கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேத ஆதாரங்களோடு முழுமையான விளக்கம்

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா?
இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.
அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, இயேசுவின் ஊழியத்தில் அவருக்கு உதவி செய்த ராஜாங்க ஸ்தீரிகள், அவரின் ஊழியத்தில் இரட்ச்சிக்கபட்ட சகேயு, பவுலின் ஊழியத்தில் அவருக்கு உதவியாக வந்த அதிகாரிகள், அவரது ஊழியத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு இயேசுவை ஏற்று கொண்ட தலைவர்கள் மற்றும் பிலிப்பு சுவிசேஷம் அறிவித்த கந்தாகே மந்திரி போன்றவர்களை மேற்கொள் காட்டி இன்று நாம் இவைகளை நியாயப்படுத்தி இருந்தாலும் வேதாகம சத்தியங்களை அறிந்து செயல்பட கர்த்தர் கிருபை தருவாராக!
A. நாம் தேவனுடைய ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.
நமக்கு நன்றாக தெரிந்து இருக்கிறபடி தேவராஜ்யம் இவ்வுலகத்திற்கு உரியது அல்ல. நாமும் இவ்வுலகத்திற்கு உரியவர்கள் அல்ல. தேவராஜ்யம் புசிப்பும் குடிப்பும் அல்ல, கிறிஸ்துவே இங்கு தலைவர், அவரே எல்லா ஆளுகைக்கு சொந்தகாரர். எல்லா துறைதனங்களையும் வெற்றி கொண்டவர் அவரே! இந்த உலகத்திர்க்கும் தேவனுடைய ராஜ்யதிர்க்கும் எப்போதும் ஒரு பகை போராட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. உபத்திரவம் இருந்து கொண்டே இருக்கிறது.
நாம் பரலோக ராஜ்யத்தின் பிரதிநிதிகளே அன்றி இவ்வுலக பிரதிநிதிகள் என்று சொல்வதில் அர்த்தமே இருக்க வாய்ப்பு இல்லை. இவ்வுலக பிரதிநிதிகளுக்கு இல்லாத இரட்ச்சிப்பு, அபிசேசகம், வரங்கள், பரலோக ஆசீர்வாதம் போன்றவற்றை பெற்று இருக்கும் போது நாம் இந்த உலகின் ராஜீய மேன்மையை பார்ப்பது சரிதானா என்று நிதானித்து கொள்ள வேண்டும்.
இந்த பரலோக ராஜ்ஜியத்தில்
??மனம் திரும்பி கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவ பட்டு சிறுபிள்ளைகளை போன்று மாற வேண்டும்.
??நம்மை ஒரு பொருட்டாக எண்ணி மேன்மையை ஒரு கொள்ளை பொருளாக எண்ணாமல் நம்மை வெருமையாக்கி தாழ்த்தும் மனப்பான்மை வேண்டும்.
?? ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும். கணிகளினால் உலகத்திர்க்கு வெளிச்சம் கொடுக்க வேண்டும்.
??மற்படியும் ஜலத்தினாலும், ஆவியாலும் பிறக்க வேண்டும்.
??பரிசுத்த ஆியானவரின் அபிசேகம் பெற்று சாட்ச்சி உள்ள ஜீவியம் செய்து பக்தி விருத்தி அடைய வேண்டும்.
??அவரது அழைப்பை கண்டுபிடித்து முழு உலகத்திற்கும் போய் சுவிசேஷம் அறிவித்து, சபை ஸ்தாபித்து சீடராக மாற்ற வேண்டும்.
இதை செய்ய பாவத்தின் மேல், சாபத்தின் மேல், வியாதியின் மேல், பிசாசின் மேல், இந்த உலக அதிகாரங்கள் மேல் நமக்கு அதிகாரம் தருகிறார் ஏனெனில் கிறிஸ்து சகலத்தையும் வெற்றி கொண்டு இந்த சபைக்கு தலையாக இருக்கிறார். எனவே இந்த நோக்கத்திற்கு பெற்ற இந்த அதிகாரத்தை இந்த உலக அதிகாரத்தை பெற பயன்படுத்துவது கர்த்தரின் சித்தம் அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த உலக அதிகாரத்தை இயற்கைக்கு இந்த உலக நியதிக்கு அப்பாற்பட்ட பரலோக அதிகாரத்தை கொண்டு கட்டுப்படுத்தவே கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டு இருக்கிறாரே அன்றி இந்த உலக வழிகளில் அதிகாரம் பெற தேவன் நம்மை அழைக்க வில்லை என்பது தான் சத்தியம்.
