50 ஆண்டு கால சரித்திர புகழ் பேராயர் காலமானார்

Share this page with friends

50- ஆண்டு காலம் சரித்திரம் படைத்த மிஷனெரியாக, சபை போதகராக, ஊழியர்களின் தலைவராக, பத்திரிகை ஆசிரியராக, தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக, அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவராக பெந்தெகொஸ்தே பேரியக்கத்தின் மாபெரும் தலைவராக, எல்லாருடைய மனதிலும் வாழ்ந்தவர் பேராயர் டாக்டர் மா பிரகாஷ் அவர்கள்.

அவர்களது மறைவு திருச்சபைக்கு பேரிழப்பு. கர்த்தர் அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் அளிப்பாராக

ஜாதி வெறி பிடித்த பலர் ஒன்றாக கைக்கோர்த்து நிற்கும்போது, #கம்போடியாவின்_எழுப்புதலால் ஏற்பட்ட தாக்கத்தில் ஒற்றை மனிதனாக அயராது உழைத்து, ஜாதி வெறியர்களையும் தன் அன்பாலும், நகைச்சுவையான பேச்சாலும் கட்டி போட்ட ஒப்பற்ற #தலைவனே!

குஜராத்தில் மதக்கலவரத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களின் போது தனி மனிதனாக வீதியில் இறங்கி மோடியை தமிழகத்திற்குள் நுழைய விட கூடாது என்று சிம்ம குரல் உயர்த்தி களம்கண்ட #போராளியே!

அத்தனை ஆடவர்வளும் கண்டாலே நடுங்கும் இரும்பு பெண்மணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கே தங்க தாரகை என்ற உயரிய விருதை அளித்து அவரது நினைவில் அமர்ந்து கொண்ட #அர்ச்சகரே

இன்று பலரும் எழுப்புதல் என்ற அணையா விளக்கை தங்களுக்குள் எந்திக்கொள்ள #புதிய_தரிசனம் என்ற தீபத்தை அன்றே பலருக்கும் பற்றவைத்து பகிர்ந்தளித்த #பகலவனே!

இன்று தமிழகத்தில் உயர்ந்து நிற்கும் பல பிரபல ஊழியர்களை அன்றே அடையாளம் கண்டு அவர்களை மேடையேற்றி அழகு பார்த்த #ஆசானே!

உன் வாலிப வயதில் வாழ்க்கையில் உயர முயற்சித்து தோல்விகள் பல கண்டாலும், பிற்காலத்தில் தமிழ் நாடு அரசின் சிறுபான்மை தலைவர், அண்ணல் அம்பேத்கர் விருது, சர்வதேச மனித உரிமை பொறுப்புகள் என உயரம் தொட்ட #சாதனையே!

இப்படி இன்னமும் ஆயிரம் உம்மை பற்றிய நல் வார்த்தைகளை பெருமையாக கூற உங்கள் வாழ்க்கை புத்தகத்தில் பல இருந்தாலும்.. நாங்கள் அழைக்கும் “#அண்ணா” என்ற ஒற்றை வார்த்தையில் இழகி போகும் எங்கள் பாசத்தின் #உறவே!…

நீர் உயரம் தொட்டபோது #அண்ணா என்ற இந்த தாரகமந்திர வார்த்தையை
பயன்படுத்தி உம்மிடம் #ஒட்டிக்கொண்டோர் பலர்…
அவர்களால் #வெட்டப்பட்டோர் சிலர் …

இன்று அந்த சிலரும் உங்களின் மறைவு செய்தி கேட்டு இடிந்து போய் நிற்கின்றோம். உம்மை எப்படியும் மோட்சத்தின் மறுகரையில் சந்திப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு…
அதனால், உம்மை இம்மண்ணில் புதைக்க அல்ல; விதைக்க விட்டுகொடுக்கின்றோம்!

அண்ணா! நீ அங்கே படுத்திரு பத்திரமாக! எழுந்திரு எக்காள சத்தம் கேட்கும்போது!!


Share this page with friends