தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு

Share this page with friends

தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு

அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17

சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம்.  கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனை அது. ஒரு குற்றமும் செய்யாத கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, அதை தனக்குரிய தண்டனையாய் ஏற்றுக்கொண்டு, தம்முடைய சிலுவையை சுமந்தார். உண்மையாக அது நம்முடைய சிலுவை.

சிலுவையின் உருவத்தில் அவர் சுமந்தது என்ன?

  1. நம்முடைய பாவத்தை சுமந்தார். (1 பேதுரு 2:24)

“அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்.”

  1. நம்முடைய பாடுகளை சுமந்தார். (ஏசாயா 53:4)

“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்.”

  1. நமக்குரிய பரிகாரத்தை சுமந்தார். (எபேசியர் 3:14-15)

“ அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து…  பகையைச் சிலுவையினால் கொன்று… தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.”

நமக்காய் சிலுவை சுமந்த இரட்சகரை நினைவுகூர்ந்து பிதாவை ஆராதிப்போம்.

கே. விவேகானந்த்

மக்கள் அதிகம் வாசித்தவை:

பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச...
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்கு கிறிஸ்தவ தலைவர்கள் வாழ்த்து
திண்டுக்கல் மாவட்டத்தில் - சிலுவை உடைப்பு
பழைய ஏற்பாட்டின் திரளான சாட்சிகளில், சில சாட்சிகள் நமக்கு சுருக்கமாக ஆலோசனை சொல்ல வருகிறார்கள்
ராபோஜனம் (திருவிருந்து) எடுப்பவர்களுக்கு பவுலின் ஆலோசனை
கிறிஸ்துமஸ் மரம் (Christmas trees)
சொன்னார்கள்... சொல்லுகிறேன்! வித்யா'வின் விண் பார்வை!
தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து 41 பேர் உடல் கருகி பலி
ஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது
நிச்சயிக்கப்பட்ட அல்லது ஒருவருக்கு ஒருவர் நியமிக்கப்பட்ட யோசேப்பு மற்றும் மரியாள்

Share this page with friends