கிறிஸ்தவ பெற்றோரத்துவம்

Share this page with friends

கிறிஸ்தவ பெற்றோரத்துவம்

பெற்றோர் என்பது ஒரு தெய்வீக ஆசீர்வாதம். வாலிப வயதின் கற்பு, பரிசுத்தம் காத்து, ஏற்ற காலத்தில் பொறுமையோடு காத்திருந்து தேவ திட்டத்தில் தேவ பிரசனத்தில் ஏற்படுத்தப்பட்ட திருமண உறவில் கர்த்தரால் அருளப்படும் ஒரு பதவி தான் இந்த தெய்வீக பெற்றோரத்துவம். ஏனெனில் இன்று அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் இன்று சுய ஆசை விருப்பங்களின் அடிப்படையில் தங்கள் உறவுகளை ஏற்படுத்துவதன் மூலம் அநேக இடங்களில் இந்த பெற்றோரத்துவம் கேள்விக்குறியாகி உள்ளது. பக்தியுள்ள சந்ததி என்பது பரலோக விருப்பம். ஆனால் சரியான பெற்றோரத்துவ அறிவின்மை இன்று குடும்பங்களில் குழந்தை வளர்ப்பு ரீதியில் பிளவுகளை கொண்டு வரும் பாதிப்புகளை கண்கூடாக பார்த்து வருகிறோம். எனவே தொடர்ந்து கர்த்தருக்கு பிரியமான பெற்றோரத்துவத்தை கவனிப்போம். எனவே சரியான பெற்றோரத்துவத்தை அடைய!

1. திருமண நோக்கத்தை சரி செய்ய வேண்டும்.

சரியான பெற்றோரத்துவம் அமைய சரியான திருமண எண்ணம் வேண்டும். ஏன் பரிசுத்த விவாகம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்! என்ன மனோபாவத்தில் திருமண பிணைப்பில் சம்மதித்தோம், என்ன நோக்கத்திற்காக திருமணம் செய்தோம் என்பதை சீர்த்தூக்கி பார்க்க வேண்டும்.

சந்தர்ப்ப சூழலா?
வீட்டுக் கடமையை நிறைவேற்றவா?
ஆசை விருப்பங்களை நிறைவேற்றவா?
முதல் மற்றும் பணத்திற்க்காகவா?
பெற்றோர் நீர்பந்தமா?
வேற வழியில்லாம நடந்ததா?

சரியான மனோபாவம் இல்லாத திருமணம் பெற்றோரத்துவத்தை சுக்கு நூறாக்கி விடும். முதல் கோணல் முற்றும் கோணலாக மாற்றி விடும். ராகேல் யாக்கோபால் விரும்பப் பட்டவள் தான் ஆனால் அவரகள் முதல் அனுபவமே ஏமாற்றம். பின்னர் குழந்தையின்மை வீட்டில் சண்டையை கொண்டு வர முடிவில் பாதி வழியில் இரண்டாவது குழந்தை பேற்றோடு தன் வாழ்வை ராகேல் முடித்துக் கொண்டாள் . சரியான நோக்கம் சரியான திசையில் நம்மை நடத்தும். தேவ சித்தமின்றி, பெற்றோர் விருப்பமின்றி, ஆவிக்குரிய விருப்பங்களை மீறி, போதக பிதாக்களை அவமதித்து தன்னிச்சையாக தெரிந்தெடுத்து செயல்படும் திருமணங்களில் நோக்கம் சரியில்லாமல் இருந்தால் பெற்றோரத்துவம் நிச்சயம் பாதிக்கப் படும். எனவே தெய்வீக சித்தத்தில் ஏற்றக் காலத்தில் பரிசுத்தவான்கள் முன்னிலையில் பரிசுத்த சமூகத்தில் சரியான நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட எந்த திருமணத்திற்கும் ஆவியானவர் தான் அச்சாரம். கிறிஸ்து தான் மூலைக்கல். சபை தான் பாதுகாப்பு. விசுவாசிகள் தான் உறவுகள்.

