• Monday 10 March, 2025 02:06 PM
  • Advertize
  • Aarudhal FM

ஹெர்னியா என்னும் குடலிறக்கம் உங்களுக்கு வரக்கூடாதா? இதை முதலில் செய்யுங்க

ஹெர்னியா என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க!


தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்

நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.


சிறுநீரக பாதிப்பு
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.

ஆர்த்ரிடிஸ்
சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.


பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்

டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.

சில குறிப்புகள்
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.

மதிய உணவுக்கு முன் 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும்.

அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.

வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

நம்மில் பலரும் நின்று கொண்டு நீர் அருந்துவதும் , இடது கையால் அருந்துவதும், ஒரே மூச்சில் அவசரமாக அருந்துவதும் சர்வ சாதாரணமாகவே செய்கிறோம்.

திபெத் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 95 தாண்டியது ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன

திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன

திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளதுசீன அரசு ஊடகங்கள் ஒளிபரப்பிய வீடியோ பதிவுகளில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததையும், இடிபாடுகளுக்குள் சென்று மீட்புப் பணியாளர்கள் அங்கு சிக்கி உள்ள மக்களுக்கு தடிமனான போர்வைகளை வழங்குவதைக் காட்டுகின்றன.

கடன் தொல்லையால் பரிதாபம் ஜூஸில் விஷம் கலந்து குடித்து போதகர், தாய் தற்கொலை

கன்னியாகுமரி: கடன் தொல்லையால் போதகர், தனது தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு கோவில்விளையை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது மனைவி அமுதலதா (50). இவர்களுக்கு சுமாராணி (25) என்ற மகளும், மெல்பின் ராஜ் (23) என்ற மகனும் உள்ளனர்.

இதில் மெல்பின்ராஜ் முண்டவிளையில் உள்ள கிறிஸ்தவ சபையில் போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. சுமாராணிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கணவருடன், தக்கலை அருகே வசித்து வருகிறார்.சகோதரி திருமணத்துக்காக மெல்பின் ராஜ், வங்கியில் கடன் வாங்கி இருந்தார். பின்னர் வங்கி கடன் வாங்கி வீடு கட்டினார்.

இதனால் ரூ.20 லட்சம் வரை கடன் தொகை அதிகரித்துள்ளது. கடனை அடைக்க பெரும் சிரமப்பட்டுள்ளார். வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மெல்பின் ராஜ் மனம் உடைந்தார். பெற்றோரிடம் ஆலோசித்தார். ஆசையாக கட்டிய வீட்டை விற்று கடனை அடைக்கவும் மனம் இல்லாமல் தவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் ஜூஸில் விஷம் கலந்து தந்தை தங்கராஜிடம் கொடுத்துள்ளார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் அவர் பனி அதிகமாக இருப்பதால் காலையில் குடிக்கிறேன் என கூறி விட்டார். பின்னர் தாய்க்கு கொடுத்து தானும் குடித்துவிட்டு உறங்க சென்றார். மற்றாரு அறையில் படுத்திருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை தண்ணீர் குடிக்க எழுந்து வந்தபோது, மனைவியும் மகனும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை பார்த்து கதறினார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் இருவரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ஜூஸில் விஷம் கலந்து குடித்தது தெரிய வந்தது. ஜூஸில் விஷம் கலந்து இருப்பது தெரிந்திருந்தால் நானும் அவர்களுடன் குடித்து இறந்திருப்பனே என தங்கராஜ் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது

அகந்தையினால் இலச்சையடைந்தவர்கள்

1) லூசிபர் – ஏசாயா 14:12-14. எசே28:11-17
2) மிரியாம் -எண் 12:10
3) உசியா – 2 நாளா 26:16-21
4) நேபுகாத்நேசர்– தானி 4:30
5) மோவாப்– செப் 2:8-10
6) நினிவே பட்டணத்தார்- செப் 2:15




