எழுப்புதல்! எழுப்புதல்! எது உண்மையான எழுப்புதல்

Share this page with friends

இன்று யாரை பார்த்தாலும் எழுப்புதல் என்று சொல்வதை கேட்கிறோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் என்னை கர்த்தர் கடைசிக் கால எழுப்புதலுக்கென்று அழைத்து இருக்கிறார். என்னை கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களை செய்ய போகிறார். நீங்களும் எழுப்புதலில் பங்கடையுங்கள் என்றும் எழுப்புதல் ஜெப வீரர் என்றும் எழுப்புதல் பிரசங்கியார் என்றும் எழுப்புதல் தான் என் தாகம் என்று பேசும் அநேக வீர வசனங்களை நாம் கேட்டு கொண்டு வருகிறோம். எழுப்புதல் அடைய இந்த இந்த திட்டங்களை எல்லாம் கர்த்தர் கொடுத்தார் என்று திட்டம் இடுகிரவர்களும் உண்டு. எப்படியாயினும் இதை குறித்து தெளிவு வர சகோதரர்கள் சிலர் இதை குறித்து ஒரு பதிவு போடுமாறு வற்புறுத்தியதின் பேரில் இந்த பதிவு.

??சிறுவயது முதல் மிஷன் வீட்டில் வளர்க்க பட்டதின் பேரில் அன்று ஒவ்வொரு சபைகளிலும் எழுப்புதல் கூட்டங்கள் நடந்து வந்ததை கவனித்து இருக்கிறேன். அதன் நோக்கம் விசுவாசிகளை ஜெபத்தில், விசுவாசத்தில், பரிசுத்தம் மற்றும் வசன அறிவில் வளர செய்வதற்கும் அதோடு சிலர் விடுதலை பெற்று ஞானஸ்தானம் பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான் இவைகள் நடந்தது. சபை வளர அநேக ஜெபங்கள், உபவாச ஜெபம், அற்புத விடுதலை மற்றும் convention கூட்டங்கள் நட்த்தி இருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அது ஒரே ஃபேஷன் ஆக ஆகிவிட்டது. சபையில் பிரச்சினை வந்தாலும் உபவாச ஜெபம் நடத்தி அவைகளை பரிகரித்த போதகர்களும் உண்டு. சில தீர்க்கதரிசிகள் வந்தால் எல்லா பாவங்களையும் வெளிப்படுத்தி விடுவார்கள் என்று ஒளிந்ததும் உண்டு. சிலவேளைகளில் தீர்க்கதரிசிகழுக்கு பயந்து ஆண்டவரிடம் எல்லா பாவத்தையும் அறிக்கை பண்ணி விட்டு ஆலயம் சென்று வந்து மறுபடியும் பழைய வழிகளில் நடந்த அனுபவம் உண்டு. எப்படியாயினும் அன்றைய நோக்கம் சபை பரிசுத்தம் மற்றும் பக்திவிருத்தி ஆகும். கொஞ்சம் தொடர்ந்து கவனிப்போம்.

A. கடைசிக்கால எழுப்புதல் மற்றும் அந்த ஊழியத்திற்காக கர்த்தர் யாரையும் அழைக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி சொல்லி தங்களை ஒரு பொருட்டாக எண்ணுவதே ஒருவித மன நோய். சீஸர்களை கர்த்தர் அவரோடு கூட இருக்கவும், அவரை போல மாறவும், ராச்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்கவும் அல்லது பிரசங்கம் பண்ணவும் தான் தெரிந்து கொண்டார். அவரில் அன்பு கூறவும், அவர் கற்பனைகளை கைகொள்ளவும், கனி கொடுக்கவும் தான் கர்த்தர் அழைத்து இருந்தார். அப்படி அழைக்க பட்டவர்கள் கீழ்படிந்து வந்த போது சில வாக்குதங்களை கொடுத்தார். என்னை விட பெரிய காரியங்கள் செய்வீர்கள் என்றும், உலகத்தில் கடைசிபரியந்தம் உங்களோடு இருப்பேன் என்றும், உங்களை மணுசரை பிடிக்கிறவர்கலாக்குவேன் என்றும் வாக்குத்தத்தம் கொடுத்தார். அப்படி அதை விசுவாசித்தவர்களுக்கு அதிகாரம் மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அற்புத அடையாளங்கள் செய்யும் கிருபையை கொடுத்தார். அந்த கிருபை அவர்களை ஜனத்தின் உணர்வுக்கு என்று பயன்படுத்தியது. அது அவர்கள் எண்ணங்களுக்கு திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நடந்த ஒரு எழுச்சி. பவுலின் அழைப்பு கர்த்தரின் நாமத்திற்கு வெகுவாக பாடுபட வேண்டும். பவுல் சொல்கிறார் பரிசுத்தத்திற்கே அழைக்கப் பட்டு இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். இன்னும் ஆபோஸ்தலர்கள் வரப்போகிற மகிமையான சுதந்திரத்திற்காக அவரோடு கூட பாடு பட அழைக்கப் பட்டு இருக்கிறீர்கள் என்று குறிப்பிடுகின்றனர். ராஜரீக வம்சமாயும், ஆசாரிய கூட்டமாக தெரிந்து கொண்டு நம்மை பாடுகளின் வழியாக அவரது சுவிசேஷம் அறிவிக்க தான் கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டு இருக்கிறார். அவரோடு நடக்கும் அழைப்பின் நோக்கம் பரிசுத்தத்தின் வலிமை போன்றவற்றை அறிந்தால் நாம் போகிற இடமெல்லாம் நிச்சயம் அவரது கிரியைகள் நடக்கும்.

