குடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா? கண்ணீர் வரவழைக்கும் பின்னணி

Share this page with friends

குடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா? கண்ணீர் வரவழைக்கும் பின்னணி

குடியரசு தினத்தில் ராணுவ அணிவகுப்பு 1955–ல் தான் முதன் முதலில் நடந்தது. ராஜ்பாத் என்ற இடத்தில் இந்த முதல் அணிவகுப்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் குடியரசு தினம் கொண்டாடும்போது, “என்னோடிரும் மா நேச கர்த்தரே” (Abide With Me) என்ற கிறிஸ்தவ ஆங்கிலப் பாடல் ராணுவ அணிவகுப்பின்போது பாடப்பட்டது. இது மகாத்மா காந்தியின் விருப்பமான பாடல்களில் ஒன்று என்பதால் அது ஒலிபரப்பப்பட்டது. தலைமுறை தலைமுறையாக காணப்பட்ட இப்பழக்கம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் ஏன் நிறுத்தினார்கள் என்பதற்கு இன்று வரை பதில் இல்லை. ஏற்கனவே பாடப்பட்ட வீடியோ காட்சிகள் இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. முழுவதும் வாசியுங்கள்.

இந்த பாடல் தேசத்திற்காக தன் குடும்பத்தை விட்டு எல்லைகளில் தனித்து நிற்கும் இராணுவ வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாடலாக இருந்தது வந்தது. குடியரசு தின இராணுவ அணிவகுப்பில் இப்பாடல் இசைக்கப்படும் போது மதங்களுக்கு அற்பாற்ப்பட்டு ஜனங்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடும். மனதில் நம்பிக்கை பெருகும்.

இந்திய ராணுவமே போற்றி பாடிய இந்த பாடலின் பிண்னணியத்தை ஒவ்வொரு கிறிஸ்தவரும் அறிந்திருக்க வேண்டும். என்னோடிரும் மா நேச கர்த்தரே என்ற கிறிஸ்தவ ஆங்கிலப் பாடல் “நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று” (லூக்கா 24:29) என்ற வசனத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரு அற்புதமான பாடலாகும்.

இப்பாடலை எழுதியவர் ஹென்றி பிரான்ஸிஸ் லைட் (Henry Francis Lyte 1793 – 1847). லைட் போதகர் 27 வயதாயிருக்கையில், வியாதியாயிருந்த ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கச் சென்றாராம். அந்த நோயாளி எப்போதும், “ஆண்டவரே என்னோடிரும்” என்று அடிக்கடி கூறுவாராம்.  சில நாட்களில், அவர் இறந்துபோகவே, போதகருக்கு, ‘என்னோடிரும்’ என ஆரம்பிக்கும் ஒரு பாடல் எழுதும் எண்ணம் உதித்தது. 1847ம் ஆண்டு, தமது 54ம் வயதில் லைட் போதகர் கடுமையான காச நோயினால் பீடிக்கப்பட்டார். சபை போதகர் பணியிலிருந்து ஓய்வெடுக்க வேண்டிய நிலை வந்தது. தன் சபையாருக்கு கடைசியாக பிரசங்கம் செய்யவேண்டுமென விரும்பினார். தனது இறுதி பிரசங்கத்தை தன் சரீர வேதனையாடு கண்ணீர் மல்க பேசி பிரியா விடை பெற்றார்.

அன்று மாலை நேரம் சூரிய ஔிக்கதிர்கள் மறையும் தருணம் அவர் கடற்கரையில் உலாவிக்கொண்டிருக்கையில், பல ஆண்டுகளுக்குமுன் அவர் எழுத நினைத்த “என்னோடிரும்” என்னும் பாடல் நினைவிற்கு வந்தது. சரீரத்தில் தாங்க முடியா வேதனைகள். ஆயினும் இந்த பாடலை எழுதும்படி மனதில் ஏவப்பட்டு, அதை கண்ணீருடன் எழுதி முடித்தார், பாடலையும் ராகத்தையும் தம் இனத்தவர் ஒருவரிடம் கொடுத்தார்.  இது நாம் வழக்கமாகப் பாடும் ராகம் அல்ல.

பின்பு, ஓய்வுக்காக தம் குடும்பத்தாருடன் இத்தாலி நாட்டுக்குப் பயணமானார்.  சுமார் இரண்டு மாதங்களுக்குப்பின், நவம்பர் மாதம், 20ம் தேதி அவர் இத்தாலி நாட்டிலுள்ள நைஸ் நகரில் காலமானார். அவர் மரிக்கும் முன்பு ஆவியின் ஏவுதலினால் எழுதப்பட்டது தான் இந்த பாடல்.

நமது பாட்டுப்புத்தகங்களில் இப்பாடல், மாலைக் கீதங்கள் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால் லைட் போதகர் வாழ்க்கையின் அந்தி நேரத்தைக் குறித்து எழுதினாரேயொழிய ஒரு நாளின் அந்தி நேரத்தைக் குறிக்கவில்லை என்பதை இப்பாடலின் இரண்டாவது கவியும், ஆறாவது கவியும் தெளிவாகக் காட்டும்.  மேலும் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால், தன் வாழ்க்கையின் அந்திய காலம் நெருங்கி வருவதை எண்ணி இப்பாடலை எழுதலானார்.

‘என்னோடிரும் மா நேச கர்த்தரே’ பாடலுக்கான இசையை வில்லியம் ஹெச். மாங்க் (William H. Monk) என்பவர் எழுதி, ஹென்றியின் நினைவு ஸ்தோத்திர ஜெபக்கூட்டத்தில் இசைத்தார்.

