை தரிசிப்பதற்காக டோக்கன் வாங்க விஷ்ணு நிவாசம் அருகே மக்கள் வரிசையில் நிற்கையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் பலியானது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டோக்கன் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், உயர் அதிகாரிகளை சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளை செய்து வருமாறு உத்தரவிட்டுள்ளேன். நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்களின் உயிரைக் காப்பாற்றவும் உத்தரவிட்டுள்ளேன். நேரடியாக TTD அதிகாரிகளிடம் பேசி, நிலைமையை ஆய்வு செய்து வருகிறேன், என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

கொள்ளையடிக்கிறவர்களுக்கு மாத சம்பளம் இலவச உணவு, பயண செலவு

IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது.

ரூ.3 லட்சத்தில் AI தொழில்நுட்பத்துடன் ரோலபிள் லேப்டாப்பை அறிமுகப்படுத்தும் லெனோவா !

மடிக்கக்கூடிய லேப்டாப்கள், 360 டிகிரி லேப்டாப்களைத் தொடர்ந்து லெனோவா நிறுவனமானது நீட்டிக்கக்கூடிய டிஸ்ப்ளேவைக் கொண்ட ரோலபிள் லேப்டாப்பை அறிமுகப்படுத்த தயாராக இருக்கிறது. லெனோவா இந்த ஆண்டு ரோலபிள் டிஸ்ப்ளே கொண்ட அதன் முதல் லேப்டாப்பை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

மடிக்கக்கூடிய லேப்டாப்கள், 360 டிகிரி லேப்டாப்களைத் தொடர்ந்து லெனோவா நிறுவனமானது நீட்டிக்கக்கூடிய டிஸ்ப்ளேவைக் கொண்ட ரோலபிள் லேப்டாப்பை அறிமுகப்படுத்த தயாராக இருக்கிறது. லெனோவா இந்த ஆண்டு ரோலபிள் டிஸ்ப்ளே கொண்ட அதன் முதல் லேப்டாப்பை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்- கடும் தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதா: முழு விவரம்

  • பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும்.
  • பெண்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள், பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்ட திருத்த மசோதாவை அவர் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

2023-ம் ஆண்டு பி.என்.எஸ். சட்டம் தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் 2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்த சட்டம்) என்று அழைக்கப்படும். இதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர முடியாது.12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் 18 வயதுக்கு உள்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஆயுள் கால சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை கிடைக்கும்.கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

18 வயதுக்கு உள்பட்ட பெண்களிடம் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபரின் இயற்கையான ஆயுள் காலம் வரையில் நீட்டிக்கப்படும். மேலும் அபராதம், மரண தண்டனை ஆகியவையும் விதிக்கப்படும்.மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள்கால சிறை தண்டனை விதிக்கப்படும்.

வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயுள் கால சிறை ஆகியவையும் விதிக்கப்படும். காவல்துறை அலுவலர், அரசு பணியாளர், ஆயுதப்படை உறுப்பினர், சிறைச் சாலைகள், தடுப்பு காவல் இல்லம் ஆகியவற்றில் பெண்கள் அல்லது குழந்தைகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ, அதிகாரம் மிக்க நபர் அல்லது நெருங்கிய உறவினர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை, ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலும், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் தாக்குதல் அல்லது பலத்தை பயன்படுத்தினாலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.பெண்களின் ஆடைகளை அகற்றி தாக்குதலில் ஈடுபடுபவர்கள், மறைந்திருந்து பார்த்து பாலியல் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும்.பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும்.

ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்ச்சி மற்றும் பாலியல் குற்றங்கள் ஆகியவற்றில் சட்டம் முழு வேகத்துடன் கையாளப்படுவதற்கும், அது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் விதமாகவும் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படுவது அவசியமாகிறது.

இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களை உறுதியாக தடுக்க இந்த சட்டத் திருத்தம் முன் மாதிரியாக இருக்கும் என்று மாநில அரசு நம்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தமிழக அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பெண்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனையும் வாங்கி கொடுத்துள்ளோம். ரெயில் முன்பு தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனையை வாங்கி கொடுத்திருக்கிறோம்.

தமிழக அரசின் இது போன்ற பெண்களுக்கு எதிரான 80 சதவீத வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக 2 லட்சத்து 39 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராலும் மன்னிக்க முடியாத குற்றங்கள் என்பதை கருத்தில் கொண்டு புதிய சட்டத்திருத்தத்தை இன்று நான் தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்

பல் வலிக்கு நிரந்தர தீர்வு!

25 மிளகு (நன்றாக இடித்து), சிறிது பட்டையை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்.

1 டம்ளர் அளவுக்கு நீர் சுண்டியதும் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, மேலும் 1 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

அந்த சுடுநீரில் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளை (சிறிதளவு) சேர்த்து 20 நிமிடங்கள் கழித்து குடிக்கவும்.

தொடர்ந்து 3 நாட்கள் இந்த கசாயத்தை குடித்துவர பல் வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் சவுதி

சவுதி அரேபியாவில் தற்போது சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. அங்குள்ள மெக்கா, மதீனா, ஜெட்டா ஆகிய நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள நீரில் வீடுகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சி, மழையின் தாக்கத்தையும், அதன் வீரியத்தையும் உணர்த்துகிறது. தொடர்ந்து பலத்தக் காற்றும், புயலும் சுழன்று அடிக்கும் மோசமான வானிலை காணப்பட்டு வருகிறது