• Thursday 26 December, 2024 01:21 PM
  • Advertize
  • Aarudhal FM

வேதநாயகம் சாமுவேல் அசரியா

பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா (Bishop Vedanayagam Samuel Azariah, ஆகத்து 17, 1874 – சனவரி 1, 1945)[1]. ஆங்கிலிகன் திருச்சபையின் முதல் இந்திய பிஷப் ஆவார், மேலும் ஆந்திராவில் உள்ள தோர்ணக்கல் மறைமாவட்டத்தின் முதல் ஆயர் ஆவார்..[2] இந்திய கிறித்துவா்களின் முன்னோடியாக விளங்கிய, பிஷப் அசாியாவுக்கும் மகாத்மா காந்திக்குமிடையே ஒரு சிக்கலான உறவு இருந்தது. காந்தியடிகள் அவரை ஒருமுறை பிாிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திற்குப் பின்தைய இந்தியா்களின் முதலாவது எதிாி எனக் குறிப்பிட்டாா்.[3]

ஆரம்ப மற்றும் குடும்ப வாழ்க்கை

வேதநாயகம் சாமுவேல் அசரியா 1874 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில், வெள்ளாளன்விளை என்ற கிராமத்தில் , கிறித்துவ போதகரான தாமஸ் வேதநாயகம் மற்றும் அவரது இரண்டாவது மனைவி எலென் ஆகியோருக்கும் மகனாகப் பிறந்தவா். அவர் பாரம்பரியமாக இந்து மதத்தைச் சோ்ந்தவா். .[4] 1839 இல் சர்ச் மிஷனரி சொசைட்டி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது தாமஸ் கிறிஸ்தவத்தை தழுவினார். இத்தம்பதிகளுக்கு ஒரு மகள் இருந்தபோதும், 13 வருட இடைவெளியில் தாமஸ் பிறந்ததன் காரணமாக, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியின் பெயரைக்கொண்டு மகனுக்கு சாமுவேல் என பெயரிட்டார். 1889ல் தாமஸ் இறந்தார், ஆனால் அவரது தாய் சாமுவேலை அவரது அண்ணன் அம்ப்ரோஸ் மெஞ்ஞானபுரத்தில் நடத்தி வந்த கிறித்துவ போா்டிங் பள்ளியில் படிக்க வைத்தாா். தாயாரும் மெஞ்ஞானபுரத்திலுள்ள பெண்கள் பள்ளியில் விடுதிக் காப்பாளராகப் பணயாற்றினாா். அசாியா, திருநெல்வேலியிலுள்ள ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது சாதிய முரண்பாடுகளை களைவதற்கான ஒரு அமைப்பை உருவாக்குவதில் வெற்றி கண்டாா்.

சாமுவேல் வேதநாயகம் அப்போதைய மாகாண தலைநகரான சென்னைக்கு (பின்னர் மெட்ராஸ் என அழைக்கப்பட்டது) அனுப்பப்பட்டார். அங்கு மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியின் பிாிட்டிஷ் முதல்வா் அவரை மற்ற பையன்களிடம் இருந்து வேறுபடுத்தி அறிய அசாியா என்ற பெயர் கொடுத்தார். [சான்று தேவை] அங்கு அவரது வகுப்பு தோழரான கே.டி. பால் (1876-1931), என்பவருடன் அசரியா பின்னாளில் பணியாற்றினார். அமெரிக்க மிஷனரி ஷெர்வுட் எட்டி உடன் அசாியா தொடர்புகொண்டார், பின்னா் அவா் வாழ்நாள் நண்பராகவும் ஆனார். அசாரியா கணிதவியலைப் படித்தார். அவரது மூத்த சகோதரர்களில் ஒருவா் மிஷனரியாக ஆனார், ஆனால் ஒரு பட்டம் கூட பெற்றதில்லை – அவர் 1893 ல் படிப்பை முடித்தார், ஆனால் இறுதி கணிதப் பரீட்சைக்கு முன்னதாகவே நோயுற்றார்,

அசாியா தனது பத்தொன்பதாவது வயதில் இளம் ஆண்கள் கிறிஸ்துவர் சங்கத்தின் (YMCA) ஒரு சுவிசேஷகனாக மாறினாா். 1895 ஆம் ஆண்டில், அவர் YMCA ஆன்மீக கூட்டங்கள் நடத்தி வந்தாா். சென்னையில் ஒரு புதிய கிளையைத் திறந்து நடத்தி வந்தாா். 1896-ல் அவர் நற்செய்தியாளரான ஜான் மோட் ஐச் சந்தித்தார்; 1902 ஆம் ஆண்டில் தமிழ் மக்களிடையே நற்செய்தியைப் பிரசங்கிக்க அஸரியா யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். இது சுவிசேஷம் சம்பந்தமாக ஒப்பீட்டளவில் வளமான திருநெல்வேலி தேவாலயத்தின் நிலையை மறுபரிசீலனை செய்வதற்கு காரணமாக அமைந்தது. அடுத்த வருடம் அசாியா ஒரு நீண்ட கால திட்டத்தை புதுப்பிக்க, இந்திய மிஷனரி சொசைட்டி (திருநெல்வேலியை அடிப்படையாக கொண்டது) உதவியது, இதன் மூலம் சக தமிழ் கிறிஸ்தவர்கள் தங்கள் சகோதரர்களிடையே நற்செய்தியைப் பிரசங்கிப்பார்கள். 1895 முதல் 1909 வரை தென்னிந்தியாவில் YMCA இன் செயலாளராக அசாியா பணியாற்றினார், மேலும் கிறிஸ்தவ மிஷனரிகளில் சுதந்தரத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார். மேற்கு வங்காளத்தில் செரம்போரில் உள்ள கேரி நூலகத்தில் 1905 ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, சர்வதேச மனிதாபிமான சங்கம், அதன் செயலாளராகவும், இந்தியாவில் மட்டுமல்லாது ஆப்கானிஸ்தான், திபெத் மற்றும் நேபாளம் ஆகியவற்றிலும் நற்செய்தியைப் பிரகடனப்படுத்தவும் பணிபுரிந்தது. 17 நிறுவனர்களில் பிற முக்கிய நபர்கள் K.T.Paul, J.W.N. மேலும், 1907 ஆம் ஆண்டில் டோக்கியோவில் உலக மாணவர் கிரிஸ்துவர் ஃபெடரேஷன் மாநாட்டிலும் ஷாங்காயில் YMCA மாநாட்டிலும் அசரியா கலந்து கொண்டார், மேலும் ஜப்பான் மற்றும் சீனாவிற்கான உத்திகளைப் பிரசுரிப்பதில் அக்கறை காட்டினார், அத்துடன் இந்தியா . மேற்கத்திய ஆதிக்கத்தில் இருந்து ஆசியாவை விடுவிப்பதற்காக தேசியவாதிகளின் அழைப்பிற்கு மாறாக, ஆசியர்கள் ஒரு பான் ஆசிய உலகளாவிய பார்வை மற்றும் ஆசியர்களை மாற்றுவதில் கவனம் செலுத்தினார்கள்.

