நீதிமான்களுக்கு நன்மை

Share this page with friends

ஏசாயா 3:10
உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள், அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள். (நீதி – 13:21)

1.குறையில்லாத நன்மையை கர்த்தர் தருகிறார்.

(சங்கீதம் 34:10) சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

2. பெரிய நன்மையை கர்த்தர் தருகிறார்

(சங்கீதம் 31:19) உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

3. இரட்டிப்பான நன்மையை கர்த்தர் தருகிறார்

(சகரியா 9:12) நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள். இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.

4. தொடருகிற நன்மையை கர்த்தர் தருகிறார்

சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.


Pr.J.A.Devakar . DD


Share this page with friends