எழுப்புதல் துணுக்குகள்

Share this page with friends

எழுப்புதல் துணுக்குகள்

??‍♀️அந்தரங்க ஜெபத்தின் வலிமையும், தைரியத்தோடு கூடிய பகிரங்க சுவிசேசமும் வெளிப்படாத பட்சத்தில் எழுப்புதல் என்பது கேள்விக்குறியே!…

??‍♀️ எழுப்புதலின் பிரபலத்தை மையமாக வைத்து ஜெபிக்கும் ஜெபம் கவர்ச்சியின் பிரதிபலிப்பே அன்றி, அது உண்மையான எழுப்புதலின் ஜெபம் அல்ல.

??‍♀️ மனம்திரும்புதல், பாவ அறிக்கை செய்து, உள்ளம் உடைந்து நாம் செய்த தனிப்பட்ட பாவங்கள், தேசத்தின் பாவங்கள், சபையின் பாவங்களுக்காக மனம் துக்கப்பட்டு, வெதும்பி, உள்ளம் உடைந்து அழுது கதறி ஜெபிக்கும் ஜெப ஆவி வருகிறது வரை எழுப்புதல் ஒரே கானல் நீரே!

??‍♀️ஆத்தும பாரமும், சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்கிற தாகமும் இல்லாதவர்கள் ஜெபிக்கும் எழுப்புதல் ஜெபம் பிறரை வஞ்சிக்கும், உலகத்தில் அடைந்து தீரும் வெற்று மேன்மையே!

??‍♀️மிஷனரியாக புறப்படும் ஏக்கம், தாகம், அர்ப்பணிப்பு இல்லாமல் எழுப்புதல் என்று ஜெபிக்கும் ஜெபம் நானும் ஜெபிக்கிரேன் என்று சொல்வதற்கு தான் உதவுமே அன்றி வெரோன்றுக்கும் உதவுவது இல்லை.

??‍♀️பாடுபட வேண்டும், சிலுவை சுமக்க வேண்டும், மரிக்கவும், உம் சித்தம் என்னமோ அதை செய்ய என்னை விட்டு கொடுக்கிறேன் என்று அர்பணித்து ஜெபிக்காத ஜெபம் ஏழுப்புதலை அவித்து போடும் ஒரு அனலற்ற ஜெபமே என்பதில் சந்தேகமே வேண்டாம்.

??‍♀️மெய்யான எழுப்புதல் ஜெபம் என்பது பிரபலத்தில், விளம்பரத்தில், ஆரவாரத்தில் ஆரம்பிப்பது அல்ல, ஏதோ ஒரு இடத்தில் அற்பமாக எண்ணபட்ட அதே நேரத்தில் உள்ளம் நொறுங்கி கர்த்தரால் பிரியபட்ட ஒரு உள்ளத்தில் இருந்து ஆரம்பித்து தீ பிழம்பு போன்று பிரபலமாக தேசம் முழுவதும் பற்றி எரியும் அக்கினியே இந்த எழுப்புதல். (அதற்கு என்று இங்கு யார் உண்டு! அது தான் எழுப்புதலின் கேள்வி )

செலின்


Share this page with friends