சகோ. அகத்தியன் அவர்களின் கேள்விகளுக்கு செலினின் பதில்கள்

Share this page with friends

ஜாதி உணர்வாளர்களை அடையாளம் காண்பது எப்படி?

செலின்

வெறும் ஜாதி வெருப்பாளர்களை மட்டும் அடையாளம் கண்டால் போதுமா? மற்ற பாவங்கள் செய்தால் தப்பி விடலாமா? மற்ற பாவத்தை செய்து ஜாதியை மட்டும் விட்டால் ஒருவன் பரிசுத்த ஆக முடியுமா?

ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களை ஜாதி பிரியர்கள் வெறுப்பார்கள்.

செலின்:
கிறிஸ்துவின் பிள்ளைகள் எல்லா பாவத்தையும் வெருப்பார்கள் ஜாதியை மட்டும் அல்ல. ஒரு பாவத்தை மட்டும் focus பண்ணுவது பரிசேய மாயத்தை காட்டுகிறது. கிறிஸ்துவின் அன்பை உணர்ந்தவர்களுக்கு ஒன்றாக இருப்பதற்கு ஜாதி ஒரு தடையாக இருக்காது.

“ஜாதியை யாராலும் ஒழிக்கவே முடியாது; சாதியம் அப்போஸ்தலர் காலத்திலேயே இருந்தது. சாதி கடைசிவரை இருக்கத்தான் செய்யும். அதை பற்றி பேசுவதை விடுங்கள்” என்று நம்மை அதைரியப்படுத்துவார்கள்.

செலின்:
ஜாதியை மட்டுமல்ல ஜேசு கிறிஸ்துவின் வருகை வரை மற்ற பாவத்தை கூட ஒழிக்க முடியாது ஏனெனில் அக்கிரமம் பெருகும் என்று சத்தியம் சொல்கிறது ஆனால் கிறிஸ்துவில் இருந்தால் எந்த பாவத்தை வெற்றி கொள்ள முடியும்.

“ஆபிரகாம் ஜாதி பார்த்தார்” என்று சாக்குபோக்கு சொல்வார்கள்.

செலின்:
ஆபிரகாம் ஜாதியை மட்டும் பார்க்கவில்லை. அடிமை பெண் ஆகாரையும் திருமணம் செய்தார்.

“இயேசு கிறிஸ்துவே கானானிய பெண்மணியை, ‘நாய்க்குட்டி’ என்று அழைத்தாரே!” என்று கடவுளையே கேவலப்படுத்துவார்கள்.

செலின்:
இங்கு கடவுளை கேவலப்படுத்த யாரும் முயற்ச்சி எடுக்கவில்லை, மாம்சத்தில் வந்த அவர் அதை எப்படி வெற்றி கொண்டார் என்பதை தான் நாங்கள் சொல்கிறோம். நீங்கள் கடவுளை குறித்து மேடைகளில் பேசும் நையாண்டிகளை விட இது கேவலமா?

ஜாதி உணர்வாளர்கள் அங்கம் வகிக்கும் சபையை சாதி அடிப்படையில் பிரித்து விடுவார்கள்.

செலின்:
இதுவரை நல்ல போதகர்கள் ஜாதியை வைத்து பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பாவத்தை குறித்து பேசும் போது அதை விரும்பாதவர்கள் ஜாதியை உள்ளே புகுத்தி பிரச்சனை செய்கிறார்கள் என்பது தான் உண்மை.

“இயேசுவே யூதகுலத்தில் பிறந்த ஒருவர்தானே!” என்று ஜாதி உணர்வாளர்கள் சுதாரிப்பார்கள்.

செலின்:
அப்படியென்றால் அதை பொய் என்று சொல்கிறீர்களா!

“ஜாதிக்கு விரோதமாக எதையும் இயேசு சொல்லவில்லையே!” என்று ஜாதி உணர்வாளர்கள் வாதாடுவார்கள்.

செலின்:
ஆமா! இயேசு கிறிஸ்து மொத்த பாவத்தையும் எதிர்த்து போராடினார். ஒரு பாவத்தை மட்டும் அல்ல.

“சகல ஜாதி சகல கோத்திரம் என்று வேதத்தில் உள்ளதே” என்று ஜாதி உணர்வாளர்கள் தங்களை தேற்றிக்கொள்வார்கள்.

செலின்:
அப்படி என்றால் இயேசு கிறிஸ்துவின் வருகை வரை அப்படி பட்ட சூழல் இருக்கும் என்பது சத்தியம் தானே!.

தங்கள் பிள்ளைகளை ‘பிற ஜாதியினருக்கு’ திருமணம் செய்து கொடுக்கமாட்டார்கள்.

செலின்
உண்மையான கிறிஸ்தவர்கள் இரட்சிக்க பட்டவர்களுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பார்கள்.

ஜாதிவெறி முற்றிப்போன ஊழியர்கள் தாழ்த்தப்பட்ட விசுவாசிகளின் வீட்டில் தண்ணீர் குடிக்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் கொடுக்கும் காணிக்கையை சந்தோஷமாக வாங்கிகொள்வார்கள்.

செலின்:
அப்படி பட்ட ஜாதி வெறியர்கள் ஊழியராக இருக்க முடியாது.

தாழ்த்தப்பட்டவர்கள் வயதுக்கு மூத்தவர்களானாலும், வயதுக்கு குறைந்த ஜாதி உணர்வாளர்கள் அவர்களை பெயர் சொல்லியே திமிரோடு அழைப்பார்கள்

செலின்: (இது அதிகார மோகம்.)

“தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி கல்லறை தோட்டம் அவசியம்” என்பார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களுடைய பிணத்தை ஜாதி உணர்வாளர்களுடைய தெருக்கள் வழியாக கொண்டு செல்ல அனுமதிக்கமாட்டார்கள்.

செலின்:
(இது எல்லாம் கிறிஸ்தவம் மற்றும் கிறிஸ்துவுக்கு வெளியே நடக்கும் காரியங்கள்.)

சில சந்தர்ப்பங்களில் “நான் ஜாதி பார்க்கமாட்டேன்” என்று புன்சிரித்துக்கொண்டே பொய் சொல்லவும் செய்வார்கள்.

செலின்:

உங்களை போன்றவர்களை அவர்கள் சந்தித்து இருப்பார்கள்.

தங்கள் சாதிக்காரர்களைத் தவிர வேறு யாரிடமும் அதிகமாக பழகமாட்டார்கள்.

செலின்: அந்த வேறு நபர்கள் பழக விரும்பாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தங்கள் பெயருக்குப்பின் தங்கள் சாதிப்பெயரை இணைத்திருப்பார்கள். அது தவறல்ல என்றும் சாதிப்பார்கள்.

செலின்:
அப்படி யாரும் போட்டு நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் போடவும் இல்லை.

“சாதி மறுப்பு Dp வைத்துத்தான் நான் சாதி மறுப்பாளன் என்று நிரூபிக்கவேண்டிய தேவை இல்லை” என்பார்கள். சாதி மறுப்பு Dp வைப்பவர்களை கேலி செய்வார்கள்.

செலின்: இது உங்கள் கற்பனை.

“ஜாதியை பற்றி பேசாதீர்கள். இயேசுவின் சுவிசேஷத்தை மட்டும் பிரசங்கம் செய்யுங்கள். ஜாதி தானாகவே ஒழிந்துவிடும்” என்று ஆலோசனை சொல்வார்கள்.

செலின்: அது தான் சத்தியம். பாவத்தை குறித்து பேசுங்கள். மனம்திரும்ப சுவிசேஷம் அறிவியுங்கள். ஏனெனில் ஜாதியின் முக்கிய தூன்டுதலே பாவம். சத்தியம் விடுதலை ஆக்கட்டும்.

“கிறிஸ்தவர்கள் பொருளாதாரத்தில் வளர்ந்தால் சாதி தானாக ஒழிந்துவிடும்” என்று அட்வைஸ் பண்ணுவார்கள்.

செலின்:
ஜாதிக்கும் பொருளாதாரத்திற்கு ம் முடிச்சி போட வேண்டிய அவசியமில்லை.

“சாதி, சாதி என்று நீங்கள் சொல்வதால்தான் சாதி என் ஞாபகத்துக்கு வருகிறது” என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள்.

செலின்:
அதை மட்டும் வைத்து ஊழியம் செய்வது எப்படி சாத்தியமாகும்!

“சாதியம் தவறு என்று ஆவியானவரே போதிப்பார். நாம் பேசவேண்டிய தேவை இல்லை” என்று நம்மை தடை செய்வார்கள்.

செலின்:
நாம் செய்ய வேண்டியதை நாம் செய்ய வேண்டும். அவரது வேலையை நாம் செய்ய கூடாது. வசனத்தை, சத்தியத்தை பேசுங்கள்.

“நீங்கள் சாதியால் பாதிக்கப்பட்டிருப்பதால்தான் சாதி மறுப்பை பற்றி பேசுகிறீர்கள்” என்று தங்கள் சாதி திமிரை வெளிப்படுத்துவார்கள்.

செலின்:
நீங்கள் அதில் நிறைய பாதிக்கப் பட்டு உள்ளீர்கள். இல்லையெனில் யாரோ ஒருவருக்கு வேலை செய்கின்றீர்கள். கிறிஸ்துவின் ஊழியன் என்றால் எல்லா பாவத்தை குறித்தும் வசனத்தை குறித்தும் பேசுவீர்கள்.

“இஸ்லாமியர் சாதி பார்க்கிறார்களே! நாம் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என்று சாக்குப்போக்கு சொல்வார்கள்.

செலின்:
இஸ்லாமிய மதத்தை ஒப்பிட்டு பேசுபவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லவே.

“கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி ஒழியவேண்டுமானால் சாதியின் மூலகாரணமாக இருக்கும் இந்துத்துவத்தை அழிக்கவேண்டும்” என்று தங்கள் மதவெறியை வெளிப்படுத்துவார்கள்.

செலின்: இந்துத்துவாவின் அடிப்படையே யூத மார்க்கமே. அப்படியெனில் யூத மார்க்கத்தை அழிக்க வேண்டியது தானே.

“சாதி மறுப்பை பற்றி போதிக்க அல்ல; நித்திய ஜீவனை பற்றி போதிக்கவே இயேசு வந்தார்” என்று விவாதம் செய்வார்கள்.

செலின்:
அது தான், ஜாதியை ஒழித்தால் நித்திய ஜீவன் கிடைக்கும் என்று ஜேசு கிறிஸ்து சொல்ல வில்லையே!

“சாதி மறுப்பை பற்றி பேசினால் நான் உங்களுக்கு காணிக்கை தரமாட்டேன்” என்று மிரட்டுவார்கள்.

செலின்:
இதுவும் உங்கள் கற்பனையில் ஒன்று.

சகோ அகத்தியன்
அன்பே முக்கியம்

(வேறு ஏதாவது கருத்துக்கள் இருந்தால் தயக்கமின்றி தெரிவிக்கவும்)


Share this page with friends