கிறிஸ்தவ இலக்கிய வேந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை:
கிறிஸ்தவ இலக்கிய வேந்தனுக்கு பிறந்தநாள் கவிதை

ஐம்பத்தேழாவது அகவை எட்டிடும்
பைந்தமிழ் புலவரே! – உம்
கைந்தெழுக் கவிதைகள் சொல்லிடும்
பைம்பொழில் வாசமே!
முப்பத்து நான்கு ஆண்டுகள்
முழுநேர இறைப்பணியில் – தொய்வின்றி,
ஆரவாரமின்றி சுவை தந்த உப்பே!!
வானொலி மூலம் இரை கொடுத்து,
கேட்போரை இறை தேடலில் சிக்கவிட்டு,
உலகெங்கும் நேயர்களை ஈர்த்த
பரிசுத்த வானூர்தியே!
உப்பளமாம் திருச்சபையில் – பல
நிலையற்ற தண்ணீருக்கு கருத்துடன் வேலியடைத்து,
நீதியின் சூரியனில் தினம் காட்டி,
வசனமென்னும் மன்னாவை தினம் ஊட்டி,
வெண்மையும், ருசியும் சாரமுள்ள உப்பாக,
உலகெங்கும் அனுப்பும் சீர்திருத்தவாதியே!!
உம் எழுத்துக்களால் தமிழுக்கு அழகு
உம் எண்ணங்களால் வேதத்திற்கு அழகு
உம் வாழ்க்கையால் தேவ ராஜ்யத்திற்கு அழகு
உம் உயர்ந்த ஊழியத்தால் எங்களுக்கு அழகு
ஆம், நீங்கள் தான் அழகுக்கெல்லாம் அழகு!!
டி. சி. என் மீடியாவின் இலக்கிய வேந்தனே,
ஆறுதல் எஃப்எம்-மின் பிரசங்க பீரங்கியே,
வேதாகமத்தை பகுத்து போதிக்கும் சூப்பர் டெய்லரே,
இளைஞர்களுக்கு ஈடுகொடுக்கும் இளம் தாவீதே!
இஸ்ரவேல் வித்ய பிரகாஷ் என்னும் நல்லாசான் நீர்
வேதாகம சொத்துக்களின் அதிகார உரிமையாளன் நீர்
இன்று உமக்கு பிறந்த நாள்! ஆம்,
இதுதான் உமக்கு பிறந்த நாள்
கருத்தின் ஆழம் புரிகிறதா?
இன்று போல் என்றும் இளமையாக இருக்க
இறைவன் இயேசு அருள்புரிவாக!!
உங்களுக்காக ஜெபித்த போது தேவன் தந்த வாக்குதத்த வசனம்:
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். (யாத்திராகமம் 34:10)
மனம் நிறைந்து வாழ்த்துவது,
பாஸ்டர். பெ. பெவிஸ்டன்
டி. சி. என் மீடியா