1898 ஆம் ஆண்டில், அசரியா அம்பு மாரியம்மாள் சாமுவேலை திருமணம் செய்து கொண்டார், அவா் தென்னிந்தியாவிலேயே கல்லுாாிப் படிப்பை முடித்த முதல் கிறிஸ்தவ பெண்களில் ஒருவராவாா். அவர்களின் திருமணம் பல மதங்களை உடைத்தது. மணமகனும், மணமகளும் திருமணத்திற்கு முன் ஒருவருக்கொருவர் ஒத்துக்கொண்டனர், வரதட்சணை வழக்கங்களை புறக்கணித்து, வெறும் 40 ரூபாய் வரவு செலவுத் திட்டத்தை நிறுவி, ஒரு புதன்கிழமை திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி இறுதியில் நான்கு மகன்கள் (ஜார்ஜ், ஹென்றி, எட்வின் , மற்றும் அம்புரோஸ்) மற்றும் இரண்டு மகள்கள் (கிரேஸ் மற்றும் மெர்சி) களைப் பெற்றெடுத்தது.[5]

ஊழியம்

1909 ஆம் ஆண்டில், தனது 35 ஆவது வயதில், ஆங்கிலிகன் பாதிாியாராக நியமிக்கப்பட்டார். YMCA உடன் ஆன தனது பதவிகளை விட்டுவிட்டு, தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டார். மேலும் தோா்ணக்கல் என்ற இடத்தில் ஒரு மிஷனரியைத் தொடங்கினார். இது உலக நாடுகள் பலவற்றில் பரவலாக பேசப்பட்டது.

thanks to https://ta.wikipedia.org/s/7ir8

இந்தியா வந்த மிஷனரி – பர்த்தலோமேயு சீகன் பால்க்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 – பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

பர்த்தலோமேயு சீகன்பால்க் 1682 ஆம் ஆண்டு, ஜூலை 10 ஆம் நாள் செருமனியிலுள்ள புல்ஸ்னிட்ஸ் (Pulsnitz) என்னுமிடத்தில் பர்த்தலோமேயு – கத்தரின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையார் பர்த்தலோமேயு, நவதானியங்களை விற்பனை செய்து வந்த ஓர் வணிகர், செல்வந்தர். சீகனுக்கு நான்கு மூத்த சகோதரிகள் இருந்தனர். சீகன் பலவீனமான தேகத்தைக் கொண்டிருந்தார். சீகனுக்குச் சிறுவயதாயிருக்கும் போதே, இறைப்பற்று மிக்க அவரின் தாயார் இறந்து போனார். தாயை இழந்த இரண்டே வருடத்தில் தந்தையையும், அதன்பின்பு ஒரு வருடம் கழித்து ஒரு சகோதரியையும் இழந்தார்.

கல்வி

சீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தீன் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் (Görlitz) என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் அவரது பெயருக்கு அருகில் “சரீரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன்” (in body and soul an immature person) என எழுதப்பட்டிருந்தது.

17ஆவது வயதில் சீகன் உள்ளத்தில் ஜேக்கப் பாக்மி (Jakob Böhme) யின் புரிந்து கொள்ள முடியாத பரவச மனநிலையில் ஆன்மிக வழிபாடு செய்து இறைவனை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தத்துவக் (mysticism) கொள்கைகள் விதைக்கப்பட்டன. குழப்பத்திலிருந்த அவர், வேதத்தை நன்கு கற்றிருந்தபடியால் பல மாதப் போராட்டத்திற்குப் பின்பு அதிலிருந்து விடுதலை பெற்றார்.

1702 ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் பட்டணத்தில் உயர்கல்விக்காகச் சேர்ந்தார். சுகவீனம் காரணமாக அவருக்கு 9 மாதங்கள் கல்வி தடைபட்டது. 1703 ஆம் ஆண்டு இறையியல் கல்விக்காக ஹலே சென்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமானார். “நான் எங்கிருந்தாலும் சிலுவை என்னைத் தவறாமல் பின் தொடர்கிறது”, என்று தன் சரீர பலவீனத்தைப் பற்றி சீகன் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் எபிரேய மொழியைக் கற்றார்.

அருட்பணி தேர்வு

டென்மார்க் மன்னர் 4ஆம் பிரடெரிக், டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் காலனிக்குட்பட்ட பகுதிகளில் அருட்பணியாளர்களை அனுப்பி அருட்செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என எண்ணம் கொண்டார். டென்மார்க் லுத்தரன் திருச்சபை இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே மிஷனெரியைத் தெரிவு செய்யும் பணி ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் சீகன்பால்க் அருட்பணியாளாராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய சரீர பலவீனத்தினால், இவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பணி அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இருப்பினும் கடவுளின் விருப்பம் என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க் மற்றும் ஹென்ரிச் புளுட்ச்சோ (Heinrich Plütschau) ஆகிய இருவரும் லுத்தரன் சபை பேராயரால் அபிஷேகம் செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் மன்னர் அழைப்பை ஏற்று டென்மார்க் சென்றனர்.

கடற்பயணம்

1705ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் நாள் இருவரும் மன்னர் சார்பில், அவருடைய செலவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பயணத்தின் போது, கப்பலில் இறந்தவர்களின் சடலங்களைக் கடலில் வீசியெறிவதையும், அலைகளாலும், புயல்களாலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்டதையும் நேரடியாகக் கண்ட சீகன்பால்க் தனது கடற்பயணத்தை, “மரணக் கல்விச் சாலை” (Academy of death) என்று குறிப்பிட்டார். இவர் இந்தக் கடற்பயணத்தின் போது Allgemeine Schule der wahren Weisheit என்னும் புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் பின்னர் 1710 ஆண்டில் டென்மார்க் இளவரசி சோபியாவின் உதவியால் வெளியிடப்பட்டது.

இருவரும் ஏழு மாதக் கப்பல் பயணத்தில், 1706 ஆம் ஆண்டு, ஜூலை 9ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடற்பகுதியான தரங்கம்பாடியை வந்தடைந்தனர். மன்னர் அவர்களை அனுப்பியிருந்தால், அவர்கள் மன்னரின் உளவாளிகளாய் இருப்பார்கள் என்ற சந்தேகத்தால் அவர்களுக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை. அவர்களின் வருகை டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னருக்கும், டேனிய போதகர்களுக்கும் அதிருப்தியை அளித்தது. அவர்கள் கப்பலிலிருந்து கரை வந்து சேர மூன்று நாட்கள் படகுகள் கொடுக்கப்படவில்லை. கவர்னர் ஹாசியஸ் (Hassius) யைச் சந்திக்க காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை காத்துக் கிடந்தனர். பல மணி நேரம் சந்தை வெளியில் தனித்து விடப்பட்டனர். முடிவில் போர்ச்சுக்கீசியருடைய அடிமைகள் தங்கும் இடத்தில் தங்கினர். ஆனால் இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மானியர்கள் சீகனுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தனர்.

