பாக்கியமான மனிதர்கள்

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். (சங் 119 : 1)
இந்தக் குறிப்பில் யார் யார் பாக்கியவான்கள் என்பதை கவனிக்கலாம் இந்தக் குறிப்பு சங்கீத புஸ்தகத்தை தழுவியது. இந்த சங்கீத புஸ்தகத்தில் எத்தனையோ பாக்கியவான்கள் என்ற வார்த்தை உண்டு. ஆனால் நாம் ஒரு சிலவற்றை சிந்தித்து பார்க்கலாம். இந்தப் பாக்கியவான்கள் பட்டியலில் நாம் இருக்கிறோமா என்று கவனித்து பாருங்கள். பாக்கியவான் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தலாம்.
வேத பாடம். சங்கீத புஸ்தகம்.
- பாவம் மூடப்பட்ட மனிதன் பாக்கியவான் (சங் 32 : 1)
- கர்த்தரையே தன் நம்பிக்கையாகவைக்கிற மனிதன் பாக்கியவான் (சங் 40 : 4)
- கர்த்தருக்கு பயப்படுகிற மனிதன் பாக்கியவான் (சங் 112 : 1)
- கர்த்தரால் சிட்சிக்கப்படுகிற மனிதன் பாக்கியவான் (சங் 94 : 12)
- கர்த்தரிலே பெலன் கொள்ளுகிற மனிதன் பாக்கியவான (சங் : 84 : 5)
- கர்த்தருடைய வேதத்திலே இரவும் பகலும் தியானமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். (சங் 1 : 2)
- கர்த்தர் தெரிந்துக்கொள்ளுகிற மனிதன் பாக்கியவான் (சங் 65 : 4)
- கர்த்தருடைய ஆலயத்திலே வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான் (சங் 84 : 4)
இந்தக் குறிப்பில் யாரெல்லாம் பாக்கியவான்கள் என்பதை சிந்தித்தோம். பாக்கியவான்கள் என்றால் ஆசீயர்வதிக்கப்பட்டவர்கள் என்பது பொருள். மேல் சொன்னவற்றின் படியே நாம் பாக்கியவான்களாய் இருக்கி தோமா என்பதை ஆராய்ந்து பாருங்கள். வரும் நாட்களில் வேதத்தின் உத்தமமார்க்கத்தில் நடந்து நம்மை பாக்கியவான்களாக நம்மை தகுதிச்படுத்திக் கொள்வோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
ஆமென் !