ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

Share this page with friends

லூக்கா 1:42 “உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.”

1) பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட எலிசபெத், வாலிபப் பெண்ணாகிய மரியாளை பார்த்து தீர்க்கதரிசம் சொல்லுகிறார்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் ஏனெனில் கர்த்தர் இந்த பூமியை இரட்சிப்பதற்கு ஒரு இரட்சகரை கொண்டுவரப் போகிறார் அதற்கென்று ஆண்டவர் உன்னை தெரிந்தெடுத்திருக்கிறார்.

2) பழைய ஏற்பாட்டில் யாகேல் (நியாயாதிபதிகள் 5:24) போல புதிய ஏற்பாட்டில் மரியாள் ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் உலகத்தை இரட்சிக்கக்கூடிய இரட்சகரை வயிற்றில் சுமக்கிறபடியால், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது என்றாள்.

3) எலிசபெத்து வயது சென்ற மலடியாய் இருந்தவர் கர்ப்பம் தரித்து ஆறு மாதமாக வெளியே செல்லாமல் இருக்கிறார். அவருக்குள் ஒரு பயம் ஒரு பிரமிப்பு சந்தோஷம் ஆச்சரியம். இப்படிப்பட்டவர் கணவனை அறியாத ஒரு வாலிபப் பெண்ணாகிய மரியாளை பார்த்து உன் வயிற்றில் இருக்கிற பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று வாழ்த்துதல் சொல்லும் பொழுது அந்த வாலிப பெண்ணிற்கு எப்படித் தோன்றும் என்பதை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?.

4) வயது சென்ற மலடி கர்ப்பவதியாகி, கன்னிகையாகிய பெண் கர்ப்பவதியாகி இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிற காரியம், இவை இரண்டுமே சாதாரண காரியமல்ல, இது கர்த்தராலே ஆயிற்று. இப்படிப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அங்கே தேவனுடைய வார்த்தை வெளிப்படுகிறது.

*நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*

1) நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது நாம் பேசுகிற வார்த்தைகள் தேவனை மகிமைப்படுத்துகிற வார்த்தைகளாக காணப்படுகிறதா?. இல்லை வீணான வெட்டி கதைகளை பேசுகிறோமா?. இங்கே எலிசபெத்தும் மரியாளும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை பேசுகிறார்கள்.

2) ஜான் வெஸ்லி சொல்லும் போது, இரண்டு சகோதரிகள் கூடி ஜெபித்தால் 20 நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது காரணம் தேவையில்லாத வார்த்தைகளை பேசி பாவம் பண்ணி விடக்கூடும்.

3) இன்றைய நாட்களில் தொலைபேசியினால் எத்தனை தொல்லைகள் திருமணமான பின்பு தன் மக்களிடம் மணிக்கணக்காய் பேசி வீணான வார்த்தைகளினால் அந்த கணவன்-மனைவிக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணி விடுகிறார்கள் தாய் தகப்பன்மார். அதுமட்டுமில்லாமல் திருமணமான ஒரு ஆண் மணிக்கணக்காய் மற்றொரு பெண்ணுடன் பேசுவது அல்லது திருமணமான பெண் இன்னொரு ஆணிடம் மணிக்கணக்காய் பேசுவது இது தவறான உறவுகளுக்கு நேராக கொண்டுபோய் சேர்த்து விடுகிறது.

4) நம்முடைய வாயிலிருந்து வருகிற வார்த்தை மற்றவருடைய காயங்களை ஆற்ற கூடியதாகவும் உற்சாகப்படுத்த கூடியதாகவும் இருக்கிறதா அல்லது தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை குறித்து அதிகமாய் பேசுகிறோமா?. சிந்தித்துப் பாருங்கள்.

*ஜெபம்*

ஆண்டவரே எங்கள் வாயில் இருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தைகளும் உம்மை பிரதிபலிக்கக் கூடியதாய், உம்மை மகிமைப்படுத்த கூடியதாய் காணப்பட, எங்களை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். சங்கீதக்காரன் சொன்னது போல எங்கள் நாவிற்கு காவல் வையும் ஆண்டவரே, எங்கள் நாவில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் உமக்கு பிரியமானதாய் உம்மை மகிமைப்படுத்துகிறதாய் காணப்பட வேண்டுமாறு எங்களை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம், ஜீவனுள்ள நல்ல பிதாவே, ஆமென்.

*Luke 1:42* *”Then she spoke out with a loud voice and said, “Blessed are you among women, and blessed is the fruit of your womb!”*

1) Mary was 13 years old and is a young woman. The Angel Gabriel had told Mary about God’s plan. Elizabeth is now proclaiming the same as prophecy.

2) Mary is considered to be blessed among women because she has been chosen by God. God had chosen Mary to bring forth Son Jesus who is the Savior of the world.

3) In Judges 5:24, we study that in the Old Testament time, Jael was a blessed woman. In the New Testament, Mary was considered to be the blessed among women because she was going to give birth to the Son of God- Jesus Christ.

4) Elizabeth who was barren for many years was at home for six months after conceiving, She prophesied to Mary that the child in her womb is also blessed one.

5) There are two facts to observe. One, Elizabeth being old aged and barren is pregnant and on the other side Mary being virgin is pregnant. In both of these women, God had blessed them. When two people who are being led by God and being blessed by God meet together, the Eternal Word of God will be made known through their conversations.

*How to apply this verse in our daily life :*

1) When we meet each other, are we speaking to reflect God or unnecessary things / gossips? Let us think about it today?.

2) John Wesley told that when two women meet together to pray, they are not allowed more than 20 mins. This is because, do not want them to speak unwanted things and gossip.

3) In this present world, phones have had so much effect in family life. Parents speaking to their sons and daughters and inquiring for unnecessary things had brought so much chaos within families. There are so many times we could observe husbands speaking to some other women over phone and vice versa and causing so much family issues such as having illegal relationships.

4) Can we all speak about God and not indulge in any unnecessary talks and gossip when we meet each other from today?. Can we try to live holy reflecting Christ?. Can we speak words that bring Glory to God?.

*Prayer*

Dear Mighty Father, we thank You for this beautiful day. Father, we submit our tongue into Your beautiful hands Lord. Father guard our tongue Lord. Father, help us to speak words that bring glory to You alone and proclaim Your goodness Lord. Father we submit ourselves humbly in Your beautiful hands Lord. In Jesus’ name we pray. Amen.

WCF DD (World Christian Fellowship Daily Devotions)


Share this page with friends