கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா?

Share this page with friends

கர்த்தர் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லலாமா?

சோதிக்கிறவன் எவனும் தான் தேவனால் சோதிக்கப்படுகிரான் என்று சொல்லாதிருப்பானாக? அப்படியென்றால் சோதனையை எப்படி எடுத்துக் கொள்வது?

சோதனை நேர்மறை மற்றும் எதிர்மறை சொற்களால் வேதத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கபட்டார் என்றும், ஆபிரகாமை கர்த்தர் சோதித்தார் என்றும், இஸ்ரவேலை கர்த்தர் சோதித்து அறிகிறார் என்றும், யோபுவை கர்த்தர் சோதிக்க பிசாசு துண்டினான் என்றும், எசேக்கியா ராஜாவை கர்த்தர் சோதிக்க விட்டுக் கொடுத்தார் என்றும் வேதத்தில் நாம் பார்க்கிறோம்.

இந்த சோதித்தல் என்கிற பதத்திற்கு பரிசோதித்தல், பரீட்ச்சைப் பார்த்தல், நிதானித்தல், உரசிப் பார்த்தல், மெருகூட்டுதல், புடமிடுதல், உற்றுப்பார்த்தல், ஆராய்ந்துப் பார்த்தல், உயித்துப் பார்த்தல் என்று பல அர்த்தங்கள் தமிழில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால்

தேவன் நம்மை பொல்லாங்கை அல்லது தீமையை தூண்டி விட்டு சோதிக்கிறவர் அல்ல! நமக்கு பொல்லாப்பு செய்கிறவரும் அல்ல!

அதே நேரத்தில் சோதனையை அனுமதிக்கிறார். தீமைகளை நன்மையாக மாற்றத் தான் சோதனை, உலகம், பாவம், மாம்சம், மற்றும் பொல்லாங்கு நிறைந்த இந்த உலகில் தான் நம்மை கர்த்தர் வைத்து இருக்கிறார்.

சத்துரு/ பிசாசு தன்னுடைய சுபாவத்தின் அடிப்படையில் சோதனையில் சிக்க வைத்து அவனை போல நம்மையும் விழ தள்ளுகிரான். பிசாசின் தூண்டுதல் நம்மை எப்படியும் பாவம் செய்ய வைத்து மறுபடியும் மறுபடியும் தேவ மகிமை, கர்த்தர் பிரசனத்தில் இருந்து நம்மை விலக வைப்பதே!

ஆனால் கர்த்தரும் நம்மை அவரது சூபாவத்தில் வர இருதயங்களை சீர்தூக்கிப் பார்க்கிறார். நாம் அவரது சுபாவத்தை வெளிப்படுத்தி அவரை போல மாருவோமா என்று நம்மை அவரின் பரிசுத்தத்தின் அடிப்படையில் பரிசோதிக்கிறார். அப்படி அவரால் சோதிக்க அனுமதிக்கப் படுகிறவர்களுக்கு அவர் உதவி செய்கின்றார், தப்பி செல்ல வழி செய்கின்டார், தாங்கி கொள்ள கிருபை மற்றும் பெலம் தருகிறார், அந்த சோதனையின் முடிவில் ஜீவகீரிடத்தை தருகிறார்.

உதாரணமாக ஆபிரகாமை கர்த்தர் சோதித்தார் என்று பார்க்கிறோம் எப்படி என்று பார்ப்போம்.

A. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் அவனிடம் உண்டா என்று அப்படிப்பட்ட சூழலை அனுமதித்து சோதித்து பார்த்தார்.

B. கர்த்தரின் சத்தத்தின் படி கீழ்படிவாரா என்று சோதித்துப் பார்த்தார்.

C. கர்த்தர் பார்த்து கொள்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறதா என்றுப் பார்க்க சோதித்து அறிந்தார்.

D. பாடுகள் மத்தியிலும் கர்த்தரை பலிபீடம் கட்டி சேவிப்பாரா? என்று சோதித்து பார்த்தார்.

முடிவில் மனிதனுக்கு பயப்படாமல், கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்ப்படிபவர் என்றும், கர்த்தர் பார்த்து கொள்வார் என்றும் கர்த்தருக்கு பலிபீடம் கட்டி விறகு அடுக்கி தனது சொந்த குமாரனை பலியிட விட்டு கொடுத்ததினால் தான் அந்த பலிபீடத்தில் அசரீதி சத்தம் கேட்டது, முள்ளுகளில் சிக்கி இருந்த பலியை கர்த்தர் கொடுத்து ஆபிரகாமை நீருபித்தார்.

எனவே பாவம் செய்துவிட்டு, பொல்லாங்கனை போன்று பொல்லாப்புகள் மற்றும் தீமைகளை செய்ய நமது சரீரத்தை விட்டு கொடுத்து விட்டு தேவன் நம்மை சோதிக்கிறார் என்று சொல்லாதிருப்போமாக!

கர்த்தர் யோபுவின் சன்மார்க்க குணம், உத்தம குணம், பொல்லாப்புக்கு விலகிறவன், மற்றும் நீதிமான் என்பதை நீருபிக்க தான் அதற்கு எதிர்மாறான சூழ்நிலைகளை அனுமதித்தார். பிசாசு கொண்டு வரும் எதிர்மறையான சூழ்நிலைகளில் கர்த்தரின் பரிசுத்த சுபாவத்தை வெளிப்படுத்தவே கர்த்தர் நம்மை பரிசோதித்து அறிகிறார். பாவ சூழலில் பாவம் செய்யாமல் இருப்பதே சோதனையை வெற்றிக் கொள்வது ஆகும். அதை தான் கர்த்தர் தமது பிள்ளைகளிடம் எதிர்பார்த்து, நம்மை பரிசுத்தமாக காத்துக் கொள்கிறோமா என்பதை அறியவே அவர் சோதனைக்கு விட்டு கொடுக்கிறார்.

செலின்


Share this page with friends