அருட்பணி தொடக்கம்

சீகன்பால்க் கடவுளுக்கான அருட்பணியை உடனே ஆரம்பித்தார். முதலியப்பா என்ற இந்தியர் சீகனுக்கு உதவியாளரானார். சீகன் தன்னைச் சுற்றியிருந்த தொழிலாளர்களால் பேசப்படும் போர்ச்சுக்கீசையும், தமிழையும் கற்றார். ஒரு முதிய புலவரிடம் தமிழ் படித்தார். தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ என்பவர் மூலம் 5,000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்தார். கடற்கரை மணலில் விரலால் எழுதி தமிழ் எழுத்துக்களைப் பழகினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தமிழைத் தன் சொந்த மொழி போல் கற்றுக் கொண்டார்.

சீகன்பால்க், ஐரோப்பியர்களின் வீடுகளிலும், தோட்டங்களிலும் எடுபிடி வேலை செய்த இந்தியர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும், குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம் கொண்ட ஒரு ஐரோப்பிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தினார். ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்பானிய வேதாகமங்கள், தியானப் புத்தகங்கள் இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் வினியோகிக்கப்பட்டது. சீகன்பால்க் முயற்சியால் 1707 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் நாள், இந்திய கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு தனி ஆலயம் (புதிய எருசலேம் ஆலயம்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது 1717 ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ் லுத்தரன் திருச்சபைக்காக இத்தேவாலயம் மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி இன்னும் நிற்கிறது.

சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடி மிஷனை, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன. இவர்களால் கொடுக்கப்பட்ட பணத்தால் மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் வாங்கப்பட்டன. பொறையாறு என்னும் ஊரில் அழகிய தோட்டம் ஒன்றையும் சீகன் வாங்கினார். சென்னை மற்றும் கடலூரில் பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.

சிறைவாசம்

சீகனின் மிஷனெரிப் பணிக்கு, டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஹாசியஸ் பெரிதும் இடையூறாகவே இருந்தார். இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் கருதினார். அதனால் அவர் பிறமதத்தவர்களைச் சீகனுக்கு விரோதமாய் ஏவி விட்டார். ஐரோப்பியர் பலர் இந்தியரை அடிமைகளாய் வேலை வாங்கி வந்தனர். பொறையாரில் போதகர் ஒருவர் தாய்நாடு திரும்பும் போது தன் அடிமையை ஒரு பெண்ணிடம் விற்று விட்டுச் சென்றார். சீகனும், புளுட்ச்சோவும் இதை எதிர்த்தனர். ஓர் ஏழை விதவைக்கு நியாயம் கோரும் விஷயத்தில் ஹாசியஸ் சீகன் மேல் கோபம் கொண்டார். 1708 நவம்பர் மாதம் துப்பாக்கி ஏந்திய போலீசார் சீகனின் வீட்டிற்குள் நுழைந்து, ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த அவரைக் கைது செய்து கவர்னர் முன் நிறுத்தினர். தவறான குற்றச்சாட்டுகளால் சீகன் சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு மாத சிறைவாசத்தில், இரண்டு ஜெர்மன் வீரர்கள் ஜன்னல் வழியாக காகிதமும், பேனாவும், மையும் சீகனுக்குக் கொடுத்து உதவ, ‘The God pleasing State of a Christian’, ‘The God pleasing Profession of Teaching’ என்னும் இரு சிறிய புத்தகங்களை அவர் எழுதினார்.

தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு

[தொகு]

புதிய கிறிஸ்தவ விசுவாசிகள் பின்னோக்கிப் போகாமல் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க போதனைகள் மட்டும் போதாது, வேதமும் அவர்கள் கைகளில் அவர்களின் மொழியிலே கொடுக்கப்பட வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார். எனவே, சீகன், 1708 ஆம் ஆண்டு, அக்டோபர் 17 ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். மொழி அவருக்குப் புதிது. அதோடு இந்தியாவில் அப்போது யாரும் வேதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கவில்லை. ஆகவே வேதத்தில் பல வார்த்தைகளுக்குச் சரியான பதங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சுலபமானதாக இல்லை. கத்தோலிக்க சபையார் ஏற்கனவே தமிழ் ஆராதனை முறையில் சில பதங்களை மொழி பெயர்த்திருந்தனர். அவர்கள் பயன்படுத்திய முக்கியமான வார்த்தைகளையே சீகனும் உபயோகித்தார். உதாரணமாக கடவுள் என்னும் பதத்தை மொழிபெயர்க்க அவர்கள் உபயோகித்த ‘சர்வேசுரன்’ என்னும் வார்த்தையையே சீகனும் உபயோகித்தார். ஸ்கிமிட்டின் (Schmidt) கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு முதலானவைகளை ஆதாரமாகக் கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை 1711 மார்ச் 31இல் முடித்தார். பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகம் வரை மொழிபெயர்த்திருந்தார். (சீகன் பால்க் வேதாகமத்தில் முடிக்காமல் விட்டுச் சென்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை சென்னையில் மிஷனெரியாகப் பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் (Rev. Benjamin Schultze) முடித்து அச்சேற்றினார்). இந்தியாவில் தமிழ் மொழியில்தான் முதலாவதாக வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்தியச் சரித்திரத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி புதிய ஏற்பாட்டை அச்சேற்ற அநேகத் தடைகள் ஏற்பட்டன. ‘கிறிஸ்தவ அறிவு விளக்க சங்கம்’ (S P C K – Society for the Propagation of Christian Knowledge) அச்சு எந்திரமும், ஜெர்மன் நாட்டு நண்பர்கள் அச்செழுத்துக்களும் கொடுத்து உதவினர். ஆனால் அவற்றைக் கொண்டு வந்த கப்பலை பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. பின்னர் அவை சென்னை நகர கவர்னரால் மீட்கப்பட்டன. மேலும் அச்சு எந்திர முதலாளி வரும் வழியில் இறந்து போனார். எனவே அச்சு வேலை தெரிந்த டேனிய வீரன் ஒருவனைக் கண்டு பிடித்து, 1713 இல், அச்சிலேற்றும் வேலையை ஆரம்பித்தனர். ஜெர்மனியிலிருந்து வந்த எழுத்துக்கள் பெரிதாக இருந்தன. அதோடு காகிதப் பற்றாக்குறை வேறு. எனவே தரங்கம்பாடியிலேயே சிறிய எழுத்துக்களை திரும்பவும் வார்த்தனர். இவ்வளவு கடின உழைப்பிற்குப் பின் 1715ஜூலை 15 ஆம் நாள் தமிழ்ப் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இவ்வரிய தொண்டினால் வேதம் தமிழில் வாசிக்க ஏதுவாயிற்று. சீகன்பால்க்கின் தமிழ் நடை எளிமையானது. அவர் தம்மை சுற்றியிருந்த சாதாரண மக்களுடைய தமிழ் நடையிலேயே மொழிபெயர்த்திருந்தார். வீரமாமுனிவர் என்று போற்றப்படும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, சீகன்பால்க்கின் நடையை ஆதரிக்கவில்லை. இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே! முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்தான்.

