பெண்கள் ஊழியம் செய்யலாமா?

Share this page with friends

பெண் மேய்ப்பர்கள் சபைகளில் பிரகாசிக்க வேண்டும்
எல்லா சபைகளிலும் பெண் பாஸ்டர்கள் எழ வேண்டும். ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்து நடத்தி வருகிறார். அவர்களோடு பேசுகிறார். உலகமெங்கும் பெண்கள்தான் ஜெப வீரர்களாக விளங்குகிறார்கள். கர்த்தரின் சேனையில் வீரர்களாக திகழ்கிறார்கள். வேதாகமத்தின்படி நடக்கிறார்கள். அல்லேலூயா!

வேதாகமத்தில் எஸ்தர் ராணியின் ஊழியம் குறிப்பிடத்தக்கது. இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேரு ராஜாவின் மனைவிதான் எஸ்தர். ராணியாகயிருந்தாலும் ராஜாவை நேரடியாக சந்தித்துப்பேச அனுமதிபெற்றுதான் செல்ல முடியும். உள்முற்றத்திற்க்கு அனுமதியில்லாமல் சென்றால் சாகத்தான் வேண்டும். எல்லா வசதிகளோடும் அதிகாரத்தோடும் எஸ்தர் வாழ்ந்தாலும் ராஜாவின் அதிகாரமே அரசாங்கத்தை ஆளும். எஸ்தர் யூதப்பெண் என்பது ராஜா முதல் யாருக்கும் தெரியாது. எஸ்தரின் வளர்ப்பு அப்பா மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை பணியில் இருப்பவர். சிறுவயதுமுதலே அவர் சொல்படிகேட்டு எஸ்தர் நடந்து வந்தாள். மொர்தெகாயின் எதிரியான ஆமோன் தேசத்திலுள்ள இஸ்ரவேலர்கள் அத்தனைபேரையும் ஒரேநாளில் கொல்ல ராஜாவிடம் வஞ்சகமாய்பேசி ஆணை பெற்றான். ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் அறிவிக்கப்பட்டது. மொர்தெகாய் இதை எஸ்தரிடம் சொல்லி ராஜாவிடம்பேசி அந்த ஆணையை நிறுத்த சொன்னான். எஸ்தரிடம் விளக்கி சொன்னான். ஆணையின் நகலையும் காண்பிக்கச் செய்தான். மொர்தெகாய் இரட்டுயுடுத்தி புலம்பியது எஸ்தர் கேட்டு துக்கமடைந்தாள். எஸ்தர் இஸ்ரவேல் மக்களை காப்பாற்ற துணிந்தாள்.

சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம். இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
(எஸ்தர் 4:16)

எஸ்தர் ராஜாவிடத்தில் தைரியமாக சென்று ஆமானின் துணிகர செயலை சொன்னாள். ராஜா கோபமடைந்து ஆமோனை தூக்கிலிட ஆணையிட்டான். இஸ்ரவேல் தேசம் காக்கப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்தது.

மோசேயின் வாழ்க்கையில் ஆறு பெண்கள் :
மருத்துவச்சிகள்

 1. சிப்பிராள்
 2. பூவாள் – துணிகரமாக
  (ஆண் குழந்தைகளை கொல்லச் சொல்லியிருந்தும்) மோசேயை காப்பாற்றியவர்கள்
  மற்றும்
 3. யோகெபெத் – மோசேயை நாணல் பெட்டியில் வைத்து காப்பாற்றியவள்.

4 .மிரியாம் – மூத்த சகோதரி – ராஜாத்தியிடம் தைரியமாகப்பேசி மோசேயை காப்பாற்றியவள்.

 1. எகிப்து ராஜகுமாரத்தி பித்தியா எபிரெய குழந்தை மோசேயை தனது சொந்த மகனாக வளர்த்தவள்.
 2. சிப்போராள் மீதியானிய தேசத்து பெண் – மனைவி

விடுதலை வீரர் மோசேயின் வாழ்க்கையில் ஆறு பெண்கள், அவருடைய உயிரைக் காப்பற்றியுள்ளார்கள். அவர்களது பெயர்கள் வேதத்தில் பிரபலமாக இல்லாவிட்டாலும், இவர்கள் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்து, தைரியமாக சத்துருவை எதிர்த்துநின்று, திறமையாக துரிதமாய் துணிவுடன் செயல்பட்டு மோசேயின் உயிரைக் காப்பாற்றி இஸ்ரவேல் தேசம் உருவாக காரணமாக இருந்துள்ளார்கள். இந்த ஆறு பெண்களின் வாழ்க்கை சம்பவங்களை நிச்சயமாக ஒவ்வொரு பெண்களும் அறிந்திருக்க வேண்டும்.

சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து ஆண் குழந்தைகளைக் காப்பாற்றியதால் மோசேயும் காப்பாற்றப்பட்டார். ஆகவே தேவன் அவர்களுக்கு நன்மை செய்தார், மேலும் அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். யோகெபெத் தியாக உள்ளத்துடன் குழந்தையைக் காப்பாற்றி, திறமையாக நாணல்பெட்டி மூலமாக மோசேவைக் காப்பாற்றியதால், தேவன் அவளுடைய மூன்று பிள்ளைகளையும், இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் மிகப்பெரிய ஊழியத்துக்கு அழைத்ததைப் பார்க்கிறோம். மிரியாம் ஞானமாய் துணிவுடன் ராஜகுமாரத்தியுடன் பேசி மோசேயை காப்பற்றியதின் மூலம் கர்த்தர் அவளை வேதாகமத்தின் முதல் தீர்க்கதரிசியாக மாற்றினார். ராஜகுமாரத்தி பித்தியா எபிரெய குழந்தை மோசேயை தனது சொந்த மகனாக ஏற்றுக் கொண்டு காப்பாற்றியதால் தேவன் அவளை யூதேயா கோத்திரத்துடன் இணைத்து தமது சொந்த மகளாக மாற்றினார். சிப்போராள் மீதியானிய தேசத்து பெண்ணாக இருந்த போதிலும் தேவனுக்கு கீழ்ப்படிந்து மோசேயின் உயிரைக் காப்பாற்றிய படியால் அவளையும் தேவன் இஸ்ரவேல் பயணத்தில் இணைத்துக் கொண்டார். ஆனாலும் மோசே தியாக உள்ளத்தோடு திருப்பி அனுப்பி விடுகிறார். மோசேயை விட்டு தன்னிடத்திற்க்கே அவள் தகப்பனார் திருப்பி அழைத்துச்சென்றதை பார்க்கிறோம். அதற்க்குப்பிறகு சிப்போராள் பற்றி எழுதப்படவில்லை. கர்த்தர் மோசேயின் பிள்ளைகளுக்கு அவர்கள் லேவி கோத்திரமாயிருந்தாலும் கானான் தேசத்தில் அவர்களுக்கு நிலத்தை ததந்தார். விடுதலை வீரன் மோசேயின் பயணம் கர்த்தரால் வெற்றிப்பெற்றது.

வேதத்தில் பெண் தீர்க்கதரிசிகள் :

மிரியம் (யாத்திராகமம் 15: 20)

தெபோராள் (நியாயதிபதிகள் 4: 4)

உல்தாள் (2 இராஜா 22: 14)

ஏசாயாவின் மனைவி  (ஏசாயா 8: 3)

அன்னாள் (லூக்கா 2: 36-38)

பிலிப்பின் 4 மகள்கள்         (அப்போஸ்தலர் 21: 8-9)

ராக்கேல் ( ஆதி 30:24)

அன்னாள் (1 சாமுவேல் 2: 1- 10)

அபிகாயில் (1 சாமுவேல் 25: 28-31)

எலிசபெத் (லூக்கா 1: 41-45)

இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள்   (லூக்கா 1: 46- 55)

தீர்க்கதரிசி குழுக்கள்:
• 1 இராஜா 18: 4,13
• 2 இராஜா 23 :2
• அப்போஸ்தலர் 11 :27

கடைசி காலங்களான தற்போது உங்களது குழந்தைகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் – மூப்பர் கனவு காண்பார்கள், வாலிபர் தரிசனம் காண்பார்கள் என்று யோவேல் தீர்க்கதரிசி  உரைத்திருக்கிறார். தீர்க்கதரிசிகள் எண்ணிக்கை இப்போது அதிகமாகியிருக்கிறது, கடைசி காலமென நிரூபணம் ஆகிவிட்டது.

(யோவேல் 2 : 28- 29) “அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.

கானானியப் பெண்:

தீரூ, சீதோன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஒரு கானானியப் பெண் வசித்து வந்தாள். அவள் இயேசுவைப் பற்றியும், அவர் செய்கின்ற அற்புதங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தாள்.  கானானியர்கள் பிற இனத்தவர். இயேசுவின் ஊழியமோ யூதர்களின் மத்தியில் தான் இருந்தது. அந்த கானானியப் பெண்ணுக்கு இயேசு யூதர் என்பதும், அவர் தாவீது ராஜாவின் வம்சம் என்பதும், அவரே இரட்சகர் என்பதும் எல்லாமே தெரிந்திருந்தது. அவளுடைய மகளை பேய்பிடித்திருந்தது. இயேசுவால் மட்டுமே அவளைக் குணப்படுத்த முடியும் என அவள் நம்பினாள். ஒரு நாள் இயேசு அந்த நாடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவள் அவரை எதிர்கொண்டு ஓடினாள்.

“அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.             (மத்தேயு 15 :22)

இயேசு அவளுடைய விசுவாசத்தைக் கொஞ்சம் சோதிக்க விரும்பினார். எனவே அமைதியாகப் போய்க்கொண்டிருந்தார். அது சீடர்களுக்கே பொறுக்கவில்லை.

“இந்தப் பெண் ரொம்ப நேரமா நமக்குப் பின்னாடியே கத்திக் கொண்டு வருகிறாள். ரெண்டுல ஒண்ணு சொல்லி அனுப்பிடுங்க” எனௌறு சீடர்கள் சொன்னார்கள்.

அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லயென்றார்.    (மத்தேயு 15 :24)

அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள்.              (மத்தேயு 15 :25)

இயேசு அவளை சோதிப்பதை நிறுத்தவில்லை. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
(மத்தேயு 15 :26)

கானானியப்பெண்ணை நாய் என்று குறிப்பிட்டார். ஆனாலும் அவள் அதை மனதில் வைக்காமல், (நீங்கள் அந்த பெண்ணின் நிலைமையிலிருந்து உங்களை நாம் என்று இயேசு சொன்னால் எந்தவிதமாக முகத்தை நீங்கள் காட்டியிருப்பீர்கள்?)

அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். (மத்தேயு 15 :27)

அவளுடைய விசுவாசத்தைக் கண்ட இயேசு வியந்தார்,
“பெண்ணே உன் விசுவாசம் பெரிது. நீ விரும்கிறபடியே ஆகக்கடவது என்றார். அந்த வினாடியே அவள் மகள் ஆரோக்கியமானாள்.”

இயேசுவின் வார்த்தைக்கு முன்னால் நிற்க பேய்களால் முடிவதில்லை. ஒரு பிற இன பெண்ணின் விசுவாசம், இஸ்ரவேல்  மக்களின் விசுவாசத்தை விடப் பெரியது என விளக்குவதற்காக இயேசு இதைச்  சொன்னார். உண்மையில் இயேசு அந்த ஒரே ஒரு பெண்ணின் மகளைக் காப்பாற்றவே ஐம்பது கிலோ மீட்டர் தூரம் நடந்து தீரூ சீதோன் பகுதிக்குச் சென்றார்.

அந்தப் பெண் தனது மகளை விட்டு விட்டு இஸ்ரவேல் பகுதிக்கு வர முடியாத சூழலில் இருந்தார். எனவே இயேசுவே அந்தப் பகுதிக்குச் சென்றார்.  முடிந்ததும் மீண்டும் கலிலேயாவுக்குத் திரும்பினார்.

கானானியப் பெண் இயேசுவைக் கண்டதும், இனிமேல் வேறு வழியே இல்லை. இயேசுவிடம் முழுமையாய் சரணடைந்தே தீருவது என முடிவெடுத்தாள். அதற்காக ஒரு நாயைப் போல தன்னை தாழ்த்திக் கொள்ளவும் அவள் இம்மியளவும் தயங்கவில்லை. இயேசு அவளுடைய விசுவாசத்தை அங்கீகரிக்கிறார்.

இன்று நாம் நாய்களின் இடத்திலல்ல, அவருடைய பிள்ளைகள் எனும் இடத்தில் இருக்கிறோம். பிற இனத்தவரான நமக்கும் இயேசு தனது சிலுவைப் பலியின் மூலம் தமது பிள்ளைகளாகும் உரிமையை அளித்திருக்கிறார். கானானியப் பெண்ணின் விசுவாசம் நமக்கு பல்வேறு படிப்பினைகளைத் தருகிறது.

இயேசுவின் மீட்பும், ஆசீர்வாதங்களும் அனைவருக்குமானது. அதில் பேதங்கள் ஏதும் இல்லை. இயேசுவால் மட்டுமே மீட்பைத் தரமுடியும் எனும் அசைக்க முடியாத விசுவாசம் வேண்டும். தன்னை தாழ்த்திக் கொள்ளத் தயங்காத மனநிலை நிச்சயம் தேவை. தாழ்மையே பிரதானம். விடாமல் தொடர்ந்து விண்ணப்பம் வைக்கும் மனநிலை வேண்டும்.

ஒரு பாவியாக பெண் இயேசுவிடம் வந்து விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.
என்றார்.

இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(மத்தேயு 26:13)

கணவன் – மனைவி குணங்களாக கர்த்தர் வெளிப்படுத்தியது நான்கு:

1.கணவரை/மனைவியை நேசிப்பது

 1. கணவருக்கு/மனைவிக்கு கீழ்படிவது
 2. கணவன் /மனைவி சொல்லுவதை ஏற்றுக்கொள்வது
 3. கணவன்/மனைவி சொல்லுவதை
  மேற்கொள்வது

இந்த நான்கும் கணவனிடத்திலும் இருக்க வேண்டும்.
நன்றாக கவனியுங்கள், வேதாகமம் கணவன் மனைவியை நேசிக்க வேண்டும் என்கிறது. மனைவி கணவனின் நேசிப்புக்கு கீழ்படிந்து கணவனை நேசிக்க வேண்டும். இருவரும் தன்னை நேசிக்கவில்லையேன்றும் தனக்கு கீழ்படியவில்லையேன்று இருக்கக்கூடாது. அதேபோல் கணவனும் மனைவியும் ஏற்றுக்கொள்வதில் மேற்கொள்வதில் அப்படியேயிருக்க வேண்டும். இதுவே சமச்சீரான இல்லற வாழ்வு!

வேதாகமத்தில் கர்த்தரின் நியாயப்பிரமாணத்திற்க்கு துண சட்டம் போட வைத்த 5 பெண்கள்:

யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனான கிலெயாத்துக்குப் பிறந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்களே அவர்கள். ஒரு குடும்த்தின் தகப்பன் தன் ஆஸ்தியை தன் குமாரர்களுக்கு பங்கிட வேண்டுமென்று உபாகமம் 21: 16 சொல்லுகிறது. “தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிட வேண்டும்.” ஆனால் இந்த 5 பெண்களின் வேண்டுதலைப்பாருங்கள்,

“எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார், தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை. எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.

மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு போனான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக.

மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும். அவனுக்கு குமாரத்தியும் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்கவேண்டும்.அவனுக்குச் சகோதரரும் இல்லாதிருந்தால் அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரருக்குக் கொடுக்கவேண்டும்.

அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குக் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.(எண்ணாகமம் 27: 1- 11)

இப்படி நியாயப்பிரம்மானத்திற்க்கு துணை சட்டம் போட வைத்தார்கள்.

இப்படி வேதாகமத்தில் பெண்களின் பங்கு சிறப்பாகவும் கர்த்தருக்கு மகிமை செலுத்தவதாகயிருந்தது.
ஆகவே இன்றைய பெண்களின் பங்களிப்பு ஆயிரம் மடங்காகயிருக்கும்_ என்பதில் ஐயமில்லை_ .

பெண்களின் கடைசி கால ஊழியம்

கர்த்தர் பெண்களுக்கான கூடுகைகளை – மாநாடுகளை கூட்டச் சொல்லியிருக்கிறார், ஒரு தீர்க்கதரிசினியிடம்.

கர்த்தர் தந்த வசனம் இதோ….. (சங்கீதம் 68: 11)
ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப் படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.

இதில் பெண்கள் பற்றி சொல்லவில்லை, ஆனால் மூலமொழியாகிய எபிரேய மொழியில் வாசிக்கும்போது
“Adonai gives the command; the women with the good news are a mighty army.”
_(Psalm 68: 11) (ESV யிலும் இப்படி படிக்கலாம்)
“The Lord gives the word; the women who announce the news are a great host:
Psalms 68:11 ESV
தமிழில்,
“கர்த்தர் வசனம் தந்தார்;
அதைப் பிரசித்தப்படுத்துகிற பெண்கள் கூட்டம் மிகுதி.
(கூட்டம்: வல்லமையான படை)

சாதாரண பெண்கள் கூட்டம் அல்ல. வல்லமைமிக்க பெண்கள் படையை ஏற்படுத்தப்போகிறார். அதன் தரிசனத்தையும் தந்திருக்கிறார்.

(ஆதியாகமம் 3: 15)
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

சாத்தான் பெண்மையின் தன்மைகளை பயன்படுத்தியே வஞ்சித்தான். இன்று வரை கூட மக்களால் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். சாத்தான் பெண்ணையே தேர்ந்தெடுத்து வஞ்சித்தான். (தயவுகூர்ந்து பெண் மூலமே பாவம் நுழைந்தது என்ற பிரசங்கத்தை செய்யாதிருப்போமாக.)