2. திருமண உறவுகள்/ பந்தங்களை சரி செய்யுங்கள்

திருமண விசயங்களில் ஏற்பட்ட விரிசல்கள், நோக்கப்பிழைகள், தகாத கற்பனைகள் போன்றவற்றை சரி செய்ய வேண்டும். ஏமாற்ற சூழல்கள், பேச்சு வார்த்தை குளறுபடிகள் போன்றவற்றை விட்டு விட்டு தொடர் மனக்கசப்புக்களுக்கு விட்டுக் கொடுக்காமல் உறவுகளை சரி செய்ய வேண்டும். ஒருவரை ஒருவர்….

அப்படியே ஏற்று கொள்ளவேண்டும்.
இரு வீட்டார் சூழலை ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொள்ள வேண்டும்
நிலமையை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
மாறி மாறி ஒப்பிட்டு பார்த்து குறை சொல்லும் அனுபவத்தில் வளராமல் வாழ்வை தொடர வேண்டும். திருமண நிகழ்வுகளையே சுற்றி சுற்றி வரக்கூடாது.
கொடுக்கல் வாங்கல் சிக்கல்களை பேசியோ அல்லது விட்டுக் கொடுத்தோ செய்து பரஸ்பரம் சரியாக வேண்டும்

மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து, ஒப்புரவாக வேண்டிய இடத்தில் ஒப்புரவாகி எதிர்கால சிந்தையோடு வாழ்வில் முன்னேற வேண்டும். தன் வாழ்வில் தான் அற்பமாக எண்ணப்பட்டாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் கர்த்தரை துதித்து அவரை சார்ந்து வாழ்ந்த லேயால் எந்த யாக்கோபால் அற்பமாக எண்ணப் பட்டாளோ அதே யாக்கோபோடு கடைசி வரை வாழ்ந்து குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாள். சிலர் இன்னும் திருமணத்தில் ஆரம்ப கட்டத்தில் நடந்த எதிரிடையானவற்றை நினைவுப் படுத்தி புலம்பி கொண்டே இருப்பார்கள். எனவே அற்பமான திருமண ஆரம்பத்தை கர்த்தர் அசட்டை செய்ய மாட்டார். ஆரம்பம் அற்பமாக இருந்தாலும் முடிவு சம்பூரனமாக இருக்கும். கவலை. வேண்டாம் ஆக வேண்டியதை கவனியுங்கள். கிடைத்த வாழ்வில் திருப்திப் பட்டு உறவை சரி செய்து வாழுங்கள்.

3. சரியான குடும்ப சூழலை உருவாக்குங்கள்

நல்ல பெற்றோரத்துவம் நல்ல சூழலில் உருவாக்கப் படுகிறது. பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் சூழலை கெடுத்து விடாமல் எந்த சூழலிலும் வாழும் மனரம்மியத்தை உண்டு பண்ணுங்கள். தவறான அனுமானங்கள் கொண்டு இருக்கின்ற ஆசீர்வாதங்களை இழந்து போகாதிருங்கள்.

பெற்றோரத்துவத்திற்கு ஆயத்தம் ஆகுங்கள்.
நல்ல ஆவிக்குரிய திருமணத்தின் பரிசுதான் கர்த்தர் கொடுத்த கற்பு. அதை பரிசுத்ததோடு காத்துக்கொண்டு பரஸ்பர உறவில் மனரம்மியம் காத்துக் கொள்ளுங்கள்.
ஆவி ஆத்துமா சரீர உறவுகளை பரிசுத்தமாக காத்துக் கொள்ளுங்கள்.
இருக்கிற சூழலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். வீண் ஆசைகள் கொண்டு பண விரயம் செய்து நன்மையை இழந்து விடாதீர்கள். எதையும் காரணமின்றி ஒத்தி போடாதிருங்கள்.

கரு உற்பத்தியாகும் ஆரம்பம் முதல், அது வளர்ந்து, வெளியே புற்பட்டு, இந்த உலகில் வாழ்வதற்கு ஏற்றப் பக்குவமும் சூழலும் சரியாக அமைய வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு சூழலின் தாக்கம் நிச்சயம் கருவின் ஆரம்பத்தில் இருந்தே அதில் வெளிப்படும். எனவே
போதும் என்கிற மனபக்குவமும், கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்கிற விசுவாசமும் இருக்கின்ற இடத்தில் எல்லா சூழல்கள் நமக்கும் நிச்சயம் சாதகமாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை.

