மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள் என்று கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரத்தம் – வேர்வை – கண்ணீர்
மூன்றும்
பிறருக்குச் சிந்துமிடத்தே
பெருமையுடைத்து.
மானுடத்துக்கு ரத்தம் சிந்திய
மானுடன் பிறந்தநாள்
இந்த உலகம்
தியாகத்தால் இயங்குவதையே
திரும்பத் திரும்பச் சொல்கிறது.
உலகக் கிறித்துவ சமூகத்துக்கு
என் வணக்கமும் வாழ்த்தும்.
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.