B. எப்போதும் எழுப்புதல் விளம்பரத்தால் மற்றும் பிரபலியத்தால் வராது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

500 பேர் இயேசு கிறிஸ்து மருரூபமாகி போனதை கண்டார்கள். ஆனால் 120 பேர் அவர் சொன்ன வார்த்தையை நினைவுகூர்ந்து ஜெருசலேமில் ஜெபித்து துதித்து ஒருமனப்பட்டு காத்திருந்தனர். அவர்களுக்கு தெரியும் பரிசுத்த ஆவி ஊற்றப்படவேண்டும். எந்த விளம்பரம் இல்லை. அடுத்து என்ன நடக்கும் அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது இயேசு கிறிஸ்து சொன்னார் பரிசுத்த ஆவி உற்றப்படுகிறது வரை ஜெருசலேம் விட்டு போக கூடாது. அதற்கு கீழ்படிந்து காத்து இருந்த பின்னர் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டார் அது விளம்பரமாக மாறியது. எழுப்புதலின் ஆயத்தம் விளம்பரம் ஆக்கப்படுகிறது என்றால் அது எழுப்புதல் அல்ல வஞ்சகம். கர்த்தர் தமது நாமத்தை பிரஸ்தாபபடுத்த மனித பிரபல்யம் தேவை யில்லை. அவர் நாம மகிமை யடைய மனித வழிகள் ஒன்றுக்கும் உதவாது. அவர் தமக்கு பிரியமானதை தமது கரத்தினால் வாய்க்கப்பண்ணுவார். அந்தரங்கத்தில் அவர் செய்ய சொன்னதை செய்தால் வெளியரங்கமாக பதில் அளிப்பார். அந்த வெளியரங்க கிரியைகளை கொண்டு கர்த்தர் தமது நாமத்தை மகிமை படுத்துவார். நாம் இன்று சுவிசேஷ பிரபல்யத்தை விட்டு விட்டு வெளிபிரகாரமான ஜெபம் மற்றும் உபவாச பிரபல்ய வீரர்களாக மாறி விட்டோம். தெருக்களில் சுவிசேஷம் அறிவிக்க அழைக்க பட்ட நாம் ஜெப வீரன் என்று சொல்வதில் பெருமை பட்டு கொள்கிரோம். நமது ஜெப வீரன் என்கிற சாட்சி அவர் மூலம் வந்திருந்தால் எழுப்புதல் பிரபலமாகி இருந்து இருக்கும். பரிசேயர்களின் ஆவி உள்ளே வந்து விட்டதே. ஒரு காலத்தில் எழுப்புதல் என்று மாற்றம் கண்ட ஐரோப்பிய கண்டங்கள் இன்று எப்படி இருக்கிறது சற்று சிந்தித்து பார்ப்போம்.

C. எழுப்புதல் இப்படி தான் நடக்கும் என்று அறுதியிட்டு அல்லது திட்டமிட்டு சொல்ல முடியாது. இது உணர்ச்சிவசப்பட்டு நமது எண்ணங்களுக்கு உட்பட்டு நிதானித்து கொள்ள முடியாது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையின் படி ஆவிக்குரிய காரியங்களை நிதானித்து கொள்ள வேண்டும்.