B. வேதாகமத்தில் அரசியல் வேறு அரசாங்கம் வேறு என்பதை அறிதல் நன்று.
??அரசியல் என்கிற பதம் நேரடியாக வேதாகமத்தில் இல்லாவிட்டாலும் அரசியல் செய்த சவுல், அதோனியா மற்றும் அப்சலோம் போன்றவர்களை வேதாகமம் நமக்கு போதிக்கிறது. இவர்கள் வாழ்வில் இருந்து அரசியல் என்பது ஒரு பதவிக்கு வர மனிதனால் ஏற்படும் மாமிச வழிகளே ஆகும். இப்படி பதவி ஆசை பிடித்தவர்கள் நன்றாக அரசியல் செய்கின்றனர் என்றும் நாம் நொந்து கொள்கிறோம். இந்த பதவி ஆசைகளில் இருந்து தான் இன்று சபை அரசியல் மெல்ல தலை தூக்கி நிற்கிறது. இந்த பதவி மற்றும் அதிகாரத்தை மையமாக கொண்டு காய் நகர்த்தி செயல்படும் தந்திரம் தான் அரசியல்.
??ஆனால் சிலர் மக்களுக்கு நன்மை செய்கிறோம் என்றும், மக்கள் உரிமைக்காக போராடுகிறோம் என்றும் சில இயக்கங்கள் ஆரம்பித்து பின்னர், ஆட்ச்சி அதிகாரம் இருந்தால் தான் அவைகளை நிறைவேற்ற முடியும் என்று எண்ணி அரசியல் கட்சி ஆரம்பித்து விடுகின்றனர்.
??கர்த்தர் தமது ஆளுகையின் அரசாங்கத்தை நேரடியாகவே தமது ஜனமாகிய இஸ்ரவேல் ஜனத்துற்கு ஏற்படுத்தி இருந்தார். தாமே நேரடியாக அவர்களை தீர்க்கதரிசிகள் கொண்டும், நல்ல தலைவர்கள் கொண்டும் பிரமாணங்களை கொடுத்து நடத்தி வந்தார். ஆனால் அவர்கள் அதை வெறுத்து, உலகத்தில் இருப்பது போன்று உள்ள ஆளுமையை விரும்பி கர்த்தரை விட்டு விட்டார்கள் என்று பார்க்கிறோம்.
?? ஆனாலும் கர்த்தர் அதை ஏற்றுக்கொண்டு தமக்கு பிரியமான வர்களை தாமே முன்னின்று தீர்க்கதரிசிகள் கொண்டு அபிசேகம் செய்து ஆளுமையை ஏற்படுத்தினார். ஏனெனில் ஆளுகை கர்த்தருடையது. ராஜியமும் வல்லமையும் அவருக்கு உரியது என்று பலமுறை உலகிற்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.
C. உலக அரசாங்கமும் அவற்றை தலைகீழாய் மாற்றிய கர்த்தருடைய ஊழியர்களும்.
??எந்த அரசியலும் செய்யாமல், பதவி வெறி இல்லாமல், கர்த்தருக்கு பயந்து, கர்த்தர் கட்டளைகள் படி நடந்த தானியேல், அவரது நண்பர்கள் எஸ்தர், Mordecai, எஸ்ரா மற்றும் நேகேமியா மற்றும் யோசேப்பு போன்றவர்களின் வாழ்வை கற்று கொண்டால், அவர்கள் எந்த இடத்திலும் பதவி மோகம் கொண்டு செயல்படாமல் கர்த்தருக்காகவும், பரிசுத்தம், தேவீக சுபாவம் போன்றவற்ற்க்காக நின்றார்கள். கர்த்தர் அவர்களை உயர்த்தினார்.
??♀️யோசேப்பு தன் வேலையில் உண்மையாக இருந்தார். கர்த்தர் உயர்த்தினார்.