4. குடும்ப அமைப்பைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்

கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் என்கிற நிலைகளில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். குடும்ப தன்மைகளுக்கேற்ற படி, அவரவருடைய குடும்ப நிலைகள், உறவின் தன்மைகள், பொருளாதர நிலைகள், சமூக தன்மைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளுங்கள். குடும்ப பின்னணியம் போன்றவற்றை அறிந்து அவற்றின் நடுவிலும் வாழும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Herdictory மற்றும் dna சுபாவம்/ ஜென்ம சுபாவம் இருந்துகொண்டு தான் இருக்கும். அதை கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்திற்கு நேராக மாற்ற வேண்டும்.
சில பழக்க வழக்கங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் வழியிலும் தொடர்ந்து வரும்.
சில சூழ்நிலை நெருக்கடிகள் சந்தர்ப்பங்கள், சிலாக்கியங்கள் இருந்து கொண்டே இருக்கும் அவற்றை கண்டுப் பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தன்மைகள், மாறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் அறிந்து செயல்பட்டால் அதுவே புத்தியுள்ள ஞானம் உள்ள குடும்பம். யாக்கோபு தன் மாமன் வீட்டை விட்டு கிளம்ப தயாரான போது அவனது மனைவிகள் அவனோடு குடும்ப சூழலை அறிந்து நின்றபோது தான் அவன் தேவ சித்தத்தில் முன்னேற முடிந்தது. சில குடும்பங்கள் இன்னும் வேண்டுமென்றே விருப்பமில்லாத குடும்ப சூழலில் குடும்ப தன்மையை புரியாமல் வீம்பு பண்ண வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். உதாரணமாக ஸ்தீரி தாய் வீட்டை மறந்து புருசன் வீட்டில் ஐக்கியமாக வேண்டும். இந்த குடும்ப தன்மையை புரியாமல், வசனத்தை மாற்ற நிற்க கூடாது. ஆனால் அதற்குரிய தனித்துவமான பிரச்சனை இல்லாத சூழல் என்றால் கவலைப் பட வேண்டுவது இல்லை.

5. சபை மற்றும் பரிசுத்தவான்கள் உடன் உள்ள ஐக்கியத்தை வலுப்படுத்துங்கள்

பெற்றோரத்துவம் தேவனோடு உள்ள ஐக்கியத்திலும், தேவன் ஏற்படுத்தின அவரது சரீரத்திலும் இசைவாக கூட்டிக் கட்டப்பட வேண்டும். ஒருவர் சபையின் உறவில் பரிசுத்தவான்களை நேசித்து சரியான ஆவிக்குரிய ஐக்கியம் கொண்டு இருந்தால் அங்கு பெற்றோரத்துவம் சரியாக செயல்பட எந்த தடையும் இருக்க வாய்ப்பு இல்லை.

ஆவிக்குரிய காரியங்களில் சபை மற்றும் குடும்ப உறவில் சரியான அணுகுமுறை வேண்டும்.
சபை மற்றும் ஊழியங்கள், ஊழியர் குடும்பங்களில் உள்ளவற்றை வீடுகளில் தேவையின்றி விமர்சித்தல் கூடாது
ஊழிய காரியங்கள், மற்றும் கொடுக்கும் விசயங்களில் உதாரத்துவம் காட்டுதல்.
கர்த்தருடைய சபையில் உள்ள உபதேசங்களுக்கு கட்டுப்பட்டு அவைகளில் இருந்து ஞானம், அறிவு, புத்தி மற்றும் உபதேசம் அடைதல். சபையில் கர்த்தருக்கென்று தாலந்துகளை பயன்படுத்தி வரும் போது அநேக அனுபவங்கள் நமது பெற்றோரத்துவத்தை இன்னும் வலுப்பெற செய்யும்.

தேவ சமூகத்தில் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோமோ அப்படியே தான் நமது பெற்றோரத்துவ சாயலும் வெளிப்படும். கர்த்தருக்கு முன்பாக உத்தமனாக நடக்கும் போது தான் பெற்றோரத்துவ கிருபை வெளிப்படும்.

