கிறிஸ்தவம் மாய்மாலமே

Share this page with friends

“கிறிஸ்தவ மாய்மாலமே…”
“நீ முதலில் உன்னை திருத்திக்கொள்…”
“பின்னர் கர்த்தர் தேசத்திற்கு ஷேமத்தை கட்டளையிடுவார்…”

சாட்சியாய் வாழாதவன் தேசத்திற்காய் அழுகிறான்

பொய் உதடுகள் திறப்பில் நிற்கிறது…

பெற்றோரை அசட்டை செய்யும் பிள்ளை ஆலயத்தில் இசைக்கிறது…

குறுந்தாடி வைத்திருப்பதே
போதகர் என்பதற்கு முழு அடையாளம்…

இச்சையில் விழுந்து கிடக்கிறவன் போதிக்கிறான்..

அன்பு இல்லாத இருதயம் ஆலயத்தில் பாடுகிறது..

மனைவியை நேசிக்காதவன் ஆலயத்தில் ஆலோசனைக்காரன்..

விசுவாசிகளின் வரங்களை மூடிமறைக்க பார்க்கும் போதகரின் குடும்பம்.

கடன் வாங்க ஆலயம் வரும் குள்ளநரிகள்..

போதகர்களை குறை சொல்லும் குடிகாரன்…

நான் செல்வந்தன் என பெருமைக்காய் காணிக்கை செலுத்துபவன்…

மற்ற குடும்பத்தை குழப்பிவிடவே ஆலயத்திற்கு வரும் வஞ்சகர்கள்…

தன் பெயர் பிரஸ்தாபத்தை விரும்புகிறவன் சபையில் தீர்க்கதரிசி…

போதகருக்கு ஜால்ரா அடிப்பவன் மூப்பன்.

விசாரிக்கப்படாத ஏழைகள்…
பணக்காரன் வீட்டுக்கு ஓடிப்போய் விசாரிக்கும் போதகர் …

காணிக்கைகளை வாங்க புதிய புதிய திட்டம் வகுக்கும் பாஸ்டர் …

தசமபாகத்திற்கு மட்டும் எச்சரிப்பின் பிரசங்கம்….

தான் மட்டுமே புசித்து தெறிக்கும் அன்பின் விருந்து..

தேசத்திற்காய் கண்ணீரோடு திறப்பில் நிற்கிறார்கள்…
இவர்கள் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள்…

கிறிஸ்தவ மாயமாலமே!
நீ திருந்து…
தேசத்தின் நிந்தையை கர்த்தர் மாற்றுவார்…

[ Taken from “Whatsapp forward” for our thoughts ]


Share this page with friends