பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கைதா..? சட்டம் தன் கடமையை செய்யுமா..??

Share this page with friends

5-1-2022

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படும் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை உடனடியாக கைது செய்யக்கோரி சிறுபான்மை மக்கள் நல கட்சியின் சார்பாக காவல்துறை ஆணையாளர் இடத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.

25. 1. 2022 இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அவர்களை சிறுபான்மை மக்கள் கட்சியின் சார்பாக சந்தித்து அமைதியான தமிழ் நாட்டில் மத கலவரத்தை தூண்டும் விதமாக அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலையை பொய்யாக மதமாற்றம் என்று கூறி அமைதிப் பூங்காவான தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் பதற்றத்தையும் பொய்யாக கலவரங்களை தூண்டும் விதமாக செயல்படும் இவரை தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் நல கட்சி சார்பாக தமிழக காவல்துறைக்கும் சிறுபான்மை மக்கள் நல கட்சி வேண்டுகோள் விடுக்கிறது


Share this page with friends