1715ஆம் ஆண்டு, சீகன்பால்க் பத்து வருட மிஷனெரிப் பணிக்குப் பின்னர், தான் பிறந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றார். அவர் தன்னோடு மலையப்பன் என்ற இளைஞனையும் அழைத்துச் சென்றார். கடல் பயணத்தில் மலையப்பன் உதவியோடு பழைய ஏற்பாட்டில் யோசுவா புத்தகம் வரை மொழி பெயர்த்தார். 1715ஆம் ஆண்டு ஹாலேயில் வைத்து சீகன்பால்க் எழுதிய தமிழ் இலக்கணப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் மரியா டாரதியை திருமணம் செய்தார். இந்த புதுமணத் தம்பதியர் 1716ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியா வந்தனர். இவர்கள் 1716 ல் தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார்.

சீகன்பால்க் நூல்கள்

மொழிபெயர்ப்புப் பணியோடு சீகன்பால்க் சில நூல்களையும் எழுதினார். தென் இந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி ஜெர்மன் மொழியில் 44 அதிகாரங்கள், 332 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமும் (Ausführliche Beschreibung des malabarischen Heidentums), தமிழ் நாட்டு தெய்வங்களின் பரம்பரையைப் பற்றிய ஒரு புத்தகமும் (Genealogia der malabarischen Götter) எழுதினார். நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி என்ற புத்தகங்களை ஒன்று சேர்த்து ‘நானாவித நூல்கள்’ என்ற புத்தகத்தையும் ஆக்கினார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் (Grammatica Tamulica) எழுதினார். தமிழ் – ஜெர்மன் அகராதியையும் சீகன் எழுதினார். சபையார் பாடுவதற்காகப் பல பாடல்களை மொழிபெயர்த்தார். ஐரோப்பிய ராகங்களுக்கு இசைந்த ஞானப்பாட்டுகளும், தமிழ் ராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிச் சிறிய வினா – விடை புத்தகமும் சீகனால் எழுதப்பட்டது. இவர் தமிழ்நூல்களின் நூற்பட்டியல் (Verzeichnis der malabarischen Bücher) ஒன்றையும் தொகுத்துள்ளார்.

தமிழ் மொழிப்பற்று

ஐரோப்பியக் கிறிஸ்தவர்களில் அநேகர் தமிழையும், தமிழரையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தமிழ் மொழியை ஏளனமாக எண்ணி ஒதுக்கினர். தமிழரை அநாகரீகராகக் கருதினர். சீகன்பால்க்கும், புளுட்ச்சோவும் தொடக்கத்தில் இந்த எண்ணத்திலேயே இருந்தனர். அவர்கள் தமிழுடனும், தமிழருடனும் நெருங்கிய உறவு கொண்ட பின்னரே இந்த எண்ணம் நீங்கிற்று. இதுபற்றி சீகன்பால்க் குறித்திருப்பதாவது:

நானும் முதலில் தமிழ் மொழி தரம் குன்றியது என்றும், தமிழர் வாழ்க்கை தாறுமாறானது என்றும் நினைத்தேன். தமிழ் மொழியைப் பயின்றேன். தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தேன். தமிழரோடு உரையாடினேன், உறவாடினேன். அதன் பின்னர் என் எண்ணத்தை முற்றிலும் திருத்திக் கொண்டேன். தமிழ் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் இலக்கண விதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. எழுத்தாணியால் பனை ஓலையில் அழகாக எழுதும் திறமை வாய்ந்தவர்கள் தமிழர்கள். பல கலைகளில் புலமை எய்தியவர்கள். வாணிபத்திலும், ஓவியத்திலும் தேர்ந்தவர்கள். அவர்களுடைய ஆட்சிச் சட்டமும், நீதி நெறியும் மக்கள் நல வாழ்க்கைக்கு அரணானவை. மனோதத்துவ வேதாந்தப் பொருட்களிலும் அவர்களின் நூல்கள் வியந்து போற்றுதற்குரியது. வேதசரித்திர நுட்பங்களை அவர்கள் உரிய முறையில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

மறைவு

முதல் இந்திய புராட்டஸ்டண்ட் மிஷனெரியும், முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளருமான பர்த்தலோமேயு சீகன்பால்க் 37 வயது வரை மட்டுமே வாழ்ந்தார். 1719ஆம் ஆண்டு, பிப்ரவரி 23 ஆம் தேதி தரங்கம்பாடியில் காலமானார். அவரது உடல் தரங்கம்பாடியில் அவர் கட்டிய “புதிய எருசலேம்” ஆலயத்தில் பலிபீடத்தின் முன்பாக அடக்கம் செய்யப்பட்டது.

thanks to https://ta.wikipedia.org/s/81y

ஆதார் அடையாள அட்டையை (Aadhar Card) அந்திக்கிறிஸ்துவின் செயலாக கருதலாமா? விசுவாசிகள் நாம் அதை எடுக்கவேண்டுமா?

அந்திக்கிறிஸ்துவின் காலம் இன்னும் வரவில்லை. இன்னும் நிறைவேறவேண்டிய தீர்க்கதரிசன சம்பவங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் அந்திக்கிறிஸ்துவின் செயல் அவனுக்காக உள்ள ஆயத்த ஏற்பாடுகள் இப்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றன. ஆகவே இப்போதுள்ள சூழ்நிலையில் முதலாவது அவர் வருகைக்கு அல்லது நம் மரணத்துக்கு நம்மை ஆயத்தப்படுத்தி நம் சாட்சியுள்ள வாழ்க்கை மூலமாக கிறிஸ்துவை மக்களுக்கு காட்டி மற்ற ஆத்துமாக்களுக்காக நாம் ஜெபிப்பதும், சுவிசேஷம் அறிவிப்பதும், சுவிசேஷம் அறிவிக்கப்பட்டவர்களுக்கு இயேசுவின் இரண்டாம் வருகையைப்பற்றி அறிவிப்பதும் மிக முக்கியமாகிறது. கடைகளில் காணப்படும் கம்ப்யூட்டர் கோடுகள், கம்யூட்டர் அடையாளங்கள் லேசர் மூலம் அறியப்படுதல், சிப் (Chip) நம் கைகளில் பொருத்தப்படுதல் இவைகள் எல்லாம் பொருளாதார நவீன மயமாகக்கப்படுதலின் ஆரம்பம் ஆகும். இவைகளோடு நம் ஒத்துப்போக வேண்டியது இப்போதையகாலத்தின் கட்டாயம் ஆகும். இவைகளுக்கொல்லாம் நீங்கள் ஒத்துப்போகவில்லையானால் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளும் வாங்கமுடியாது. துணிகள், ரெடிமேட் உடுப்புகள் இவைகளில் விலைப்பட்டியலில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கம்யூட்டர் குறியீடு இவைகளையும் நீங்கள் தவிர்க்கவேமுடியாது.

அதுபோல ஆதார் அடையாள அட்டையையும் தவிர்க்க முடியாது. அதைக்குறித்து யாரும் இப்போதைக்கு பயப்படவேண்டாம். எத்தனையோ வருடங்களுக்கு முன்பே வெளிநாடுகள் முழுவதும் அந்த அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். ID-கார்டு முதல் டிரைவிங் லைசன்ஸ் வரை எல்லாவற்றிலும் உங்கள் அனைத்து பேங்க் கணக்குகளின் விவரம் உங்கள் குடும்ப விவரம், நீங்கள் பழைய குற்றவாளியாக இருந்தால் அதன் விவரம் அதோடு எத்தனை முறை நீங்கள் ஜெயில் போய் வந்தீர்கள், எத்தனைமுறை போலீஸில் தொடர்புக்கொண்டீர்கள் போன்ற அத்தனை விவரங்களும் அந்த ID-யிலும் டிரைவிங் லைசென்ஸ்ஸிலும் காணப்படும். உங்கள் பூர்வீகம் முதல் இப்போதுள்ள உங்கள் வாழ்க்கை விவரம் அத்தனையும் அந்த அடையாள கார்டுகள் மூலம் கண்டறியலாம்.

நம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள ஆதார் அடையாள அட்டை வெறும் ஆரம்பம்தான். இந்த அடையாள அட்டை இல்லாமல் நீங்கள் வெளியே போய்வரமுடியாது என்ற நிலை நிச்சயம் வரும். இன்னும் சிலகாலம் கடந்தால் உங்களைப்பற்றிய அனைத்து விவரங்களையும் நம் அரசாங்கம் தானாக அதில் பதியவைத்து வெளிநாடுகளில் இப்போது காணப்படும் ID-போல நம் நாட்டிலும் அடையாள அட்டை நடைமுறைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். இது மிகவும் அவசியமாகும். இதற்காக யாரும் பயப்படவேண்டாம். நாங்கள் எங்கள் குடும்பமாக ஆதார் அடையாள அட்டைக்கு முகத்தையும், கைரேகைகளையும்பதியவைத்து அரசாங்க கட்டளைக்கு கீழ்ப்படிந்துள்ளோம். இது அந்திக்கிறிஸ்துவின் கட்டளையல்ல. பயம் வேண்டாம்.

thanks to தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்

மடிக்கணிணி /செல்லிடப்பேசி மூலமாக வேத வசனத்தை வாசித்து பிரசங்கிக்கிறார்கள். இது சரிதானா?

பதில்: தவறில்லை. முழுவேதமும்,வேத அகராதிகளும் லேப் டாப்பில் காணப்படுகிறது. வாசிக்கிறதற்கு ஆராய்வதற்கு லேப்டாப் டேபிளில்,மொபைலில் உள்ள வேத புத்தகம் பிரயோஜனப்படுகிறது. பெரிய வேத புத்தகத்தில் எடுத்து செல்வதற்கு பதில் உள்ளங்கை அளவிலே உள்ள மொபைலில் முழுவேதமும் பெரிய எழுத்துகளின் அதை அகலப்படுத்தி வாசிக்கமுடிகிறது.

நவீன காலத்துக்கு ஏற்ப அப்படிப்பட்ட பொருள்களை பயன்படுத்துவது நல்லது. அந்த காலத்தில் பவுல் எருசலேம் முதல் இல்லிரக்கம் வரை நடந்து பிரயாணம் செய்து ஊழியம் செய்தான். இந்த காலத்திலும் இத்தனை வாகன வசதிகள் உள்ள காலத்தில் பவுலைப்போல நான் நடந்துதான் போய் ஊழியம் செய்வேன் என்பது முட்டாள்தனம். ஊழியத்துக்கு வாகனங்களை நவீன கருவிகளை பயன்படுத்துவதில் தவறில்லை.

ஆனால் மனிதர் பார்வையில் வேத புத்தகத்திலிருந்து தான் நான் பிரசங்கிக்கிறேன் என்று மக்கள் உணர லேப் டாப் உபயோகித்தாலும், அருகே வேத புத்தகத்தை மக்கள் பார்வையில் வைப்பது நல்லது என்னதான் நவீன கருவிகள் முழு வேதமும் கிடைத்தாலும் வேத புத்தகத்தை திறந்து வாசிப்பதுபோல் ஒரு சந்தோஷம். பயபக்தி,லேப்டாப்பிலோ, மொபையிலிலோ டேபிலட்டிலோ நிச்சயம் கிடைக்காது.

தயவுசெய்து புறமதத்தினர்களிடம் ஊழியத்துக்குபோகும்போது கை வேத புத்தகத்தை எடுத்துப்போவதே நல்ல சாட்சியாகும்.

thanks to தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்

முழு நேரக் கிறிஸ்தவப் பணிக்கு அழைப்பு கட்டாயம் தேவையா?

திட்டவட்டமாய் ‘அழைக்கப்பட்டலொழிய’ ஒருவரும் முழுநேரக் கிறிஸ்தவப் பணிக்குள் நுழையக்கூடாதென்பது பெருவாரியான கிறிஸ்தவர்களின் கருத்து. மற்றவர்களோ அது ஒவ்வொருவருடைய ‘தெரிந்தெடுப்பை’ பொறுத்தது எனக் கருதுகின்றனர். இதைக்குறித்த குழப்பமே அறுவடைப்பணியில் போதுமான ஊழியர் இறங்காததற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகும். இதைக்குறித்து திருமறை கூறுவதென்ன? தெளிவான அழைப்பை வலியுறுத்த அடிக்கடி பயன்படுத்தப்படும் திருவசனம் எபி 5:4′ ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்திற்குத் தானாய் ஏற்படுகிறதில்லை’ இங்கு இரு முக்கிய காரியங்களை நாம் கவனிக்கக் தவறக்கூடாது. முதலாவது இங்கு சொல்லப்படுவது பொதுவான ஆசாரியத்துவப் பணியைப் பற்றியல்ல,’பிரதான ஆசாரியனாய்’சிறப்பான பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதைக் குறிக்கிறது(வச 1), இரண்டாவது புதிய உடன்படிக்கையில் ஆசாரியத்துவம் மாற்றப்பட்டுவிட்டது. நமது அண்ணன் இயேசு ஆரோனின் வரிசையிலல்ல. மெல்கிசெதேக்கின் வரிசையில் வந்துள்ளார்(எபி 7:11-13). அவர் யூதா கோத்திரத்தில் தோன்றினார். அந்தக் கோத்திரத்தைக் குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை(வச 14). எனவே ஊழிய அழைப்புக்கான கேள்விக்கு பதிலளிக்க எபி 5:4ஐ மேற்கோள் காட்டுவது பொருத்தமல்ல.

