தேவனின் பிரியம்

Share this page with friends


(அவருக்கு பிரியமாய் நடக்கும் போது அவர் நமக்கு என்ன செய்வார்?)

சங்கீதம் 90:17
எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக, எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும், ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.

1. பிரியமாய் இருக்கிறவர்களை தேவன் கைவிடமாட்டார்

1 சாமுவேல் 12:22
கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக் கொள்ளப் பிரியமானபடியால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனங்களைக் கைவிடமாட்டார்.

2.அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

2 சாமுவேல் 22:20
என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

3.பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.

எண்ணாகமம் 14:8
கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.

4. நான் பிரியமாய் இருக்கிறவர்கள் மூலமாய் என் மகிமை விளங்கும்

ஆகாய் 1:8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள். அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன். அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Pr.J.A.Devakar . DD


Share this page with friends