??♀️எஸ்தர் கீழ்படிதல் உள்ளவராக இருந்தார். தேவன் அவரை உயர்த்தினார்.
??♀️தானியேல் பிரதிஷ்டை, கர்த்தரை சார்ந்து, குற்றமற்றவன் என்கிற அந்தஸ்த்தில் ஞானம் உள்ளவனாக இருந்தார் கர்த்தர் ஏற்ற காலத்தில் உயர்த்தினார்.
??♀️நேகேமியா கர்த்தருடைய வாசஸ்தலத்தை குறித்து கலங்கினான். கர்த்தர் ராஜாவின் கண்களில் தயவு கிடைக்க பண்ணினார்.
இவர்கள் ஒருபோதும் பதவியை நோக்கி, பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று காய் நகர்த்தினவர்கள் அல்ல, மாறாக தங்கள் கடமைகளை உண்மையாக செய்து கர்த்தருக்கு வேண்டி நின்றார்கள். கர்த்தர் அவர்களுக்காக ராஜ்யத்தை அசைத்து கர்த்தரே தேவன் என்று எகிப்து, அசீரியா, பாபிலோனிய, மேதிய, பெர்சிய, கிரேக்க மற்றும் பிற சாம்ராஜ்யங்களில் தமது மகிமையை வெளிப்படுத்தினார்.
??இவர்களின் உயர்வுகளை குறித்து பேசி, அந்த பதவியை அடைய துடிக்கும் நாம், அவர்களை போன்று சத்தியத்திற்காக நின்று, பாடுகள் வழியாக சென்று, கர்த்தருடைய பயங்கரம் வெளிப்பட, தேவ மகிமை வெளிப்பட விட்டு கொடுக்க மனமின்றி நாமே நமது அழைப்பின், பரலோக ராஜ்யத்தின் நோக்கம் தெரியாமல் ஏதோ கட்சி, மக்கள் இயக்கம் என்று போய் கொண்டு இருப்பது எத்தனை வேடிக்கை என்பது போக போக தான் புரிந்து கொள்வார்கள்.
D. கிறிஸ்துவும் அவர் காலத்து அரசாங்கங்களின் நிலைகளும்.
??இயேசுவை கொன்று போட வகை தேடின எரோதுவை நரி என்று சொல்லி, இன்றும் நாளையும் நான் இங்கு தான் இருப்பேன் என்று எரோதுவின் மிரட்டலுக்கு பயப்படாமல் செயலாற்றினார்.
??தேவ ஆலயத்தை அதிகாரம் கொண்டு கட்டுபடுத்தி இருந்த பரிசேய வேதபாரக, ஆசாரிய அதிகாரத்தை தாண்டி, சாட்டையை எடுத்து அதை சுத்திகரித்து, தமது அதிகாரத்தை நாட்டவில்லையா?
?? தாம் வேத வாக்கியங்களில் சொல்லப்பட்ட படி பாடுபட்டு மரித்தாலும், மூன்றாவது உயிர்த்தெழுந்து ரோம அரசாங்கத்தின் முத்திரையை உடைத்து தமது மகிமையை நிலை நாட்ட வில்லையா?
??சகல துறத்தனங்கள் மற்றும் பாதாள வல்லமையை வென்று எல்லாவற்றையும் வெளியரங்க கோலமாக்கி வெற்றி சிறந்து சபைக்கு தலையாக எல்லா நாமத்திற்கு மேலான நாமத்தை பெற்று, எல்லாவற்றையும் வென்று இன்று எல்லா முழங்கால் முடங்கும் அளவு வல்லமை அதிகாரம் பெற்று இருக்கிறாரே!
E. அப்போஸ்தலர்கள் மற்றும் அவர்கள் காலத்தின் அரசாங்கங்களின் நிலைகள்.
?? மனுசனுக்கு கீழ்ப்படிவதை பார்க்கிலும் கர்த்தருக்கு கீழ்படிதல் தான் முக்கியம் என்று சுவிசேஷ விடயத்தில் தைரியமாக போராடி, கூடி இருந்து ஜெபித்து, அந்த இடம் அசைந்து, பின்னர் பலமாக சுவிசேஷம் அறிவித்து, நிலத்தையும் விற்று தங்கள் பாதத்தில் வைக்க பெற்ற அதிகாரத்தை விடவா இந்த அரசாங்க அதிகாரம்.
?? கர்த்தருக்கு மகிமை கொடுக்காமல் பிறரை பிரியபடுத்த பேதிருவை சிறையில் அடைத்த போது அந்த எரோதுவையே கதி கலங்க வைத்த தூதரை அனுப்பி விடுவித்தார் என்றால், இதை விடவா இந்த உலகின் அதிகாரம் பெரியது? முடிவில் புழு புழுத்து செத்தான் என்று எழுதி இருக்கிறதே.
?? எத்தனை முறை தூதர்களை அனுப்பி கர்த்தர் விடுதலை ஆக்கி இருக்கிறார். அதை பார்க்கும் போது உலகின் அதிகாரத்தை விட சபையின் அதிகாரம் பெரியது. இதை காண நம் கண்கள் திறக்க வேண்டும். கிறிஸ்துவின் வல்லமை என்ன வென்று பார்க்க மனகண்களை கர்த்தர் பிரகாசம் அடைய செய்வாராக!
??சுவிசேசத்தின் நிமித்தம், கட்டுயுண்டவனாக சிறைச்சாலைகளில் எத்தனை முறை பவுல் பாடு பட தன்னை விட்டு கொடுத்தும் ஒரு போதும் பயந்து ஒதுங்க வில்லை. தைரியமாக தன் காரியங்களை தனக்கு தானே வாதாடி, கிறிஸ்துவை அறிவித்து, நீதியை, மனம்திரும்புதல், நியாயதீர்ப்பு குறித்து பேசி அகரிப்பா ராஜவையே கதி கலங்க செய்யவில்லையா?
F. கிறிஸ்தவத்தின் பிரதான நோக்கத்தை அறிந்து கொண்டால் அதுவே உயர்ந்தது
?? சுவிசேஷம் அறிவித்து தேவராஜியத்தை ஸ்தாபிப்பதே நமது பிரதான நோக்கம். அப்படி சுவிசேசமயமான போது தான் அநேக கிறிஸ்தவ ராஜியங்கள் பிற நாடுகளுக்கு முன் உதாரணமாக மாறியது. மனம் திரும்புதல், பாவமன்னிப்பு, நியாயத்தீர்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் பிரசங்கிக்க ப்பட்ட சுவிசேஷம் தான் மனிதனை மாற்றியது. அந்த மாற்றங்களின் அடிப்படையில் தான் தற்போதைய நல்ல அரசியல் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே கிறிஸ்துவை அறிவித்து சீசறாக்கும் பிராதன கட்டளை தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
??அரசாங்க சட்டங்களுக்கு பயந்து, உரிமைக்காக போராடுகிறோம் என்றும், நமது நியாயங்கள் மறுக்க படுவதால் அதை பெற அரசியல் இயக்கங்கள் ஆரம்பித்து, உலக வழிகளில் சென்றால் நாம் உலகத்திற்கு உரியவர்கள் அல்லவே! நாம் கர்த்தருடைய பாராக்கிரமம் வெளிப்பட ஜெபிக்க தான் அழைக்க பட்டுள்ளோம். அப்படி ஜெபிக்கும் போது ஏற்படும் மாற்றமே பயங்கரமானது. உதாரணமாக தமிழ் நாட்டு மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்த போது ஜெபித்த ஜெபத்தை கர்த்தர் கேட்டு பதில் தர வில்லையா? இல்லை அதை போராடி தான் விடுதலை வாங்கினோமா? அதை கொண்டு வந்தவரின் முடிவு என்ன ஆனது?
?? பரலோக வல்லமை, பரலோக மகிமை, பரலோக பயங்கரம், பரலோக ராஜ்யத்தின் திறவுகோல், பரலோக ராஜ்யத்தின் மேன்மை மற்றும் அதிகாரம் நம் மூலம் வெளிப்பட்டு இந்தியாவை அசைக்கவே கர்த்தர் நம்மை அழைத்து இருக்கிறார். அன்று அப்போஸ்தலர் நாட்களில் நடந்தவைகளை ஏன் நம் கண்கள் காண வில்லை? அன்றைய ஊக்கமான ஜெபம் இல்லை, அன்றைய சமரசமில்ல்லாத வாழ்க்கையின் பிரசங்கம் இல்லை, அன்றைய தைரியமாக சுவிசேஷம் அறிவித்து பாடுபடும் எண்ணம் இல்லை இனியாவது பிரபலத்தை நோக்கி, பதவியை நோக்கி காய் நகர்த்தும் நமது நோக்கங்கள் சரியாகட்டும்.
??கிறிஸ்து யார்? அவரது அதிகாரம் என்ன? அவரது ராஜ்யத்தின் வல்லமை மற்றும் அதிகாரம் என்ன என்பதையும், அவரது மகத்துவத்தை வெளிப்படுத்தி, உலகிற்கு வெளிச்சமாக, பிரகாசிக்க, அவரது பரலோக மகிமையை வெளிபடுத்த தான் அவர் நம்மை அழைத்துச் இருக்கிறார். நமது அழைப்பயும் தெரிந்து கொள்ளுதலும் அறிந்து கொள்ளப்பட்டால் மிகவும் நன்று. இவ்வளவு பெரிதாக இருக்கும் ரட்ச்சிப்பு, அழைப்பு போன்றவற்றை அற்பமாக எண்ணி உலக வழிகளில் போவது எத்தனை அபத்தம்.
G. அப்படியென்றால் நாம் இந்த உலகின் கட்டமைப்பில் தானே வாழ்கிறோம்? அரசியலில் ஈடுபட உரிமையே இல்லையா?
?? நாம் நல்ல உக்கிரானக்கரர்களாக இருக்க கர்த்தர் அழைக்கிறார். கடமை மற்றும் செயல்களில் உண்மை உள்ள நல்ல குடிமக்களாக இருக்க அழைக்கிறார். அப்படி இருக்கும் போது, அரசாங்கத்தில் நிச்சயம் நம்மை உயர்த்துவார்.
?? நல்ல அதிகாரிகள், அரசாங்க துறைகளில் தானியேல் போன்று தங்களை தீட்டுபடுத்தாமல், சகலவற்றிலும் சமர்த்தற்களாக விசேஷித்த ஆவி, பரிசுத்த தேவர்களின் ஆவி இவர்களிடம் இருக்கிறது என்று அரசாங்கமே கவனிக்க தக்க குற்றமற்றவர்கள் என்று பெயர் பெறுவோம். அப்படி பட்ட நல்ல காரியசமர்த்தற்களை உருவாக்குவதில் சபை போதனையிலும், வரங்களிலும், அபிசேசகத்திலும் நிரைந்தவற்களை அடையாளம் காட்டட்டும்.
??தேவனுடைய வல்லமையை விளங்க பண்ணும், சத்தியத்தை சத்தியமாக பிரசங்கம் செய்து, அதற்காக விலை கொடுக்கும் சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியர்கள் எழும்பட்டும். தேவ மகிமையை இந்த இந்தியா காணட்டும்.
??கர்த்தருக்கு பிரியமான விதத்தில் கர்த்தருடைய சித்தத்தின் அடிப்படையில் அதிகாரங்களுககு கீழ்படிந்து, நாம் சமாதானமான ஜீவனம் பண்ணும் படி ஏற்படுத்த பட்ட அதிகாரங்களுககு ஜெபிக்கிறவர்களாக மாற வேண்டும்.
ஏனெனில் நமது மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு, தெய்வீக வல்லமை மற்றும் தெய்வீக கிரியைகளை விசுவாசிக்கும் நாம் அவைகளின் பிரதிபலிப்பாக தான் இருக்க வேண்டுமே தவிர இவ்வுலகத்தின் பிரதிபலிப்பாக இருப்பதில் எந்த நிறைவும் இல்லை. ஏனெனில் இந்த உலகின் வேசம் கலைந்து போகுமே!
இயேசுவே உம்முடைய ராஜ்யம் வருவதாக ஏனெனில் ராஜ்யமும் வல்லமையும் கணமும் என்றைக்கும் உம்முடையவைகளே!
செலின்