தேவனை துதித்து, கிறிஸ்துவை பணிந்து தேவாலயத்தில் கூடி அவரை மகிமை படுத்தி ஒருமணபட்டு ஒரிடத்தில் கூடி வந்தனர். அவர்கள் எதிர்பாராத வகையில் எதிர்பாராத விதத்தில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றபட்டார். அதன் விளைவு, மனம் திரும்பி, கிறிஸ்துவை ஏற்று கொண்டு மாறுபாடான சந்ததியை விட்டு விலகி, உபதேசம், அப்பம் பிட்குதல், ஜெபம் மற்றும் ஐக்கியத்தில் தரித்து இருந்தனர். இது எல்லாம் தானகவே நடந்தது. கோர்நெல்யுவின் வீட்டில் அவன் ஜெபிக்கிறவன், தானதர்மம் செய்கிறவன். தூதனை சந்தித்து பேதுருவை அழைத்து தேவ செய்தி கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பாடுகிறார். ஆனால் விருப்ப மில்லாத பேதிருவை கர்த்தர் தரிசனம் கொடுத்து அனுப்புகிறார். அங்கு விருப்பமில்லாத பேதுரு வசனம் பேசின போது பரிசுத்த ஆவி ஊற்றபட்டார். விளைவு எல்லாரும் ஞானஸ்தாணம் எடுக்கிறார்கள். எபேசு பட்டணத்தில் பவுல் போகிறார். பரிசுத்த ஆவியின் அனுபவம் உண்டா என்று கேள்வி எழுப்புகிறார்? இல்லை என்றவுடனே, கைகளை வைத்து ஜெபிக்கும் போது பரிசுத்த ஆவி ஊற்றபட்டு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். பின்னர் பவுல் கிட்டதட்ட இரண்டு வருடம் திறன் என்கிறவனுடைய வித்தியாசாலையில் இயேசு கிறிஸ்துவே கர்த்தர்வென்று திருஷந்தபடுத்துகிரார். விளைவு, முழு பட்டணம் கிறிஸ்துவின் வசனத்தை அறிகிறது. கர்த்தர் அற்புதங்கள் செய்தார். கர்த்தருடைய வார்த்தை விருத்தி அடைந்தது. மந்திரவாதிகள் கிறிஸ்துவை சந்திக்கின்றனர். எனவே நமது நோக்கம் நிதானித்து பார்க்க படவேண்டும். வெறும் இயேசு வேண்டும் என்று சொல்கிற கூட்டத்தையும் தாண்டி மனம் திரும்பி, பாவத்திற்காக வருந்தி பாவ அறிக்கை பண்ணி, ஞானஸ்தானம் எடுத்து, பரிசுத்த ஆவியின் நிறவை பெற்று பரிசுத்த ஜீவியம் செய்வதே சுவிசேஷத்தை அறிவிப்பதில் உள்ள மெய்யான நோக்கம் என்று நிதானித்து பார்த்தால் எழுப்புதல் நடை பெற காத்திருக்க வேண்டாம். அது தானாக நடந்து கொண்டே இருக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. இன்று அற்புதம் மற்றும் ஆசீர்வாதமாக இருக்கும் இந்தியா ஆசீர்வாதமாக இருக்கும் தமிழ் நாடு போன்ற நோக்கங்களை எண்ணி கொண்டு எழுப்புதல் வரும் என்று காத்திருந்தால் மிஞ்சுவது ஏமாற்றமே. நோக்கம் நிதானித்து அறியப்பட வேண்டும். ஜெபம் மட்டும் போதாது வசனம் விருத்தி யடையவெண்டும். அந்தரங்கத்தில் ஜெபித்து வெளியரங்கமாக கிறிஸ்துவை முன்னிட்டு சத்தியத்தை சத்தியமாக பேசினால் நம்மால் திட்டமிட முடியாத தேவ திட்டத்தில் உள்ள எழுப்புதல் உண்டாகும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

