PLAY பண்ணின பிலேயாம்! வித்யா’வின் பதிவு

Share this page with friends

(எண்ணாகமம் 23)

கர்த்தர் பிலேயாமின்
வாயை அடைக்கவில்லை.


அவன் பேசட்டும்,
நான் அவன் வாயைத்
திருப்பிவிடுகிறேன்
என்று கர்த்தர் அவன்
வாயை திரும்பிவிட்டார்.


சபிக்கக் கூலிபேசி
கூடிவந்தவன்

ஆசீர்வதிக்கக்
கட்டளைபெற்றேன்
என்று சொல்லி
ஆசீர்வதித்துவிட்டான்

அவர்கள் என்றைக்கும்,
அந்தச் சாபத்தை
ஆசீர்வாதமாகத்
திருப்பின எங்கள்
தேவனுடைய
சபைக்குட்படலாகாது
என்று எழுதியிருக்கிறதாக
காணப்பட்டது

(நெகேமியா 13:2)

சாபத்தை ஆசீர்வாதமாகத்
திருப்பும் தேவன்
நம் தேவன்.

சபிக்கிறவர்களின்
வாயை அடைக்காமல்
அவர்களை பேசவிட்டு
ஆசீர்வாதமான
வார்த்தைகளைச்
சொல்லவைக்கிறவர்
நம் தேவன்.


எப்போதாவது
ஒருவர்
உங்களைச் சபிக்கிறார்
என்று வைத்துக்கொள்ளுங்கள்
உடனே
இதை நினைத்துக்
கொள்ளுங்கள்

எதை?

கர்த்தர் இஸ்ரவேலருக்குச்
செய்ததை நினைத்துக்
கொள்ளுங்கள்


அவரை நம்புங்கள்.

கர்த்தர் எனக்கு சகாயர்
நான் பயப்படேன்
மனுஷன் எனக்கு
என்ன செய்வான்
என்று சொல்லலா’மே
(எபிரேயர் 13:6)

குறிப்பாக
இந்த மே மாதத்தில் இப்படிச்
சொல்லலா’மே!

அன்றியும்,
அவருடைய தீர்மானத்தின்படி
அழைக்கப்பட்டவர்களாய்
தேவனிடத்தில்
அன்புகூருகிறவர்களுக்குச்
சகலமும் நன்மைக்கு
ஏதுவாக நடக்கிறதென்று
அறிந்திருக்கிறோம்

(ரோமர் 8:28)

பிலேயாமின் பிரசங்க
வாக்கியங்களைக் கொஞ்சம்
வாசித்து அதை
யோசித்து
ப்பாருங்கள்.

தேவனுடைய பிள்ளைகளாகிய
நமக்கொரு சிலாக்கியம் உண்டு
ஆம். யாரும் நம்மை சபிக்க முடியாது.

பிலேயாம் சொல்லுகிறான்
பாலாக் காது கொடுத்து,
அதோடு காசு கொடுத்தும்
கேட்கிறான்;

தேவன்
சபிக்காதவனை நான்
சபிப்பதெப்படி?

கர்த்தர் வெறுக்காதவனை
நான் வெறுப்பதெப்படி?

என்று பிலேயாம்
பேசிக்கொண்டிருக்கிறான்
(எண்ணாகமம் 23:8)

நாம் அவருடைய பலத்த
கரங்களுக்குள் பத்திரமாக
இருக்கிறோம். We are Safe.
(ரோமர் 8:31-39)

ஏனென்றால் நாம் இந்த
உலகத்தோடு
ஒத்த வேஷம் தரியாமல்
வேறு பிரிக்கப்பட்டுள்ளோம்

(எண்ணாகமம் 23:9)

அதோடு
பொய் சொல்லாத ஒரு தேவனுடைய
பிள்ளைகளாய்
இருக்கிறோம்

பொய்யும் பொய்க்குப்
பிதாவுமானவன்
பிசாசானவன்

அவனுடைய பிள்ளைகளாய்
முற்காலங்களில் இருந்து
மாம்சமும் மனசும்
விரும்புகிறதைச்
செய்துகொண்டிருந்தோம்
(எபேசியர் 2:3)

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
அவர் நம்மை கிருபையாய்
இரட்சித்தார்.

கிருபையினாலே விசுவாசத்தைக்
கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்

(எபேசியர் 2:8)

நமக்குக்
காண்டாமிருகத்திற்கொத்த
பெலன் உண்டு என்று
பிலேயாம் சொல்லித்தான்
தெரியும்.
(எண்ணாகமம் 23:22)

இதைத் தெரியாமல்
பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பலமுறைதானே

என்று பாடிக்கொண்டிருந்தோம்.

பிலேயாமின் வாயைத் திறந்த
தேவனுக்கு ஸ்தோத்திரம்.

இன்னும் ஒரு மடங்கு மேலே
நம்மைப் பற்றிய தகவலை
பிலேயாம் சொல்லுகிறான்;

நாம் யார்? பால சிங்கம்
(எண்ணாகமம் 23:24)

தேவ ஆவி அவன்மேல் வந்தது
(எண்ணாகமம் 24:2) இதனால்
இந்த வெளிப்பாடுகள் எல்லாம்
கிடைத்தது.

இப்படியெல்லாம் பிரசங்கித்த
பிலேயாமின் ஆசை என்ன?

கர்த்தருக்காக வாழ வேண்டும்
என்று அல்ல.
ஒரு நீதிமான் போல ஜீவிக்க வேண்டும்
என்றுமல்ல.

நீதிமான் மரிப்பது போல
நான் மரிப்பேனாக.
என் முடிவு
அவன் முடிவு போல் இருப்பதாக

(எண்ணாகமம் 23:10)

ஆசையைப் பாருங்கள்.
இது நடக்குமா?

நீதிமானாக வாழாமல்
எப்படி நீதிமானாக
மரிக்கமுடியும்?


நீ உத்தமனை நோக்கி
செம்மையானவனைப்
பார்த்திரு;
அந்த மனுஷனுடைய முடிவு
சமாதானம்

(சங்கீதம் 37:37)

நல்லாசான்
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்

சர்வதேச விருது பெற்றவர் – மலேசியா – 2021


Share this page with friends

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662