மோசே அல்லது பவுலைப்போல விவரிக்கக்கூடிய வகையில் அழைக்கப்பட வேண்டுமென்று நீங்கள் காத்திருந்தால் ஏமார்ந்துபோவீர்கள். இவர்களைப் போன்றோர் யூதச் சமுதாயத்திற்கும் கிறிஸ்தவ சபைக்கும் அடித்தளமிடும் காலங்களில் முக்கிய பங்கு வகிக்க அழைக்கப்பட்டவர்கள். சபை சரித்திரத்தில் இன்றைய நாள் ‘பதினோராம் மணி’ வேளையாகும். ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்று சாக்குச் சொல்லி நிற்போரை பார்த்து நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன? என அறுப்பின் ஆண்டவர் கடிந்துகொள்வார்(மத் 20:1-7). அழைப்பு வருமென்று காத்துக்கொண்டு அவர்கள் கடைத்தெருவில் நின்றுக் கொண்டிருந்திருக்கக்கூடாது. மாறாக, அவர்கள் திராட்சத் தோட்டத்திற்குச் சென்று வேலைக்கு தாங்கள் தேவைப்படுகிறோமாவெனக் கேட்டிருக்கவேண்டும். உலக வேலைகளைத் தேடும்போது ஒருபடி தவறாது பல கம்பெனிகளில் ஏறியிறங்கி, எந்த கம்பெனி வாசல் திறக்கிறதோ அதைக் கர்த்தரின் சித்தமென எடுத்துக்கொள்ளுகிறோமல்லவா? அதே தத்துவத்தைக் கர்த்தரின் பணியில் இறங்கவும் பயன்படுத்தவேண்டும்.

கிறிஸ்தவர்களில் பலர் வேலையில்லாமல் அல்லது தங்கள் படிப்பிற்கும் பயிற்சிக்கும் தகுதியற்ற குறைந்த வேலையில் இருக்கிறார்கள். ஆனாலும் போதுமான வேலையாட்களில்லாத இறையரசுப் பணியைக்குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை(மத் 9:37). ‘ஆண்டவரே, என்னை அழையும்’ என்று ஜெபிக்காதீர்கள். ‘என்னை அனுப்பும்’ என்று ஜெபியுங்கள்(மத் 9:38). ஏசாயாவைப் பார்த்து ஆண்டவர் ‘உன்னை நான் அனுப்பட்டுமா?நீ நமது காரியமாய் போவாயா? என்று கேட்கவில்லை. மாறாக அவர் ‘யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாய் போவான்?என்றார் (ஏசா 6:8) பொதுவான அந்த அழைப்பிற்கு ஏசாயா தனிப்பட்ட பதில் கொடுத்து முன்வந்தான். ‘இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்’. அதற்குப் பின்னர்தான் ஆண்டவர் அவனைப் பார்த்து ‘நீ போ’ என்றார்(வச 9) நாம் ஊழியத்திற்கு போக தன்னார்வமாய் முன்வரும்போதுதான் ஆண்டவர் நம்மை அனுப்புவார்.

அழைக்கப்பட்டோர் அநேகர். தெரிந்துக்கொள்ளப்பட்டோரோ சிலர். சுவிசேஷத்தில் இருமுறை இவ்வாசகத்தை இயேசு மொழிந்தார். ஒன்று திராட்சைத்தோட்ட உவமையில், அடுத்தது கல்யாண விருந்து உவமையில்(மத் 20:16,22:14). இவ்விரு உவமைகளும் தேவ அழைப்பிற்கு சரியாய் பதில் கொடுக்க வேண்டிய மனிதனின் பொறுப்பை வலியுறுத்துகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘அழைப்பிற்குக் கீழ்ப்படிவோரே தெரிந்துக் கொள்ளப்பட்ட வர்களாம்’. தங்கள் பிள்ளைகளை ஆண்டவரின் திருப்பணிக்கு அர்ப்பணிக்கும் பெற்றோரின் விருப்பங்களையும் அவர் கனம் பண்ணுகிறார். தனக்கொரு மகனைக் கர்த்தர் கொடுப்பாரானால் அவனை அவரது பணிக்கே கொடுத்து விடுவதாக அன்னாள் தானாகவே வாக்குக் கொடுத்தாள். அவளது இதய வாஞ்சையைக் கர்த்தர் அருளிச் செய்தார். அவள் தனது வாக்கைக் காப்பாற்றினாள். அதற்குப் பல ஆண்டுகள் கழித்துதான் கர்த்தர் நேரடியாய் சாமுவேலை அழைத்தார்(1 சாமு 1:11,27,28, 3:8,9) மிகச்சிறிய வயதிலிருந்தெ இந்நாட்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை டாக்டராக, எஞ்சினியராக வேண்டுமென்று ஊக்குவித்து அப்படியே ஆக்கிவிட தேவையான ஏற்பாடுகள் அத்தனையையும் செய்யும்போது அதே விதமாய்க் கர்த்தரின் பணிக்கும் பிள்ளைகளை ஆயத்தப்படுத்தாதது ஏனோ?

