ஈஸ்டர் வாழ்த்து சொல்லலாமா?

Share this page with friends

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்படி Happy Easter அல்லது இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள் என்று கூறுவது வழக்கம். ஆனால் ஈஸ்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா என்பதை இந்த சிறு செய்தியில் நாம் பார்க்கலாம்

கிரேக்க புராண கதையில் இஸ்தார் என்ற பெண் தெய்வம் உண்டு. இது கிரேக்க மற்றும் பாபிலோனியர்கள் வழிபடும் தெய்வமாக இருந்தது. இந்த பெண் தெய்வம் தன்னுடைய மகனையே மணந்து கொண்டதாகவும் தன் கணவன் மரித்துப்போனபின் நாற்பது நாட்கள் கடும் உபவாசம் இருந்து தன் கணவனை உயிரோடு எழுப்பியதாகவும் புராண கதை கூறுகிறது.

இந்த இஸ்தார் தேவதையின் 40 நாட்கள் விரதமே லெந்து நாட்கள் என்றும் அந்த அகத்த தேவதையின் பெயரே “ஈஸ்டர்” என்றும் ஆதித் திருச்சபைக்குள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது. இந்த வஞ்சகத்தை நம்பவைப்பதற்காக யூதர்களின் பஸ்கா நாட்களில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல் நூற்றாண்டு திருச்சபை கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு என்று எதையும் பண்டிகையாக அல்லது சடங்காச் சாரமாக ஆசரிக்கவில்லை .

அப்படியானால் 40 நாட்கள் உபவாசம் இருப்பது தவறா ?கிறிஸ்துவின் பிறப்பு, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவுகூர்ந்து கொண்டாடக்கூடாதா

உபவாசம் என்பது மனிதன் தன் சரீரத்தை ஒடுக்கி தேவனோடு இருக்கும் உறவில் வளர பயன்படுத்தவேண்டியது. பஸ்கா பண்டிகை என்பது பௌர்ணமியை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படும் பண்டிகையாகும். தேவனோடு உறவு கொள்ள பிறை, பௌர்ணமி போன்ற அடையாளங்கள் தேவையில்லை. எப்போதெல்லாம் தேவன் இருதயத்தில் ஏவதலைக் கொடுக்கிறாரோ , ஆவிக்குரிய வாழ்வில் வளர நினைக்கிறோமோ அப்போதெல்லாம் தனி நபராகவோ, குடும்பமாகவோ, சபையாசு வோ உபவாசித்து ஜெபிக்கலாம். இந்த குறிப்பிட்ட நாற்பது நாட்களை மாத்திரம் விசேஷித்த நாட்களாக கருதவேண்டிய அவசியம் இல்லை.

கிறிஸ்துவின் மரணம் என்பது நம் வாழ்நாளெல்லாம் நாம் நினைவுகூற வேண்டிய ஒரு பண்டிகையாகும். ஏனென்றால் நம் பாவத்தினிமித்தம் நாம் அடிக்கப்படவேண்டிய இடத்தில் இயேசு நமக்காக அடிக்கப்பட்டபடியால் நாம் அவரது மரணத்தை நினைவு கூற வேண்டியது அவசியம். என்னுடைய மரணத்தை நினைவுகூரும்படி இதை செய்யுங்கள் என்று வேதம் கூறும் கர்த்தருடைய பந்தியை நாம் ஆசரிப்பதும் இதற்காகவே

ஆண்டவருடைய உயிர்த்தெழுதலை ஆதித்திருச்சபை பண்டிகையாக கொண்டாடாவிட்டாலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கொண்டாட வேண்டிய பண்டிகை அதுவே ஒரு மனிதனுடைய பிறந்த நாள் மற்றும் திருமண நாள் என்பது எல்லா வருடங்களிலும் ஒரே நாளில் தான் வரும். ஆனால் கிறிஎப்துவின் உயிர்த்தெழுந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாளில் வருவதை நாம் காண இயலும், ஏனென்றால் இளப்ரவேலிலே பஸ்கா கொண்டாடப்படும் பௌர்ணமி நாளை அடிப்படையாகக் கொண்டே இது கணக்கிடப்படுகிறது. பஸ்கா பண்டிகையின்போது ஒவ்வொரு குடும்பமும் தங்களின் விடுதலைக்காக ஒவ்வொரு ஆட்டுக்குட் டியை பலியிடுவது இஸ்ரவேலரின் வழக்கம், முழு உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கும் ஆட்டுக்குட்டியாக அவர் அடிக்கப் பட்டதை வேதம் கூறுவதால் நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையைக் கொண்டாடுவது தவறு இல்லை. கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலுக்குப் பின் சனிக்கிழமை ஓய்வுநான் மாற்றப்பட்டு கிறிஸ்து உயிர்த்தெழுந்த வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக் கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நாளாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு ஞாயிறும் உயிர்த்தெழுந்த ஞாயிறுதான் எனவே சிறி எப்துவின் உயிர்த்தெழுந்த பண்டிகையைக் கொண்டாட விரும்பினால் சாப்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் Happy Resurrection Day அல்லது Blessed Resurrection Day என்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும்போது அது இன்னும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை.

மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென் நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் வெளி:1:18

அனைவருக்கும் இனிய உயிர்த்தெழுந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றி: பெத்தேல் ஏ.ஜி சபை, திருப்பூர்


Share this page with friends