அரக்கோணத்தில் மதப்பிரச்சாரம் செய்ததாக தம்பதியர் மீது வழக்கு பதிவு

Share this page with friends

7, Dec 2020

சென்னை முடிச்சூரை சேர்ந்தவர் திரு. டேவிட் விஜயகாந்த் மற்றும் திருமதி டாக்டர் ஜெசிந்தா டேவிட் தம்பதியினர் இன்றைய தென்றல் என்னும் பெயரில் பல உதாரணங்களை முன்வைத்து கிறிஸ்தவம் சார்ந்த நடைமுறை ஆலோசனைகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருகின்றார். இவரது குறுஞ்செய்திகள் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டும், பாராட்டப்பட்டும் வந்த நிலையில் மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக இருவர் மீதும் அரகோணம் நகர காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நின்றவாறு, அரக்கோணம் என்ற பெயர் காரணத்தை எடுத்துரைத்து மதம் சார்ந்த கருத்துக்களை கூறியதால் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இச்செய்தியால் கிறிஸ்தவர்களுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Share this page with friends