விசுவாசியே உன் உத்தமத்தை காத்துக்கொள்

Share this page with friends

உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். (சங் : 84 : 11)

தேவனுக்கு முன்பாக எல்லா மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். (2 கொரி 4 : 2)

அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும் பாதத்திற்கு நீங்கலாயிருப்பேன். (சங் 19 : 13)

மேல் சொன்ன வார்த்தைகள் உத்தமம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்துகிறது. நாம் உத்தமமாய் இருந்தால் கர்த்தர் நன்மையை வழங் காதிரார். புதிய வருடத்தில் நாம் நமது உத்தமத்தை காத்துக்கொண்டு வாழவேண்டும். உத்தமமாயிருக்கும் விசுவாசிகள் பெற்றுக்கொள்ளும் நன்மைகளைக் குறித்து
கவனிக்கலாம். விசுவாசியே உன் உத்தமத்தை காத்துக்கொள்.

  1. உத்தமத்தின் நன்மை தேவ வல்லமை தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடுள்ளவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி… (2 நாளாக 16 : 9) உன் உத்தமத்தை காத்து கொண்டால் வல்லமையுள்ளவனாக இந்த வருடத்தில் காணப்படுவாய். உனக்குள் தேவ வல்லமை விளங்கும்.
  1. உத்தமத்தின் நன்மை தேவ துணை நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள்: உத்தமனுக்கு கர்த்தர் துணை. (2 நாளாக 19 : 11) உலகக் காரியத்திலும் ஊழியத்திலும் கர்த்தர் திடமனதைத் தருவார். இந்த வருடத்தில் உனக்கு துணையிருந்து சகல காரியங்களையும் நடத்துவார். உத்தமனுக்கு கர்த்தர் துணை.
  1. உத்தமத்தின் நன்மை தேவ பாதுகாவல். உத்தமமாய் நடக்கிறவர் களுக்கு அவர் கேடகமா யிருக்கிறார். (நீதி 2 : 7) இந்த வருடத்திலும் பல போராட்டங்கள் வரும் ஆனால் தேவன் கேடகமாயிருந்து உனக்கு தமது பாதுகாவலை தருவார். இது உத்தமர் களுக்கு கர்த்தர் தரும் பாதுகாவல்.
  1. உத்தமத்தின் நன்மை தேவ சமாதானம் உத்தமனை நோக்கி செம்மையானவனைப் பார்த்திரு: அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். (சங் 37 : 37) பலவிதத்தில் கர்த்தருக்கு விரோதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீயோ உன் உத்தமத்தை காத்துக்கொண்டால் உன் முடிவு சமாதானம். இந்த வருடம் தேவ சமாதானத்தோடு நீ வாழ்வாய் !
  1. உத்தமத்தின் நன்மை தேவன் தரும் வெகுமதி. அவன் உத்தமனென்று விளங்கின பின்பு… ஜீவ கீரிடத்தைப் பெறுவாய். (யாக் 1 : 12) சிலர் வேதனையோடு கடினமாய் உழைப்பார்கள் ஆனால் அவர்கள் பலனை காண்பதில்லை ஆனால் இந்த ஆண்டில் உனக்கு சோதனைகள் வேதனைகள் வரலாம். ஆனால் நீயோ உன் உத்தமத்தில் உறுதியாய் நில். சோதனையை சகித்துக்கொண்டே முன்னேறிச் செல். உன் முயற்ச்சியின் பலனை இந்த ஆண்டிலே காண்பாய். உன் உத்தமத்தால் உனக்கு தேவ வெகுமதி உண்டு. தேவ பிள்ளையே இந்த புதிய வருடத்தில் உன் உத்தம குணத்தால் உனக்குள் தேவ வல்ல மை கிரியை செய்வதையும், உனக்கு எல்லா சூழ்நிலையிலும் தேவன் உனக்கு துணை யிருப்பதையும் ஆபத்து நேரங்களில் தேவனது கேடகம் உனக்கு பாதுகாவலாய் இருக்கும், உலகம் தர கூடாத தேவ சமாதானத் தையும் , உன் முயற்ச்சிகளுக்கெல்லாம் பலனையும் வெற்றியையும் தேவன் வெகுமதியாக தருவார். ஆனால் நீ உத்தமனாய் இரு. இந்த வருடத்தில் உன் உத்தமத்தின்படி பல நன்மைகளை காண்பாய். தேவன் உத்தமனுக்கு நன்மையை வழங்கா திருக்கமாட்டார். உத்தமம் உனக்கு பல நன்மைகளைக் கொண்டுவரும்

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.

மக்கள் அதிகம் வாசித்தவை:

வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள்
நீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை
பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை
தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட யாக்கோபு
கிறிஸ்தவம் மாய்மாலமே
அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்
ஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் ...
இயேசுவால் வேதாகமம் எழுதப்படவில்லை என்றும் மனிதர்களே வேதாகமத்தை எழுதியதால் அதை அப்படியே பின்பற்ற வேண்...
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
சபைகள் நடத்தும் பாஸ்டர்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய தகவல்.

Share this page with friends