நான் முழுநேரப் பணிக்குள் இறங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தனது முதற்பேரான என்னை எனது அம்மா ஆண்டவரின் பணிக்கு ஒப்புக்கொடுத்து விட்டார்கள். நான் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிக்கொண்டிருந்தாலும் எனது தருணம், தாலந்து, தனம் அத்தனையையும் மிஷனரிப் பணியில் வார்த்துவிட வேண்டுமென்ற வாஞ்சை எனக்குள் வளர்ந்துக்கொண்டேயிருந்தது. இவ்வித ‘விருப்பத்தை’ எனக்குள் உண்டாக்கியவர் தேவனே என நான் புரிந்துக்கொண்டேன்(பிலி 2:13). நான் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை, தரிசனம் ஒன்றும் காணவில்லை. எனக்குக் கிடைத்தது எளிமையான வழிநடத்துதல் மட்டுமே, எனது தீர்மானத்தை என் மனைவியோடு பகிர்ந்துக்கொண்டபோது அவள் மனமகிழ்ந்தாள். என் அம்மா கண்ணீரோடு என்னை அணைத்துக்கொண்டார்கள். கர்த்தர் சித்தம் ஆகட்டும் என்றனர். எனது மாமனார், மாமியார், கணவன் முழுநேரப் பணிக்குள் காலெடுத்து வைக்கையில் மனைவியும் அவனோடு செல்வதே பொதுவான சூழலில் விரும்பத்தக்கது. ஆபிரகாமின் அழைப்பே சாராளுக்கும் போதும்(ஆதி 12:5). நான் அழைக்காதிருக்க நீ ஏன் வந்தாய்? என்று கடவுள் யாரையும் கேட்டதாய் நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. மாறாக, நான் அழைத்தபோது நீ ஏன் வரவில்லை? என்று ஆண்டவர் வினவக்கூடிய கிறிஸ்தவர்கள்தான் ஏராளம் . ஏராளம் . கீழ்ப்படியாதவரே கீழ்ப்படிகிறவர்களைவிட அதிகம். எல்லோரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பதுரும் நல்லதல்ல. சிலவேளைகளில் மூத்தவர்களும் தீர்க்கதரிசிகளுங்கூட உங்களை வழி பிசகக் செய்யமுடியும்.(1இராள 14:,கலா 1:16). என்னைத் தவறாய் புரிந்துக் கொள்ளவேண்டாம். தமது பிள்ளைகள் யாவரும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு முழுநேர ஊழியத்திற்கு வந்துவிட தேவன் எதிர்ப்பார்க்கிறாரென்று நான் சொல்லவில்லை. நான் சொல்வது என்னவென்றால், தேவை மிகுதி, காலம் கொஞ்சம், தெரிந்தெடுப்பு உங்களுடையது. முதல்அடி எடுத்து வையுங்கள். புறப்படுங்கள். நீங்கள் இடதுபுறம் அல்லது வலதுபுறம் சாய்ந்தால், கடவுள் பின்னலிருந்து சத்தம்கொடுத்து உங்களை நேர்வழியில் நடத்துவார்(ஏசா 30:21).

thanks to தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்

ஆவிக்குரிய சபை, ஆவியில்லா சபை என்று சபை பிரிவுகள் உண்டா?

ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்

சில மனநலம் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அந்நியபாஷை பேசுகிற சபைகள் ஆவிக்குரிய சபைகள் என்றும் அந்நிய பாஷை பேசாத சபைகள் ஆவியில்லா சபைகள் என்று பேசிவருகிறார்கள். என்னவோ இந்த பெந்தேகோஸ்தே சபைகள் எல்லாம் ஆவியானவரை மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டதுபோலவும். இவர்கள் பார்த்து யாருக்கு ஆவி இருக்கிறது, யாருக்கு ஆவியில்லை நியாயந்தீர்ப்பது இவர்களின் அறியாமையை அப்பட்டமாக காண்பிக்கிறது. 

முதலில் இவர்களின் கள்ளத்தனம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இவர்கள் சொல்லுகிற ஆவியில்லா சபை என்பது என்னவென்றால், தென்னிந்திய திருச்சபை, லுத்தரன் சபை, மெதடிஸ்டு சபைகள், பாப்திஸ்து, மற்றும் பிரதரன் சபைகளை ஆவியில்லா சபைகள் என்று சொல்லுவார்கள். இந்த சபையை சேர்ந்த விசுவாசிகள் எல்லாம் ஆவியில்லாதவர்கள் என்றாலும் அவர்கள் காணிக்கை கொடுத்தால் அது ஆவியானவர் கொடுத்தார் என்று அப்பட்டமாக அந்தர்பல்டி அடிப்பார்கள்.  இவையெல்லாம் ஆவியில்லாத சபைகள் என்று தெரிந்தும் சபை கட்டிடம் கட்டுவதற்கு, நிலம் வாங்குவற்கு, மாதாந்திர வசூல் போன்ற காரியங்களில் கல்லா கட்டுவார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இன்றளவும் வட இந்தியாவுக்கு மிஷனெரிகளை அனுப்பி வைப்பதில் முன்னணியில் இருப்பது இவர்கள் சொல்லுகிற அந்நியபாஷை பேசுகிற சபைகள் அல்ல, மாறாக இவர்களின் பாஷையில் சொல்லுகிற ஆவியில்லா சபைகளே…

ஆவியில்லா சபையை சேர்ந்தவர்கள் மொழிப்பெயர்த்து தந்த வேதத்தை வைத்துக்கொண்டு அந்த சபைகளை ஆவியில்லா சபைகள் என்று சொல்வது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா? இன்றுவரை எந்த பெந்தேகோஸ்தே சபையாகிலும் வேதாகம மொழிப்பெயர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறதா? இவர்கள் சொல்லுகிற ஆவியில்லாத சபையாகிய பிரதரன் சபையை சேர்ந்த சகோ. தேவவரம் அவர்கள் ஆந்திரா மற்றும் மத்தியபிரதேச  எல்லையில் வாழ்கிற கோயா இன மக்களின் எழுத்தில்லாத மொழிக்கு எழுத்தும் உருவாக்கி அந்த மொழியில் வேதாகமத்தையும் மொழிப்பெயர்த்து இந்த முப்பது ஆண்டுகளில் அவர் சுகவீனம் அடைந்து இரண்டு கால்களும் செயல் இழந்து சக்கர நாற்காலியில் அந்த பணியை ஏறக்குறைய நிறைவு செய்து இருக்கிறார். 

இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து முக்கிய மொழிகளிலும் வேதாகமத்தை மொழிப்பெயர்த்தவர்கள் பர்ப்திஸ்து லுத்திரன் சபையை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லாம் ஆவியில்லாத சபைகள் என்றால் இவர்கள் மொழிப்பெயர்த்து தந்த வேதாகமத்தை தூக்கியெறிந்துவிட்டு இவர்களுக்கு புதிய வேதாகமத்தை மொழிப்பெயர்க்க வேண்டியதுதானே?

thanks tamil vethaakama kalanjiyam

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவர்கள் கவனத்திற்கு!

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது ஆபத்து என ஆஸ்திரியாவின் டான்யூப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் அவர்கள் நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ரத்தத்தில் கலந்து பிபியை அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்துவந்தால் இதய பிரச்னைகளுடன், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

05:00 PM, 6 ஆகஸ்ட் 2024

thanks to way2news

2020-ஐ நோக்கி . . . .

