கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு

Share this page with friends

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு

பதிவு: டிசம்பர் 24,  2021 22:22 PM
கோவை

கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தேவராஜ், தனது பேரன் முகுந்தனுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். 
அவர்கள், சுற்றுச்சூழ லை பாதுகாக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், மஞ்சப்பைகளையும் கைகளில் வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுகுறித்து தேவராஜ் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சரின் மஞ்சப்பை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மஞ்சப் பைகளை எடுத்து வந்துள்ளோம். பேச்சளவில் இல்லாமல் பிளாஸ்டிக்கை தவிர்த்து அனைவரும் மஞ்சப்பை பயன்பாட்டுக்கு மாற வேண்டும்.  

அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பைகளை எடுத்து வந்தோம். அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன் என்றார்.‌ 

இதைதொடர்ந்து அவர்கள், கோவை அரசு மருத்துவமனை பகுதிக்கு சென்று, மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள்
கொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி!!
ஜாதிய கட்டமைப்பு எதனால் ஏற்பட்டது என்ற சூடான விவாதங்கள்.
தானியேல் மேல் இருந்த விசேஷித்த ஆவியானவரின் தன்மைகள்
ஆராதனை எப்படி செய்ய வேண்டும்?
சத்துரு அழித்து போட்ட விளைச்சலை திரும்ப தருவார்
உருக்குழைந்த நிலையில் உக்ரைன் | இரவில் பொழிந்த குண்டு மழை | அவசர ஜெப அழைப்பு
கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம், நடந்தது என்ன??
அதிகாலை 4 மணி
யாக்கோபே, யோசுவா'வே,

Share this page with friends