அவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்

Share this page with friends

அவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் (சங் 2-12)

இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் செய்த பாவம் தாவீது ராஜா செய்த பாவங்களைவிட குறைவானதுதான். சவுலிடம் (1) கீழ்படியாமை காணப்பட்டது – 1 சாமு 15:8,9 (2) துணிகரம் காணப்பட்டது – 1 சாமு 13-12. ஆனால் தாவீது உரியாவை கொன்று அவனது அன்பு மனைவியை தனக்கென்று எடுத்த கொண்டார் – 2 சாமு 11:3,15.

இருவரும் தேவனுக்கு விரோதமாக கொடிய பாவங்களை செய்தார்கள். எனினும் சவுலோ ஜெப உதவிக்கு சாமுவேலை அண்டினான் (1 சாமு 15:25,30). ஆனால் தாவீதோ 51 ஆம் சங்கிதத்தின்படி அவனோ ஜெபத்தில் கர்த்தரை அண்டி கொண்டான். கர்த்தரை அண்டிக் கொண்ட பெரிய பாவியாகிய தாவீதோ இன்று பரலோகத்தில் வாழ்கின்றான். கர்த்தரை அண்டிக்கொள்ளத் தெரியாத சவுலோ இன்று நரக பாதாளத்தில் இருக்கிறான் (சவுல் தன்னைத்தானே கொலை செய்து கொண்டான் – 1 சாமு 31-4)

தானியேல் 6 ம் அதிகாரத்தில் தானியேலுக்கு விரோதமாக சத்துருக்கள் எழும்பினார்கள். தானியேல் தன் உயிர் காக்கப்பட ஒரு வேளை ராஜாவாகிய தரியுவை அண்டி தன் ஜீவனுக்காக மன்றாடியிருக்கலாம் (or) தனக்கு விரோதமாக எழும்பின 120 தேசாதிபதிகளையும், 3 பிரதானிகளையும் அண்டிக் கொண்டு தன் பிராணன் காக்கப்பட மன்றாடியிருக்கலாம். ஆனால் தானியேலோ தன் அன்பின் ஆண்டவரையே அண்டிக் கொண்டார். வெகு பத்திரமாக பாதுகாக்கப்பட்டார்.

தேவ மக்களே! நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி இந்த 2021 ம் ஆண்டு அன்பின் ஆண்டவர் இயேசுவை அண்டிக் கொள்ளுங்கள். தாவீதுக்கும் தானியேலுக்கு உதவி செய்த ஆண்டவர் நிச்சயம் உங்களுக்கும் உதவி செய்வார்.

எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம் (சங் 73-28)


Share this page with friends