கிறிஸ்தவ வெளிச்சம்

Share this page with friends

என்னில் தூய்மை இல்லாத போது அயலாரை தூய்மையாயிருங்கள் என்று சொல்வதெப்படி ???

எனக்குள்ளே எந்த ஒரு எழுப்புதலும் இல்லாத போது மற்றவரை பார்த்து எழுப்புதல் எழுப்புதல் என எப்படி பிரசங்கிப்பது???

நம் கண்ணிலே மிக பெரிய உத்திரத்தை வைத்து கொண்டு அடுத்தவர் கண்ணில் இருக்கிற சிறு துரும்பை பார்த்து குற்ற படுத்துவது எப்படி???

நம் அருகில் இருப்பவர் கடும் பட்டினியாய் கிடந்து அவஸ்தை படும் போது நாம் மட்டும் ஒய்யாரமாய் உட்கார்ந்து விருந்துண்டு மகிழ்வதெப்படி

நாம் மாறாமல் எமது கிறீஸ்தவமும் மாற போவதில்லை கிறிஸ்து+அவன் = கிறீஸ்தவன் கிறிஸ்து எம்மில் வாழும் வரை மட்டுமே நாம் கிறிஸ்தவன்

கிறிஸ்து நம்மில் வாழ்கிறார் என்பதை வரத்தை வைத்தோ,, ஊழியத்தை வைத்தோ ,,
ஆசீர்வாதத்தை வைத்தோ,, பேர் புகழை வைத்தோ,, உயர்வை வைத்தோ கண்டு பிடிப்பது அல்ல

கிறிஸ்துவின் அச்சடையாளங்களை நாம் தரித்து கொண்டு அவர் வாழ்ந்ததை போலவே நாமும் வாழ்ந்து அவர் குணாதிசயங்களை வெளிப்படுத்தி காண்பிப்பதே கிறிஸ்தவனின் உண்மையான அடையாளம்

அப்படி கிறிஸ்து நம்மில் இருந்து நமது குணாதிசயத்தின் மூலம் ஜனங்களுக்கு வெளி பட்டாா் என்றால் ஒருவனும் கிறிஸ்தவனாய் மாறாமல் இருக்கவே முடியாது

ஆக இந்த உலகை கிறிஸ்தவ வெளிச்சம் உள்ளவர்களாய் மாற்ற எமது வாழ்க்கை மாறுதலே அவசியம் மாற்றம் நம்மிலே துவங்கட்டும் மாற காத்திருக்கிறவர்கள் கிறீஸ்தவத்தில் உயிர் பெறட்டும்

ஜான் ஜெபா


Share this page with friends