6. குழந்தை வளர்ப்பு நுணுக்கங்களை படியுங்கள்

பிள்ளைகள் கர்த்தர் தரும் சுதந்திரம். பெற்றோரத்துவமே பிள்ளைகளின் வளர்ப்பில் தான் வெளிப்படுகிறது. எனவே

பிள்ளைகளை புரிந்துக் கொள்ள ஒருவரை ஒருவர் முதலில் புரிந்து கொள்ளுங்கள் ஏனெனில் பிள்ளைகள் நமது DNA இன் பிரதிபலிப்பே.
பிள்ளை வளர்ப்பு கேற்ற புத்தி, ஞானம் பெற்றுக் கொள்ளுங்கள்.
தேவ சமூகத்தில் காத்து இருந்து அதற்குரிய அதிகாரம் வல்லமை பெற்றுக்கொள்ளுங்கள்.
பிள்ளைகளின் பருவம், வளர்ப்பு முறை, அவர்களின் சுபாவம், திறமை அறிந்து பக்குவமாக கையாளுங்கள்
அன்பு செலுத்த, அரவணைக்க, கண்டிக்க, கோபம் மூட்டாதிருக்க அதே நேரத்தில் பிரம்பை கையாட வேண்டிய விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்.

வேத வசனம், நமது பாரம்பரிய அனுபவம், சமூக அனுபவம் போன்று எப்போதும் அவைகளில் இக்காலத்திற்கு ஏற்றறப்படி தேற வேண்டும்.

7. தலைமுறைக்கு மாதிரியாக வாழ்ந்து விடுங்கள்

நமது சுபாவத்தில் முன்மாதிரி வேண்டும். நமது செயலில் முன்மாதிரி வேண்டும். நமது வாழ்வில் முன்மாதிரி வேண்டும். நமது பேச்சில் முன்மாதிரி வேண்டும்.

குடும்ப தலைவிகள் புருஷர்களுக்கு கீழ்படிதல், மற்றும் கனம் கொடுப்பதை பிள்ளைகள் பார்க்க வேண்டும் ஏனெனில் அப்போது தான் அவர்கள் அந்த சுபாவத்தை கற்றுக்கொள்ள முடியும்.
புருசர்கள் ஸ்தீரிகளை தங்கள் சரீரம் போன்று நேசிப்பதும், குடும்பத்தை போசிப்பதை பிள்ளைகள் கவனிக்க வேண்டும்.
அவரவருடைய வேலை செய்தல், கடமைகள் பொறுப்புகளை நிறைவேற்றுதல், தாங்குதல், சகித்தல், மன்னித்தல், சுமத்தல், தியாகம், தெய்வீக காரியங்களின் ஈடுபாடு, சபையின் ஐக்கியம் போன்றவற்றை மாதிரியாக கொள்ள வேண்டும்.
கடின சூழல்களை கையாழ்தல், தோல்விகளை, சவால்களை சந்தித்தல், தீர்மானம் எடுத்தல், தீர்வு காணுதல் போன்றவற்றில் பிள்ளைகளுக்கு மாதிரி வேண்டும்.

பெற்றோரத்துவத்தில் அனுபவம் வாய்ந்த நமது பெற்றோரையும் நாம் கனப்படுத்தி அவர்களுக்கும் செய்ய வேண்டிய கனத்தை செய்யும் போது நமது பெற்றோரத்துவம் மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. *அதே நேரத்தில் பெற்றோரான பிள்ளைகளிடத்தில் முதிர்ந்தவர்கள் பக்குவமாக நடந்து கொண்டு, அவர்களுக்கும் வழி விட்டு, கிறிஸ்து வைத்த மாதிரியின் படி பிள்ளைகளின் குடும்ப வாழ்க்கையில் தேவையின்றி தலையிடாமல் அவர்கள் வாழ வழி விட்டு, அவர்கள் தீர்மானம் எடுக்க விட்டுக் கொடுத்து நல்ல legacy ஐ விட்டு செல்வோம் ஏனெனில்
பெற்றோரத்துவம் தலை முறை தலை முறையாக pass on செய்ய வேண்டியது.

செலின்

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends