பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம்

Share this page with friends

அவர் தமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்த பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். தீத்து : 3 : 7

இந்தக் குறிப்பில் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியின் ஆசீர்வதங்களைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.

  1. பரிசுத்த ஆவியான வருக்கு நாம் ஆலயமாக இருக்கிறோம். பரிசுத்த ஜீவியம் தேவை. 1 கொரி : 6 : 19
  2. பரிசுத்த ஆவியானவரால் நாம் நடத்தப்பட வேண்டும் அப்பொழுது நம்முடைய வாழ்க்கையின் மூலம் அற்புதங்கள் அடையாளங்கள் அதிசியங்கள் வெளிப்படும். இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டு திரும்பி ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு.. லூக் : 4 : 1
  3. பரிசுத்த ஆவியானவர் நமக்கு தேற்றரவாளனாக இருக்கிறார். யோவா : 14 : 16 , 26
  4. பரிசுத்த ஆவியானவர் நம்மை புதிதாக்குகிறவராக இருக்கிறார். நம்மை மறுரூபப்படுத்துகிறவராக இருக்கிறார் தீத்து : 3 : 5
  5. பரிசுத்த ஆவியானவர் நம்மை அவருடைய சந்தோஷத்தினால் நிரப்புகிறவராயிருக்கிறார். ரோமர் : 24 : 17
  6. பரிசுத்த ஆவியானவர் நம்மேல் அசைவாடி நம்மை
    ஒழுங்குப்படுத்துகிறவராகவும் அழகு படுத்துகிறதா கவரும் இருக்கிறார். ஆதி : 1 : 2
  7. பரிசுத்த ஆவியானவர் நம்மேல் இறங்கி நம் மூலமாக மற்றவர்களுக்கு ஜெயத்தை கொடுக்கிறவராக இருக்கிறார் நியா : 6 ; 34

இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை ஆசீர்வாதங்களை கவனித்தோம். தொடர்ந்து பரிசுத்த ஆவியானவர் உங்கள் சபையில் கிரியைகளை நடப்பித்து தருவாராக !

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends