கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

அரசியலில் ஈடுபாடு கொள்ளலாமா?
இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில் இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.
அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் பதவி வகித்த தானியேல், தானியேலின் நண்பர்கள், நெகேமியா மற்றும் நண்பர்கள், பிரதம மந்திரியாக பதவி உயர்வு பெற்ற யோசேப்பு, எஸ்தர் ராஜாத்தி, இயேசுவின் ஊழியத்தில் அவருக்கு உதவி செய்த ராஜாங்க ஸ்தீரிகள், அவரின் ஊழியத்தில் இரட்ச்சிக்கபட்ட சகேயு, பவுலின் ஊழியத்தில் அவருக்கு உதவியாக வந்த அதிகாரிகள், அவரது ஊழியத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு இயேசுவை ஏற்று கொண்ட தலைவர்கள் மற்றும் பிலிப்பு சுவிசேஷம் அறிவித்த கந்தாகே மந்திரி போன்றவர்களை மேற்கொள் காட்டி இன்று நாம் இவைகளை நியாயப்படுத்தி இருந்தாலும் வேதாகம சத்தியங்களை அறிந்து செயல்பட கர்த்தர் கிருபை தருவாராக!
A. நாம் தேவனுடைய ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.
நமக்கு நன்றாக தெரிந்து இருக்கிறபடி தேவராஜ்யம் இவ்வுலகத்திற்கு உரியது அல்ல. நாமும் இவ்வுலகத்திற்கு உரியவர்கள் அல்ல. தேவராஜ்யம் புசிப்பும் குடிப்பும் அல்ல, கிறிஸ்துவே இங்கு தலைவர், அவரே எல்லா ஆளுகைக்கு சொந்தகாரர். எல்லா துறைதனங்களையும் வெற்றி கொண்டவர் அவரே! இந்த உலகத்திர்க்கும் தேவனுடைய ராஜ்யதிர்க்கும் எப்போதும் ஒரு பகை போராட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. உபத்திரவம் இருந்து கொண்டே இருக்கிறது.
நாம் பரலோக ராஜ்யத்தின் பிரதிநிதிகளே அன்றி இவ்வுலக பிரதிநிதிகள் என்று சொல்வதில் அர்த்தமே இருக்க வாய்ப்பு இல்லை. இவ்வுலக பிரதிநிதிகளுக்கு இல்லாத இரட்ச்சிப்பு, அபிசேசகம், வரங்கள், பரலோக ஆசீர்வாதம் போன்றவற்றை பெற்று இருக்கும் போது நாம் இந்த உலகின் ராஜீய மேன்மையை பார்ப்பது சரிதானா என்று நிதானித்து கொள்ள வேண்டும்.
இந்த பரலோக ராஜ்ஜியத்தில்
மனம் திரும்பி கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவ பட்டு சிறுபிள்ளைகளை போன்று மாற வேண்டும்.
நம்மை ஒரு பொருட்டாக எண்ணி மேன்மையை ஒரு கொள்ளை பொருளாக எண்ணாமல் நம்மை வெருமையாக்கி தாழ்த்தும் மனப்பான்மை வேண்டும்.
ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும். கணிகளினால் உலகத்திர்க்கு வெளிச்சம் கொடுக்க வேண்டும்.
மற்படியும் ஜலத்தினாலும், ஆவியாலும் பிறக்க வேண்டும்.
பரிசுத்த ஆியானவரின் அபிசேகம் பெற்று சாட்ச்சி உள்ள ஜீவியம் செய்து பக்தி விருத்தி அடைய வேண்டும்.
அவரது அழைப்பை கண்டுபிடித்து முழு உலகத்திற்கும் போய் சுவிசேஷம் அறிவித்து, சபை ஸ்தாபித்து சீடராக மாற்ற வேண்டும்.
இதை செய்ய பாவத்தின் மேல், சாபத்தின் மேல், வியாதியின் மேல், பிசாசின் மேல், இந்த உலக அதிகாரங்கள் மேல் நமக்கு அதிகாரம் தருகிறார் ஏனெனில் கிறிஸ்து சகலத்தையும் வெற்றி கொண்டு இந்த சபைக்கு தலையாக இருக்கிறார். எனவே இந்த நோக்கத்திற்கு பெற்ற இந்த அதிகாரத்தை இந்த உலக அதிகாரத்தை பெற பயன்படுத்துவது கர்த்தரின் சித்தம் அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த உலக அதிகாரத்தை இயற்கைக்கு இந்த உலக நியதிக்கு அப்பாற்பட்ட பரலோக அதிகாரத்தை கொண்டு கட்டுப்படுத்தவே கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டு இருக்கிறாரே அன்றி இந்த உலக வழிகளில் அதிகாரம் பெற தேவன் நம்மை அழைக்க வில்லை என்பது தான் சத்தியம்.
( தொடரும்)
செலின்