ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல்

Share this page with friends

ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல்

தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் செல்லும் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 500 கிறிஸ்தவர்கள் பயன்பெறும் வகையில் அரசின் நிதி உதவியாக தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

இப்பயணமானது மவுண்ட் ரோபா, பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் ஆகிய இடங்கள் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

இந்த திட்டம் கிறிஸ்தவ மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை 500-ல் இருந்து 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றில் 50 கன்னியாஸ்திரிகள், அருட் சகோதரர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டில் இத்திட்டத்திற்கென அரசின் நிதி உதவி ஒரு நபருக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்கி, அரசு ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் மருத்துவ உடற்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். 70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், அவருக்கு துணையாக அவர் விரும்பும் நபர் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பபடிவம்http://www.bcmbcmw.tn.gov.in/form/jerusalem என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலச மகால், பாரம்பரியக்கட்டடம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து கிறிஸ்தவர்கள் பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் கடலூா் மாவட்ட கலெக்டா் சந்திரசேகா் சாகமூாி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் வாசித்தவை:

கரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக ...
பிரசங்க குறிப்பு: பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்டவர்கள்
மங்கியெரிகிற திரி!
போப்பை கட்டித்தழுவி அன்பை பகிர்ந்த பிரதமர் மோடி - வைரலாகும் புகைப்படங்கள்
ஊழியம் என்பது..?
பரிசுத்த அலங்காரம்!
எய்ட்ஸ் (எச்ஐவி - HIV) நோயினால் மடியும் ஊழியக்காரர்களும் அதனால் சீரழியும் அவர்கள் குடும்பங்களும்
தேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே!
இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையே சொர்க்கம்
முதியோர், மாற்று திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் தலைமை செயலாளருக்கு உலக தமிழ் கிற...

Share this page with friends