ஆசிரியர்: டேவின் தன்ராஜ் 

இரண்டாயிரத்து  இருபதை நோக்கி

இயேசுவின் அடிச்சுவடுகளில்

இடதுவலது என்று விலகாமல்

இனியப்பயணம் துவங்கிடுவோம்

சீர்திருத்த நாயகனாம் – இயேசுவின்

சீர்மிகுச்சீடர்களாய்

சேதாரம் சிறிதுமின்றி-இந்தியாவை

செதுக்குவோம் சத்தியத்தால்

மங்கியணையும் மனித நேயத்தை

மீண்டும் எரியச்செய்திட

மாறா கடவுளின் நற்செய்தியை

மானிடர்க்கு பகிர்ந்தளிப்போம்

அறிவியலை ஆய்வுச் செய்திட

ஆவிக்குரியவன் சளைத்தவனல்ல

அரியப் பலப்  படைப்புகளை

அள்ளித்தருவோம் மானிடருக்காய்

ஆண்டவரை அறிந்துக் கொண்ட

ஆவிக்குரியத் தலைவர்கள்

அரசியலை அழகு செய்திட

ஆர்வமுடன் உழைத்திடுவோம்

திரைப்படத் தயாரிப்பாளர் – பலர்

திருச்சபையைத் தேடி வரும்

திறமை மிகு கலைஞர்களை 

திருச்சபை வழங்கிடட்டும்

கால்டுவெல் போப்பைப் பின்பற்றிய

கலையாகிய இலக்கியத்தை

கர்த்தரின் பாதங்களுக்கு-கருத்தாய்

காணிக்கை ஆக்கிடுவோம்

பெண்களை முடக்கி வைக்கும்

பொய்களைச் சுட்டெரிப்போம்

பெண்களும் இறைச் சாயலென்று

பெருமையுடன் தோள்கொடுப்போம்

ஊடுருவிய ஊடகத்தால் – உள்ளம்

ஊனமாகியச் சிறுவர்களை 

உயிர்க் கொடுத்த இயேசுவிடம்

உண்மை வழி நடத்திடுவோம்

வாலிபர்களின் வளங்களை-சபை 

வளாகத்தில் முடக்கிடாமல்

வாழ்வுத்தரும் பல்துறைகளில்

வளர்ந்து வர உதவிடுவோம்

சாதி என்னும் பேய்களை

சபையை விட்டு துரத்திடுவோம்

சாட்சியுள்ள சமுதாயமாய்

சடுதியாய் எழும்பிடுவோம்

சூழலை கெடுக்கும் சங்கதிகளை

சபையில் சொல்லி எச்சரிப்போம்

சூழலை காப்பது கடமையென்று

சபையாருக்கு சொல்லித்தருவோம்

சகலமும் சந்தை மயம்

ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்

இறைவன் கொடுத்த 

இலவச தண்ணீரை-மனிதன்

பைகளில் அடைத்து

பணம் பண்ணுகிறான்

உடுப்பு கடைக்கு

உடையெடுக்கச் சென்றால்-வியாபாரி

உடுத்தி இருப்பதையும்

உருவப் பார்க்கிறான்

மழைக்குக் காரணமான

மரங்களை அழித்து விட்டு

மழைக்கு யாகம் பண்ணுகிறான்

மனிதன் மாயம் பண்ணுகிறான்

கார்ப்பரேட்டு களவாணிக்கு

காவல் பண்ணுகிறான் – அதுவே

ஏழைகள் என்றால் 

ஏளனம் பண்ணுகிறான்

மனசாட்சி செத்தவன்

மருத்துவன் ஆகிறான்

மருத்துவம்  வியாபாரமானதால்

மனித நேரத்தை மறந்து போகிறான்

மெய்யை மைய்யால் மறைத்து

பொய்யை பரப்புகிறான்

பத்திரிகை யாளன் -தன்

பையை நிரப்புகிறான் 

நவீன இசையுடன்

நயவஞ்கத்தை கலந்து

உலாவவிடுகிறான் – ஊடகத்தான்

ஊசியில் விஷம் ஏற்றுகிறான்

விளைச்சல் நிலங்களை

வீட்டு மனையாக்கிவிட்டு – வியாபாரி

விலைவாசி உயர்வு என்று

வேடம் போடுகிறான்

நலிந்தவன் நம்பிக்கையோடு

நீதிமன்றம் நாடுகிறான்

நீதியரசரோ வழக்கில்

நீசருக்கு துணைபோகிறான்

சாலையோர சிற்றண்டிகள்

சாகக்கிடக்குது-அந்நிய

மெக்டொனால்டும் கேஎப்சியும்

மொத்தத்தையும் வாரிச்சுருட்டுது

சமுதாயத்தின் அவலங்களை

சிந்திக்காத கிறிஸ்தவனே

சபையில் நிரம்பி வழிகிறான்

சவாலகளை சந்திக்க மறுக்கிறான்

சிந்திக்க மறுத்து கிறிஸ்தவன்

சீரழிந்து போகிறான்

சமூகத்தை மறந்து- சபையில்

சத்தம் போடுகிறான்

விசாவுக்கு ஜெபம்

வேலைக்கு ஜெபம் – என்று

கோபுரம் கட்டுகிறான்-மதவாதி

கல்லாவை நிரப்புகிறான்

கிறிஸ்தவன் திருந்துவது-எப்போது

கேடுகள் மறையும் அப்போது

சிந்தித்தால் மலரும் புதுயுகம்

சாதிக்க முயலுவோம் அனைவரும்

கர்த்தர் தந்த கருவிகளை . . . . . .

ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்

இறைவனுடன் இடைப்படும் நேரத்தில்

இனிய ஒலியெழுப்பி

இடையூறு செய்கிறது

இரக்கமற்ற கைப்பேசி

அன்பான மனைவியுடன்

அளவளாவிடும் நேரத்தை

அளவில்லாமல் அபகரிக்கிறது

ஆபத்தான அலைபேசி

களைத்து வரும் கணவருக்கு

களைப்பு தீரும் நேரத்தை

கருணையே இல்லாமல்

களவாடுகிறது கைப்பேசி

குழந்தைகளுடன் கொஞ்சும் நேரத்தில்

குறுக்கே வந்து

குழப்பம் தருகிறது

கொலைகார தொலைபேசி

பள்ளிச் சென்றிடும் பிள்ளைகளை

பாழும்கிணற்றில் தள்ளிவிட

பாதைக் காட்டி வருகிறது

பாழாய்போன தொலைபேசி

பெற்றோர் பிள்ளை உறவுகளை

பிரித்து வைத்து 

பதம் பார்த்து

பேதம்பண்ணுது தொலைபேசி

மெய்தகவலை பொய்யென்றும்

பொய்தகவலை மெய்யென்றும்

புளுகிவருகுது புரட்டி வருகுது

புண்ணாக்கு தொலைபேசி

உழைப்பை கெடுத்து

உணவை தடுத்து

உயிரை வாங்குது

உதவாக்கரை தொலைபேசி

காதல் வலையில் தள்ளுகிறது

காமப்பசிக்கு அழைக்கிறது

கயவர்கள் கையிலுள்ள

 களவாடிய கைப்பேசி

கர்த்தர் தந்த கருவிகளை

கருத்தாய் பயன்படுத்தி

கர்த்தருக்கு மகிமையை

கருத்தாய் செலுத்திடுவோம்