பெண்ணை சாத்தான் வஞ்சித்ததை கர்த்தர் மனதிலே வைத்திருக்கிறார். அவனை பழி வாங்க பெண்கள் மூலமாக அதை கடைசி காலங்களில் செயல்படுத்தப் போகிறார். இனிவரும் நாட்களில் பெண்கள் தேள்களையும் சர்ப்பங்களையும் மிதிப்பார்கள். அல்லேலூயா!

பெண்கள் எல்லோரும் தேவனுக்கு சிறப்பானவர்கள் என்பதை கர்த்தர் தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிறார். உலகமே கேள்விப்படாத வார்த்தை.
குழந்தைகளும் தேவனுக்கு சிறப்பானவர்கள். இயேசு கிறிஸ்துவின் வாழ்விலும் பெண்களும் முதன்மை படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

★கன்னி மரியாள் – வயிற்றில் பிறந்தவர் இயேசு கிறிஸ்து

★இயேசு கிறிஸ்து சிலுவையில் இருந்தபோது கூட இருந்தவர்கள் பெண்கள்தான். (யோவான் மட்டும் கூடநின்று பார்த்தவர்.)

★கல்லறைக்கு வந்து இயேசு கிறிஸ்துவை முதலில் தரிசித்தவரும் பெண்ணே.

★இயேசு கிறிஸ்துவை உயிர்தெழுந்தார் என முதலில் அறிவித்தவரும் பெண்ணே.

• எஸ்தர் ராணியும் இஸ்ரவேல் மக்களை காக்க உயிரையும் மதிக்காமல் ராஜாவிடம் பேசி மீட்டவர். இன்னொரு கோணத்தில் மணவாட்டியாக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டவர், ஆடை அலங்கரிப்பில் அல்ல ராஜாவுக்கு பிரியமானதை தன் மனதிலே அணிந்துக் கொண்டாள். எல்லோர் கண்களிலும் தயை கிடைத்தது. எஸ்தரின் விசாரிப்புக்காரன் யேகாயிடம்தான் ராஜா விசாரித்தான். ராஜாவிடத்து அன்பும், தயை, பட்சமும் எஸ்தருக்கு கிடைத்தது. ராணியாக கிரீடம் சூட்டப்பட்டாள்.

மோசே வாழ்வில் ஐந்து பெண்கள் உதவிசெய்தார்கள்.
வீரப் பெண்மணி தெபேராள் நியாதிபதியாகயிருந்தாள். ஆப்ரகாமிற்க்கு விசுவாசத்தில் சாராள் உடனிருந்தாள். பேழையைக்கட்ட நோவாவோடு மனைவி, மருமகள்கள் உடனிருந்தனர். ரகாப் இஸ்ரவேலரை காப்பாற்றினாள். மரியாள் என்ற பெயரில் பல சீஷிகளிருந்தனர். லீதியாள் என்ற வியாபாரம்செய்யும் பெண் உடனிருந்தாள். தீமோத்தேயு தாயார் ஐனிக்காள் விசுவாசமுள்ளவாயிருந்தாள். அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
(2 தீமோத்தேயு 1:5)

(அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:26)
அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள். அன்னா என்ற தீர்க்கதரிசினி இருந்தாள். தொற்காள் என்ற சீஷியிருந்தாள்.

ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து கொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
(லூக்கா 8:3)

புவுல் சொல்லுகிறார்,
(1 தீமோத்தேயு 5:2-3) முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு. உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.

பெண்கள் கடைசி காலங்களில்
மூன்று வகையாக ஊழியம் செய்யப் போகிறார்கள்.

 1. தீர்க்கதரிசன
  ஆராதனையாளர்கள்
 2. தீர்க்கதரிசன யுத்த
  வீராங்கனைகள்
 3. தீர்க்கதரிசன மன்றாட்டு வீராங்கனைகள்

கடைசி கால வீராங்கனைகள் என்பது திருமணம் ஆன இளம் பெண்கள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை.

பெண்களின் முதல் மாநாடு கலிம்போங் (மலைப்பிரதேசம்) – கல்கத்தாவில் நடைபெற்றது. பிறநாடுகளிலும் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற ஜெபியுங்கள். தமிழ்நாட்டிலுள்ள சகோதரிகளுக்கு பிரசித்திப்படுத்துங்கள். சகோதரன்மார்களே உங்கள் மனைவிகளுக்கு எடுத்துச்சொல்லுங்கள். சபைகளிலே பிரசித்திப்படுத்துங்கள்.

முதிர்வயதிலும் வசனத்தை பிரசித்திப்படுத்துவர்களோ அதிகம்
”கர்த்தருக்கு துதி கன மகிமை!!மாரநாதா!”


Share this page with friends