நமக்காக கர்த்தர் இருக்கிறார்

1. தேற்றுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

பிரசங்கி 4:1; புலம்பல் 1:2,9,17,21
ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை.
ஏசாயா 66:13
தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.
சங்கீதம் 94:19 உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது

2. விசாரிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 142:4; எசேக்கியேல் 34:6
விசாரிப்பார் ஒருவருமில்லை
1பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலை களையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். சங்கீதம் 68:5

3. பரிதபிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 69:20
பரிதபிக்கிறவன் ஒருவனும் இல்லை
சங்கீதம் 135:14; உபாகமம் 32:26
ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். மத்தேயு 15:32
இயேசு: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன் (5 அப்பம் 2 மீன்)

4. நன்மைசெய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 14:3; சங்கீதம் 53:1; ரோமர் 3:12
நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அப்போஸ்தலர் 10:38
நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தார்
லூக்கா 6:35
அவர் நன்றியறியாதவர்களுக்கும் நன்மை செய்கிறாரே

5. பரிந்துபேசுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

எசேக்கியேல் 22:30
தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும்… ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
1யோவான் 2:1
இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசு…
லூக்கா 23:34
இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும்.

6. துணை செய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்

ஏசாயா 63:5
துணை செய்வார் ஒருவனும் இல்லை;
ஏசாயா 50:7,9
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்
சங்கீதம் 46:1
ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 70:5; 115:10-11; 2தீமோத்தேயு 4:17; ஏசாயா 41:13-14

7. விண்ணப்பம்பண்ணுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

ஏசாயா 59:16
ஒருவனும் விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லை
ரோமர் 8:34
நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே
யோவான் 17:1,9,15,20இயேசுகிறிஸ்து நமக்காக விண்ணப்பம்பண்ணுகிறார்

ஆவியினாலே

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் எபே 3: 16

1 . ஆவியினாலே ஆராதனை செய்யுங்கள். பிலி 3 : 3, எபே 5 : 18 — 21, 6: 18, 1 கொரி 14 : 14 – 16, யூதா 1 : 20

2 . ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்படியுங்கள் 1 பேது 1 : 22

3 . ஆவியினாலே சரீரத்தின் கிரியை அழியுங்கள் ரோமர் 8 : 13

4 . ஆவியினாலே உள்ளான மனுஷரில் பலப்படுங்கள் எபே 3 : 16.

5 . ஆவியினாலே அனலாயிருங்கள் ரோம 12 : 11, அப் 18 : 5

6 . ஆவியினாலே நிருணயம் பண்ணுங்கள் அப் 19:21

7 . ஆவியினாலே நடத்தப்படுங்கள் ரோம 8 : 14

8 . ஆவியினாலே காத்துகொள்ளுங்கள். 2 தீமோ 1 : 14, 1 யோவா 3 : 24

9 . ஆவியினால் வைராக்கியமாயிருங்கள். அப் 17 : 16 , 18 : 5

10 ஆவியினாலே பிரசங்கியுங்கள் 1 பேது 1 : 12, 2 பேது 1 : 21, அப். 4 : 1 , 31, 6 : 5, அப் 13 : 9

வேதத்தில் காற்றின் பெயர்கள்

  1. கீழ்காற்று – யாத் – 10:13 ; யோபு – 38 : 24
  2. பலத்த பெங்காற்று – 1இராஜா – 19 : 11
  3. பெருங்காற்று – யோபு – 1 : 19
  4. கொண்டல் காற்று – யோபு – 27 : 21 ; எரே – 18 : 17
  5. சுழல் காற்று – சங் – 83 : 13 ; நீதி – 10 : 25
  6. வடக்காற்று – நீதி – 25 : 23
  7. தீக்காற்று – எரே – 4 : 11
  8. பலமான காற்று – எரே – 4 : 12
  9. கோரா வாரிக் காற்று அல்லது பெருங்காற்று – எரே – 30 : 23
  10. புசல் காற்று – எசே – 1 : 4; எசே – 13 : 11
    கொண்டற் காற்று – எசே – 27 : 26
  11. சூறைக்காற்று – தானி – 11 : 40
  12. பலத்த சூழல் காற்று – தானி – மாற் – 4 : 37
  13. பலத்த காற்று – அப் – 2 : 2
  14. கடுங்காற்று – அப் -27 : 14; யாக் – 3 : 4
  15. அனல் காற்று
  16. இளவேனிர் காற்று
  17. வாயுக்காற்று
  18. பனிக்காற்று
  19. மூச்சுக்காற்று
  20. பேய்க்காற்று
  21. வளிக்காற்று

திசை பொருந்தி காற்றின் பெயர்கள்:-

  1. தெற்கிலிருந்து வீசுவது – தென்றல் காற்று
  2. வடக்கிலிருந்து வீசும் காற்று – வாடை காற்று
  3. கீழ்க்கிலிருந்து வீசும் காற்று – கொண்டல் காற்று
  4. மேற்கிலிருந்து வீசும் காற்று – கச்சான் காற்று , கூதல் காற்று

காற்று வீசும் வேகம் பொருந்தும் பெயர்கள்:-

  1. மென்காற்று 6 கி.மீ வேகத்தில் வீசும்
  2. இளந்தென்றல் காற்று – 12 – 9 கி.மீ வேகத்தில் வீசும்
  3. புழுதிக்காற்று – 20 – 29 கி.மீ வேகத்தில் வீசும்
  4. ஆடிக்காற்று – 30 – 39 வேகத்தில் வீசும்
  5. கடுங்காற்று – 100 -கி.மீ வேகத்தில் வீசும்
  6. புயற்காற்று – 101 – 120 கி.மீ வேகத்தில் வீசும்
  7. சூறாவளிக்காற்று – 120 கி.மீ வேகத்தில் வீசும்

காற்றின் வேறு பெயர்கள் என்னவென்றால்:-

  1. கால் காற்று
  2. காற்றழுத்தம்
  3. காற்றாடி
  4. காற்றாலை
  5. காற்றோட்டம்
  6. காற்று மண்டலம்
  7. காற்றடி, காற்றடக்கு

சென்னை தாம்பரத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் கொடூர கொலை

சென்னையை தாம்பரத்தில் வாய்பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் மப்பேடு – ஆலப்பாக்கம் சாலையோர காலி இடத்தில் இளைஞர் ஒருவரின் உடல் துணியால் கை கால்கள் கட்டப்பட்டு கழுத்து தலை முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்தது. இதனைப் பார்த்த பகுதி மக்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேலையூர் காவல்துறையினர் மற்றும் பள்ளிக்கரணை ஆணையாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் 25 வயதான சூர்யா என்பதும், சேலையூர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த இளைஞர் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி என்பதும் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி கொலை செய்யப்பட்ட இளைஞர் சூர்யா சமீபத்தில் சிட்லபாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்ததாகவும் இதையடுத்து அந்த பெண்ணை தனது உறவினர் வீட்டிற்கு அவர் அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

Ph.D படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,00,000 கல்வி ஊக்கத்தொகை

Ph.D Scholars Scholarship 2025 : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த முழு நேர முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மூலம் கல்வி ஊக்கத்தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு கல்வி ஊக்கத்தொகைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் 2024-25 கல்வி ஆண்டு புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு நேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு கல்வி ஊக்கத்தொகை திட்டங்கள் மத்திய, மாநில அரசு வழங்கி வருகிறது. அதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.அந்த வகையில், தற்போது 2024-25 கல்வி ஆண்டிற்கு கல்வி ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் புதுபித்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பங்கள் நிரப்பி தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் புதுப்பித்தல் (Renewal) மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை கைதான ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டாஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில், ஞானசேகரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் குண்டர் சட்டம் அவர் மீது பாய்ந்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த 2 மணி நேரத்தில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.

சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொடர்ந்து இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ஞானசேகரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு 6.30 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தியது. இதில் லேப்டாப், ஹார்டு டிஸ்க், பட்டா கத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அளித்த பரிந்துரைப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே 3 முறை ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 4வது முறையாக ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நன்றி