கிறிஸ்துமஸ் தேசிய விடுமுறையை பா.ஜ.க. அரசு ரத்து செய்தது ஏன்? மோடி அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை ஏன் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை என்றும், தேசிய விடுமுறை நாளாக இருந்ததை ஏன் மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லோருக்கும் உணர்வுகள் உள்ளது, அப்படி என்ன தீங்கை கிறிஸ்தவர்கள் இழைத்து விட்டார்கள் என கேள்வி எழுப்பியுள்ள மம்தா பானர்ஜி, மதச்சார்பற்ற நிலை இந்தியாவில் உள்ளதா என கேள்வி எழுப்பியதோடு, சொல்வதற்கு வருந்துகிறேன், நாட்டில் ஒரு பொதுவான மத வெறுப்பு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது என நரேந்திர மோடி அரசை சாடியுள்ளார்.