D. எழுப்புதல் தாமாக தனி மனித வஞ்சையையும் தாண்டி தேவ தீர்மானத்தில் சமரசமின்றி வருவது.

கல்வியறிவு இல்லாத பேதுருவை கர்த்தர் யூதர்களுக்கு பயன்படுத்தினார். நன்கு கற்று தேர்ந்த பவுலை புரஜாதிகளுக்கு பயன்படுத்தினார். பரிசுத்த மாற்றம் பெற்றவர்கள் எந்த சமரசமும் செய்ய வில்லை. அவர்கள் அற்பணிப்பு பெரியது. இன்று வாஞ்சை உண்டு ஆனால் அற்பணம் இல்லை. தேவ திட்டத்திற்கு நம்மை அற்பணிக்காமல் நமது திட்டத்திற்கு தேவனை நிர்பந்தம் செய்கின்றோம். பாரம்பரியம் விடமாட்டார்கள் ஆனால் எழுப்புதல் வேண்டும். இந்த சமரச போக்கினால் தான் charismatic எழுப்புதல் என்று ஒன்று வந்தது. முடிவு மறுபடியும் பழைய வழிகளில் எல்லாம் போய் விட்டது. நாங்கள் இங்கேயும் இருப்போம் அங்கேயும் இருப்போம். ஒருவன் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. இப்படி பட்டவர்கள் தங்கள் வழிகளில் நிலையற்றவர்கள். பாரம்பரிய சபையின் பாரம்பரியம் மாறுவதாக இருந்தால் அதுதான் எழுப்புதல். ஜெபத்தில் சமரசம் செய்யாத பரிசுத்தம், வசனம் பேசுவதில், கைகொள்ளுவதில் சமரசம் செய்யாத பரிசுத்தம், பரிசுத்தவான்கள் ஐக்கியத்தில் சமரசம் செய்யாத பரிசுத்தம், கிறிஸ்துவின் நிமித்தம் பாடுபடுகிறதில் சமரசம் செய்யாத பரிசுத்தம், உபதேசத்தை கைக்கொள்ளுவதில் சமரசம் செய்யாத பரிசுத்தம். இப்படிபட்ட பரிசுத்தமாய் இருப்பதே தேவன் நம்மை குறித்து விரும்பும் தேவ சித்தம். ஆரவாரம் ஆர்ப்பாட்டம் கொண்டாட்டம் எப்பொழுது பரிசுத்தம் என்கிற கோட்டை தாண்டுகிறதோ அங்கு எழுப்புதலும் கேள்விக்குறியே! ஒரு ஸ்தாபனம் ஒரு போதும் பரிசுத்தமானது என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு ஸ்தாபனத்தின் சத்தியம் சத்தியமாக இருந்து அதை கைக்கொள்ளும் பரிசுத்தவான்கள் அங்கு இருந்தால், அங்கு தான் எழுப்புதல் விதை முளைக்கிறது. அஸ்திபார சத்தியத்தில் குறைபாடுகளை கொண்டு அது தான் என் மகிமை என்று பிடித்து கொண்டு எத்தனை எழுப்புதல் என்று கதறினாலும் அது புத்தியற்றவன் கட்டின வீட்டை போன்றதாகும்.

தேவ சித்தம் நடைபெற தேவன் தமக்கு என்று பிரியமான சமரசம் செய்யாத, யாருக்கும் தெரியாமல் மறைந்து இருந்து கொண்டு, பரிசுத்த படுத்தும் என்றும் உள்ளம் உடைந்து என்னை உருவாக்கும், நான் அசுத்த உதடு உள்ள மனுசன் என்று ஒத்து கொண்ட ஏசாயா போன்றும், பலிபீடத்தின் உடைந்து போன பகுதியை செப்பனிட்டு இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று கர்த்தரின் மகிமைக்காக தனித்து நின்ற எலியா போன்றும், பாபிலோனிய நாட்டில் கூட பரிசுத்தம் தான் எங்கள் கொள்கை என்று விசுவாசத்தில் தனித்து நின்ற தானியேல் மற்றும் நண்பர்கள் போன்றும், தன் மார்க்கத்திற்கு வேண்டி என்ன பாடு பட்டாலும் அதை ஏற்று கொண்டு ஓடி கொண்டே இருப்பேன் என்று மனஉறுதி கொண்ட பவுல் போன்றும், எந்த பாரம்பரிய மத பைத்தியம் பிடித்த யூதர்கள் மற்றும் அதிகாரிகள் வந்தாலும் கிறிஸ்துவை குறித்து பலமாக சாட்சி சொன்ன அப்போஸ்தலர் போன்றும் யாரெல்லாம் மனந்திரும்பி, சத்தியம், பரிசுத்தம், நீதி, விசுவாசம் மற்றும் கிறிஸ்துவின் மேல் அன்பு கொண்டு வாஞ்சை வைராக்கியம் கொண்டு தேவ சித்தம் செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் போகிற இடமெல்லாம் transformation நடக்கும். அதற்காக காத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி transformation நடக்கக் வில்லை எனில் எதோ நாம் அந்த தன்மைகளை இழந்து நிற்கிறோம் என்று அர்த்தமாகும்.

அந்த தன்மைகளுக்கு நேரே மனம் திரும்புவோம். நம்மை உடைத்து உருவாக்க ஒப்பு கொடுப்போம். 100% அற்பணிப்பை கொடுப்போம், அசுத்த ஐக்கியத்தை விட்டு வெளியேறுவோம், பரிசுத்தில் சமரசம் செய்யாமல் ஜெபத்தில் விழித்து இருப்போம். பரிசுத்த ஆவியின் தூண்டுதலும் வசன வெளிப்பாடும் நிறைந்த வாழ்வை வரவேற்போம் அப்போது நமது புத்திக்கு எட்டாத தேவ கிருபையை தந்து, நாம் நினைக்காத, நாம் எதிர்பாராத கிரியைகளை அவர் நம் மூலம் செய்து அவைகளை இக்கால எழுப்புதல் என்று சரித்திரம் பதிவு செய்ய வைப்பார். நாம் நினைக்கும் எழுப்புதல் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து விடும். அவர் எண்ணத்தில் உதிக்கும் எழுப்புதல் சரித்திரம் படைக்கும்.

செலின்.


Share this page with friends