Carefull thinking in the leadership | தலைமைத்துவ சிந்தனைகள்

Carefull thinking in the leadership
The attitudes and behaviours are very much important in the leadership. The prejudices and wrong judgement of cultural mileues would tear down our leadership image. We have to be sound in our thinking and to be solid in our decisions. தலமையத்துவத்தில் சரியான சிந்தனை இருக்க வேண்டும். இல்லையெனில் அதுவே நம் வாழ்வின் சருக்கலுக்கு அடிதளம் ஆகி விடும்.
Let us see our false thinking and how to rectify it further! தொடர்ந்து தவறான சிந்தைகள் மற்றும் அவற்றை சரி செய்வது எப்படி என்று தொடர்ந்து கவனிப்போம்.
A. Critical thinking. குற்றம் கண்டுபிடிக்கும் சிந்தனை.
எத்தனை சரியாக, திராணிக்கு ஏற்றபடி ஒருவர் ஒரு காரியத்தை செய்தாலும் பாராட்டும் பக்குவமில்லாத ஒரு குணம். ஆனால் ஒரு குறையையாவது கண்டுபிடித்து சரி செய்வது போல காட்டி கொள்ளும் சுபாவம்.
We can be a constructive critic and we cannot be a destructive critic.
B. Diplomatic thinking. தனக்கு சாதகமாக நடந்து கொள்ளும் ஒரு சுபாவம்.
தனக்கு வேண்டியவர் தவறு செய்தால் நியாயப்படுத்தி, தனக்கு ஆகாதவர் தவறு செய்தால் அதை குற்றப்படுத்தி நல்லவர் போல நடிக்கும் மகா தந்திரசாலித்தனமான சிந்தனை.
உள்ளதை உள்ளது என்றும், இல்லாததை இல்லை என்று நியாயத்தை நியாயமாக அதே நேரத்தில் விவேகமாக சொல்லும் சிந்தனை வேண்டும்.
C. Emotional thinking. உணர்ச்சிவசப்பட்ட சிந்தனை.
எதற்கு எடுத்தாலும் உணர்ச்சியில் செயல்படும் தன்மை. புகள்ச்சியில் அதிக சந்தோசமாகவும், இகழ்ச்சியில் விரக்தியாகவும் இருக்கும் ஒரு பக்குவமற்ற தன்மை.
எந்த சூழலிலும் react செய்யாமல் reflect செய்யும் பக்குவம் நமக்கு வேண்டும்.
D. Assumptive thinking. கணித்து செயல்படும் சிந்தனை.
பிறரது தோற்றம், செயல், அசைவு மற்றும் சரீர அமைப்புகளின் அடிப்படையில் ஊகித்து ஒரு முடிவுக்கு வரும் சிந்தனை. Hpnoticsm, forensic criminology படித்தோர் மற்றும் நன்றாக observe செய்பவர் கள் இதில் மாட்டி விடுவது உண்டு.
தோற்றத்தின் அடிப்படையில் தீர்ப்பு செய்யாமல், பரிசுத்த ஆவியின் துணை கொண்டு பகுத்து அறியும், அறிவை, ஞானத்தை போதிக்கும் வரத்தில் நிதானமாக செயல்படுதல் வேண்டும்.
E. Hypocritical or legalistic thinking. பரிசேய சிந்தனை என்றும் சொல்லலாம்.
தங்கள் ஒரு பகுதி நன்மையான செயல்களை கொண்டு மற்றவர்கள் சரியில்லை என்றும், நாங்கள் சரி மற்றவர்கள் சரி இல்லையென்று தீர்ப்பு செய்து தங்களை நல்லவர்கள் என்று காட்டி கொள்ளும் ஒருவித பித்து பிடித்த சிந்தனை.
நமது பலம் உள்ள பகுதி சில வேளை பிறருக்கு பலவீனமாக இருந்தாலும், நமது பெலவீன பகுதி பிறருக்கு பெலமுள்ள பகுதியாக இருக்கலாம் எனவே மிஞ்சின நீதிமானாக இருக்க வேண்டாம். பிறரது பலவீனத்தை, பிறர் செய்யும் சிறு சிறு தவறுகளை சற்றே சகித்து கொண்டால் அதுவே நல்லது.
F. Deductive thinking. பொதுப்படையாக தீர்ப்பு செய்யும் சிந்தனை.
தன் வாழ்வில் நடந்த ஒரு அனுபவத்தை வைத்து எல்லாரும் இப்படி தான் என்று கருதி, எல்லா சூழலையும் மனிதர்களையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு மதியற்ற சிந்தனை.
ஒருவர் தவறு செய்தால் எல்லாரும் அப்படி என்கிற அப்பட்டமான மட்டமான சிந்தையை விட்டு விட்டு, காரணிகளை கண்டு பிடித்து உண்மை நிலையை ஆறாந்து பார்க்க வேண்டும்.
G. Exteriorized thinking. சுய சார்பு சிந்தனை.
சற்று தொலைவில் யார் பேசி கொண்டு இருந்தாலும், தங்களை தான் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று தவறான கணிப்பு கொண்டு, அவற்றை தங்களோடு அடையாளப்படுத்தி தங்களை ஒரு பொருட்டாக எண்ணு ம் ஒரு சிந்தனை.
பொய்யை பொய் என்றும் மெய்யை மெய் என்று எடுத்த கொள்ளும் தன்மை மாற வேண்டும். எல்லாவற்றையும் சந்தேக கண்ணோடு பார்க்காமல் நாம் நாமாக இருக்க வேண்டும்.
கிறிஸ்து சத்தியத்தை பேசி சத்தியமாக வாழ்ந்து, தன்னை ஒரு பொருட்டாக எண்ணி மேன்மை படுத்தாமல், அடிமையின் ரூபம் எடுத்து தன்னை தான் வெறுமை ஆக்கி எல்லா நாமத்திற்கு மேலான நாமத்தை பெற்றார். அதுவே நம் சிந்தை ஆகட்டும். ஏனெனில் கிறிஸ்துவின் சிந்தையை தரித்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டு உள்ளதே!
செலின்.