கோழி கீழி கிடைக்குமா?… வித்யா’வின் சமூகப் பார்வை

Share this page with friends

போன ஞாயிற்று கிழமை
கோழி கறி சாப்பிட்டது


சாயங்காலமும் விடியற்காலமுமாகி
இதோடு நாலு நாளாயிற்று

ஏதாவது
கோழி கீழி கிடைக்குமா?


பத்து ரூபாய கையில வச்சுக்கிட்டு
பாத்து பாத்து
ரெண்டு நாளை
கடத்திகிட்டு இருக்கும்
தாய்க்கு பத்திகிட்டு வந்தது கோபம்

டே, ஊருக்குள்ள போய் பாரு
கூழுக்கே வழியில்லாம
மருந்து வாங்க,
மருந்துக்குக்கூட  காசு இல்லாம
ஊர் சனம் தவதாயப்பட்டுக்  
கெடக்கும்போது

ஒனக்கு கோழி கேக்குதா?

ஒன்னையும்
ஒங்கப்பாவையும்
பத்மு தீவில
யோவானை போட்டதுபோல
போட்டா
பத்து மணிநேரம் தாங்கமாட்டீங்கடா
 

இதுக்குத்தான் அப்பப்ப
பாஸ்டிங் போடுன்னு சொன்னேன்
எங்க கேக்குறீங்க

கொஞ்சம் அப்படியே
பொடிநடையா நடந்து
பெரியாஸ்பத்திரிக்கு போய்

கொரோனா வார்ட கொஞ்சம்
எட்டிப்பாத்துட்டு வா…

சற்று நேர அமைதிக்கு பின்
சத்தம் வந்தது 

கோழியும் வேணாம்
கீழியும் வேணாம்


ஊரவச்சு
மோரை ஊத்திவச்சுருக்கியே
அந்த கம்மங்கூழை
அப்படியே கும்பாவில ஊத்தி
கொண்டுவா


பச்ச வெங்காயத்த வெச்சு
ஒரு பிடி பிடிச்சிடுறேன்
கொரோனாவுக்கு நல்லது
குடும்பத்துக்கும் நல்லது


போதுமென்கிற மனதுடனே கூடிய
தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
உண்ணவும் உடுக்கவும்
நமக்கு உண்டாயிருந்தால்
அது போதுமென்றிருக்கக்கடவோம்.

(1 தீமோத்தேயு 6:6,8)

நான் ஒரு கிராமத்துக்காரன்

(நாற்பது வருஷத்துக்கு முன்னாடி
நடந்து திரிந்த ஊருக்குள்ளே போன
நினைவை தடுக்க முடியாமல்
சற்று முன் எழுதியது).


Pr. ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com


Share this page with friends