அன்று முதல் இப்பாடல் பல கிறிஸ்தவ சபைகளில் பிரபலமாகத் துவங்கியது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், மகாத்மா காந்தியடிகள் ஆகியோருக்கும் இப்பாடல் மிகவும் விருப்பத்திற்குரிய பாடலாகும். ஆறாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் இரண்டாம் எலிசபெத் ராணி போன்ற அரச குடும்பத்தினரின் திருமணங்களிலும் இப்பாடல் பாடப்பட்டது. ஒவ்வொரு உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் துவக்கத்திலும் இப்பாடல் பாடப்படுகிறது.  மேலும், ஆஸ்திரியா, நியூஸிலாந்து, கனடா, இங்கிலாந்து தேசங்களின் பல்வேறு வருடாந்திர கொண்டாட்டங்களிலும் இப்பாடல் இசைக்கப்படுகிறது.

இப்பாடல் எழுதப்பட்டு, நூறு ஆண்டுகளுக்குப்பின், 1947ல் ஒரு பத்திரிக்கை நிருபர் லைட் போதகர் குடியிருந்த வீட்டுக்குச் சென்று, அவரது பேத்தியாகிய ஹாக் அம்மையாரைப் பேட்டி கண்டார்.  அவ்வம்மையார் தம் பாட்டனார் நூறு ஆண்டுகளுக்கு முன் வழக்கமாகப் படுக்கும் அறையிலேயே வியாதியாகப் படுத்திருந்தார்கள்.  அவர்கள் லைட் போதகர் தம் கையால் எழுதிய ‘என்னோடிரும்’ என்னும் பாடலின் முதல் பிரதியைக் காட்டினார்கள்.  போதகர் இப்பாடலுக்கு எட்டுக் கவிகள் எழுதி உள்ளார்.  ஆனால் நமது பாட்டுப் புத்தகங்களில் ஐந்து அல்லது ஆறு கவிகள்தான் காணப்படுகின்றன.

கடவுளின் மிகவும் எளிய ஊழியக்காரர் ஒருவர் எழுதிய பாடல் இன்று உலகெங்கும் ஒலிக்கிறதென்றால், அது, அவர் ஆண்டவரிடம் ஜெபித்து, தியானித்து பெற்ற பாடல் என்ற காரணமேயன்றி வேறென்ன!

தன் தேசத்திற்காக குடும்பத்தை மறந்து, எல்லைகளை கடந்து, எந்த நேரத்திலும் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்ற நிலையில் நிற்கும் இராணுவ வீர்களுக்கு இந்த பாடல் மிகப்பெரிய பலமாகவே இருந்து வந்தது. எந்த இடத்திலும் நம் தேவன் நம்மோடிருப்பவர் என்ற நம்பிக்கையை அளித்தது. இந்த பாடல் தற்பொது காரணங்கள் ஏதுமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேதனைக்குரிய செயலாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு தேசதலைவர் பிரதமர் மோடி மற்றும் அதைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் இராணுவ வீரர்களல் இசைக்கப்படும் இப்பாடலை பாருங்கள்:

இந்த பாடலின் தமிழ் வரிகள்:

1. என்னோடிரும், என் நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் ஒத்தாசை அற்றுப் போயினும்,
நீர் மெய் சகாயரே என்னோடிரும்.

2. நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறிப் போயினும்,
மாறாத கர்த்தரே என்னோடிரும்.

3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்,
அப்போது தீமைக்கு நான் தப்புவேன்,
நீர் என் துணை என் பாதை காட்டியும்
என் இன்ப துன்பத்தில் என்னோடிரும்.

4. நான் அஞ்சிடேன், நீர் கூடத் தங்கினால்;
என் க்லேசம் மாறும் உம் ப்ரசன்னத்தால்,
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
என்றார வாரிப்பேன்; என்னோடிரும்.

5. இளமையில் என்மேல் பிரகாசித்தீர்
பின் வீம்பு கொண்டும்மை விட்டோடினும்,
நீர் என்னைக் கைவிடாதிருக்கிறீர்
முடிவு மட்டும் நீர் என்னோடிரும்

Words: H.F.Lyte in 1847
Music: William H.Monk in 1861 Tune: Eventide

இந்த பாடலின் ஆங்கில வரிகள்::

Hymn in English:
1. Abide with me; fast falls the eventide;
The darkness deepens; Lord, with me abide;
When other helpers fail and comforts flee,
Help of the helpless, oh, abide with me.

2. Swift to its close ebbs out life’s little day;
Earth’s joys grow dim, its glories pass away;
Change and decay in all around I see—
O Thou who changest not, abide with me.

3. I need Thy presence every passing hour;
What but Thy grace can foil the tempter’s pow’r?
Who, like Thyself, my guide and stay can be?
Through cloud and sunshine, Lord, abide with me.

4. I fear no foe, with Thee at hand to bless;
Ills have no weight, and tears no bitterness;
Where is death’s sting? Where, grave, thy victory?
I triumph still, if Thou abide with me.

வரலாற்றை மறைக்க முடியாதே.. குடியரசு தின விழாவை முன்னிட்டு பயனுள்ள ஒரு பதிவை பிறருக்கு பகிர்ந்து கொள்ள விரும்பினால் இககட்டுரையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Happy Republic Day 2021


Share this page with friends